ஜூலை 5ந்தேதி தமிழகம் முழுவதும் பாஜக உண்ணாவிரத போராட்டம்!

சென்னை: முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசின் நடவடிக்கைகளை  கண்டித்து அனைத்து மாவட்டங்களிலும்  வரும் 5-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்து உள்ளார். தி.மு.க. அரசு தேர்தலின்போது  கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிவிட்டதாக பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்த நிலையில் தி.மு.க. அரசை கண்டித்து வருகிற 5-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர். மக்கள் … Read more

எம்.பி.க்களின் கடந்த 5ஆண்டு ரயில் பயண செலவு எவ்வளவு தெரியுமா?

டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் முன்னாள், இந்நாள் எம்.பி.க்களின் ரெயில் பயண செலவு ரூ.62 கோடி என இந்திய ரயில்வே தெரிவித்து உள்ளது. இது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் வெளியே தெரிய வந்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பி.) ரெயில்களில் முதல் வகுப்பு ஏ.சி. வகுப்பில் இலவசமாக பயணம் செய்யலாம். அவர்களின் துணையும் சில நிபந்தனைகளின் பேரில் இந்த இலவசத்தை பெற முடியும். இதைப்போல முன்னாள் எம்.பி.க்கள் 2-ம்வகுப்பு ஏ.சி. வகுப்பில் தனது துணையுடனோ அல்லது … Read more

நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை

புதுடெல்லி: நாடு முழுவதும் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல் தடை விதிக்கப்படுகிறது. சுற்றுச்சூழலுக்கும், கடற்சார் பகுதிகளுக்கும் தீங்கு விளைவிக்கும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிப் பொருட்களை தயாரித்தல், விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் போன்றவை இன்று முதல தண்டனைக்குரிய குற்றமாகும். தடை செய்யப்பட்ட பொருள்களில் விற்பனை மற்றும் பயன்பாட்டை தடுக்க தேசிய மற்றும் மாநில எல்லைகளில் சோதனைசாவடிகளை அமைத்து தடை செய்யப்பட்ட பொருள்கள் மாநிலங்களுக்கு இடையே எடுத்துச் செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு … Read more

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை, சில இடங்களில், இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பு- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த கடந்துள்ளது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில்

ஜெயவீர அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோவில், திருநெல்வேலி மாவட்டம், கிருஷ்ணாபுரம் என்ற ஊரில் அமைந்துள்ளது. யாராலும் சாதிக்க முடியாத காரியங்களை சாதிக்கும் சக்தி பெற்றவர் ராமரின் தூதனான அனுமன். இவர் ஒரு முறை ராமர் தந்த மோதிரத்துடன் சீதையை தேடி வானர வீரர்களுடன் தெற்கு நோக்கி புறப்பட்டு செல்கிறார். பசி, தாகத்தால் வானர வீரர்கள் களைப்படைந்த போது அவர்கள் கண்ணுக்கு ஒரு விசித்திரமான குகை ஒன்று தென்பட்டது. அந்த குகைக்குள்ளேயிருந்து தண்ணீரில் நனைந்தபடி பறவைகள் வருவதை பார்த்து விட்டு … Read more

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் முக்கிய விவகாரங்களில் கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க ஆலசோனை

காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மனிஷ் திவாரி எம்.பி. மற்றும் ஆச்சார்யா பிரமோத் கிஷன் ஆகியோர் தெரிவித்திருந்த கருத்துகள் கட்சி நிர்வாகிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியதை அடுத்து அவர்களுக்கு கட்சி நிலைப்பாட்டுக்கு எதிராக பேசுவதை தவிர்க்க ஆலசோனை வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அக்னிபாத் மற்றும் உதய்பூர் சம்பவம் தொடர்பாக இந்த இருவரும் வெளியிட்ட கருத்து கட்சி நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணாக இருந்ததை அடுத்து அவர்களுக்கு ஆலோசனை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. காங்கிரஸ் எம்.பி. மனிஷ் திவாரி எழுதியிருந்த கட்டுரை … Read more

நீதிமன்ற உத்தரவு எதிரொலி: 210 ஆர்டர்லிகளை திரும்பப் பெற்றதாக டிஜிபி தகவல்…

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு காரணமாக, போலீஸ் உயர் அதிகாரிகள் வீடுகளில் வேலை செய்த 210 ஆர்டர்லிகள் திரும்பப் பெற்றுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்து உள்ளார். தமிழக காவல்துறையில் உயர் அதிகாரிகளின் வீடுகளில் பணியாற்றும் வகையில், காவல்துறை பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களில் சிலர்,  `ஆர்டர்லி’ என்ற  முறையில் உயர்அதிகாரிகளின் வீடுகளில் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இந்த நடைமுறை  பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது. ஆர்டரியின் பணியானது, உயர்அதிகாரிகளின்  போன் அழைப்புகளுக்கு பதிலளிப்பது, சீருடைகளைப் பராமரிப்பது, உயரதிகாரிகளின் … Read more

இரண்டாயிரத்தை தாண்டியது…. தமிழ்நாட்டில் இன்று 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு… சென்னையில் 909 பேருக்கு பாதிப்பு…

தமிழ்நாட்டில் இன்று புதிதாக 2069 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 909, செங்கல்பட்டில் 352, திருவள்ளூரில் 100 மற்றும் காஞ்சிபுரத்தில் 71 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்திருக்கிறது. கோவை 96, திருச்சி 62, கன்னியாகுமரி 61, திருநெல்வேலி 46, மதுரை 41, தூத்துக்குடி 38, சேலம் 28, ஈரோடு மற்றும் சிவகங்கையில் தலா 24 பேருக்கும், ராணிப்பேட்டை 22, விழுப்புரம் 18, திருப்பூர் 16, விருதுநகர் மற்றும் தென்காசியில் தலா 14 பேருக்கும், … Read more

கொசு மருந்து தெளிக்கும் டிரோன் ஆபரேட்டர்களாக திருநங்கைகள் நியமனம்! சென்னை மாநகராட்சி

சென்னை: கொசு மருந்து தெளிக்கும் டிரோன் ஆபரேட்டர்களாக திருநங்கைகளை நியமிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் இந்த நியமனம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சென்னையில் அதிகரித்து வரும் கொசுத்தொல்லையை கட்டுப்படுத்த, டிரோன்கள் மூலம் கொசு மருந்தை தெளிக்கும்  பணிகள் கடந்த அண்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதற்கான தனியார் நிறுவனங்கள் மூலம் செயல்படுத்தபபட்டது. அதன்படி,சென்னையில் உள்ள 5 முக்கிய கால்வாய்களிலும், 31 சிறிய கால்வாய்களிலும் கொசு மருந்து டிரோன் மூலம் தெளிக்கப்படுகிறது. … Read more