தஞ்சையில் காணாமல் போன 300ஆண்டு புராதன தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

லண்டன்: தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் இருந்து திருடப்பட்ட பழமையான தமிழ் பைபிள், லண்டனில் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழில் முதலில் மொழிபெயர்க்கப்பட்ட 300ஆண்டு பழமையா புதியஏற்பாடு என்ற அந்த புராதன பைபிள், தற்போது லண்டனில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தஞ்சை சரஸ்வதி மகால் மியூசியத்தில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த சீகன்பால்க் என்பவர், நாகையில் புதிய ஏற்பாடு பைபிளை முதன்முறையாக தமிழில் மொழி பெயர்த்தார். இந்த பைபிளில் தஞ்சை மன்னராக இருந்த சரபோஜி மன்னரின் கையெழுத்திட்டிருந்தார். சுமார்  300 … Read more

‘டிபேட்’ விவகாரம்: ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சி ஊடகத்தை கடுமையாக சாடிய உச்சநீதி மன்றம்…

சென்னை: நூபுர் சர்மா விவகாரத்தில், சர்ச்சைக்குரிய வகையில்  கியான்வாபி மசூதி தொடர்பாக விவாதம் நடத்திய டைம்ஸ்நவ் ஊடகத்துக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கண்டனங்களை தெரிவித்ததுடன், இதுபோன்ற சர்ச்சைக்குரிய விவாதங்களை நடத்திய ஊடகவியலாளர் மீதுதான் முதலில் வழக்கு பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் கூறியது. சமீப காலமாக தொலைக்காட்சி ஊடகங்களில் ‘டிபேட்’ என்ற பெயரில் சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்பி, அதனால், நாட்டு மக்களிடையே வெறுப்புணர்வு, சர்ச்சைகளை ஏற்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. ஊடகங்கள், தங்களின் வளர்ச்சிக்காக இதுபோன்ற சர்ச்சைகளை எழுப்பி … Read more

அதிமுக ஆட்சியில் கூட்டுறவுதுறையில் ரூ.750 கோடி மோசடி! அமைச்சர் ஐ.பெரியசாமி

சென்னை: அதிமுக ஆட்சியில் கூட்டுறவுதுறையில் ரூ.750 கோடி மோசடி நடைபெற்றுள்ளது தெரிய வந்துள்ளது என கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். கடந்த அதிமுக ஆட்சியின்போது, கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்தவர் செல்லூர் ராஜு. அவரது தலைமையின் கீழ் கூட்டுறவுத்துறையில்  பல மோசடிகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், கூட்டுறவுத்துறையின் ஊழல்கள் கண்டு பிடித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பெரியாசமி கூறியிருந்தார். இந்த நிலையில், இன்று திண்டுக்கல்லில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ. … Read more

கொரோனா அதிகரிப்பு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்தைத் தொடர்ந்து அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது. இந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பரவல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. இது கொரோனாவில் 4வது அலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், தொற்று பரவலை … Read more

ஜூலை 5ந்தேதி தமிழகம் முழுவதும் பாஜக உண்ணாவிரத போராட்டம்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை  கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும்  வரும் 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். தி.மு.க. அரசு தேர்தலின்போது  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். மக்கள் … Read more

எம்.பி.க்களின் கடந்த 5ஆண்டு ரயில் பயண செலவு எவ்வளவு தெரியுமா?

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள், இந்நாள் எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி என இந்திய ரயில்வே தெரிவித்து உள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியே தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) ரெயில்களில் முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களின் துணையும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த இலவசத்தை பெற முடியும். இதைப்போல முன்னாள் எம்.பி.க்கள் 2-ம்வகுப்பு ஏ.சி. வகுப்பில் தனது துணையுடனோ அல்லது … Read more

நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிப் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவை இன்று முதல தண்டனைக்குரிய குற்றமாகும். தடை செய்யப்பட்ட பொருள்களில் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க தேசிய மற்றும் மாநில எல்லைகளில் சோதனைசாவடிகளை அமைத்து தடை செய்யப்பட்ட பொருள்கள் மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு … Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை, சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில்

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் ராமரின் தூதனான அனுமன். இவர் ஒரு முறை ராமர் தந்த மோதிரத்துடன் சீதையை தேடி வானர வீரர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டு செல்கிறார். பசி, தாகத்தால் வானர வீரர்கள் களைப்படைந்த போது அவர்கள் கண்ணுக்கு ஒரு விசித்திரமான குகை ஒன்று தென்பட்டது. அந்த குகைக்குள்ளேயிருந்து தண்ணீரில் நனைந்தபடி பறவைகள் வருவதை பார்த்து விட்டு … Read more