முதல்வர் பதவி: பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஃபட்நாவிசுக்கு நன்றி தெரிவித்த ஏக்நாத் ஷிண்டே…

மும்பை: உத்தவ் தாக்கரே அரசு கவிழ்ந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்திருந்த நிலையில், திடீர் திருப்பதாக, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவியேற்பார் என பாஜக முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சிவசேனா கட்சியின் அதிருப்தி  தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தன்னை முதல்வராக பதவி ஏற்க அனுமதி வழங்கிய பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமித்ஷாவுக்கு மற்றும் … Read more

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா சந்திப்பு

சென்னை: எதிர்க்கட்சிகளின்  குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான  மு.க.ஸ்டாலினை சந்தித்தார். அப்போது, தேர்தலில் தனக்கு வாக்களிக்கும்படி ஆதரவு கோரினார். குடியரசு தலைவர் தேர்தல் அடுத்த மாதம் (ஜூலை)  18ஆம் தேதி நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து பாஜக கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும், ஜார்க்கண்ட்  மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் … Read more

மகாராஷ்டிரா மாநில புதிய முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே…. இன்று இரவு பதவி ஏற்பு…

மும்பை: மகாராஷ்டிரா புதிய முதல்வராக அதிருப்தி எம்எல்ஏக்களின் தலைவரான முன்னாள் அமைச்சர்  ஏக்நாத் ஷிண்டே இன்று இரவு 7.30 மணி அளவில் பதவி ஏற்கிறார். பாஜக ஆதரவுடன் அவர் ஆட்சி அமைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 3வது முறையாக முதல்வராக பதவி ஏற்கும் ஆசையில் இருந்த பட்னாவிஸ் ஆசை, நிராசையாகி போனது. இதனால் அவர் ஆட்சி பொறுப்பில் இருந்து விலகி இருப்பதாக தெரிவித்து உள்ளார். உத்தவ்தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா கட்சியின் பெரும்பாலான எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர் ஏக்நாத் … Read more

முதல்வர் ஸ்டாலினை சந்திக்க சென்னை வந்தார் எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா!

சென்னை: குடியரசு தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும்  பொது வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். அவரை திமுக எம்.பி.க்கள் வரவேற்றனர். இன்று மாலை முதல்வர் ஸ்டாலினை சந்திக்கிறார். நாட்டின் புதிய குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு விட்டன. அடுத்த மாதம் 18-ந்தேதி நடைபெற இருக்கிறது. எதிர்க்கட்சிகளின் சார்பில் பொதுவேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில், மாநில கட்சிகளின் தலைவர்களை சந்தித்து … Read more

பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி உயர்வு! விவசாய துறையை பாதிக்கும் என உற்பத்தியாளர்கள் அதிருப்தி…

கோவை: ‘பம்ப்செட்களுக்கான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டு இருப்பதற்கு, கோவையில் உள்ள பம்புசெட் தயாரிப்பாளர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். மேலும், இந்த உயர்வால் விவசாய துறை பாதிக்கும் என்றும் எச்சரித்துள்ளனர். 2நாட்கள் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் 28, 29ந்தேதி ஆகிய இருநாட்கள் நடைபெற்றது. இதையடுத்து, ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து  நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதன்படி, பள்ளி குழந்தைகள் உபயோகப்படுத்தும் பொருட்கள் உள்பட, சூதாட்ட விடுதிகள், ஆன்லைன் கேமிங், குதிரைப் பந்தயம், … Read more

குடியரசு தலைவர் தேர்தல்: திரௌபதி முர்மு, யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுக்கள் சரியாக உள்ளதாக தகவல்..

டெல்லி: குடியரசு தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெற்றது. அதில்,  தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவின் வேட்புமனுக்கள்  சரியாக உள்ளதாகவும், அதனால் அவை ஏற்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவின் 14வது குடியரசுத் தலைவராக தற்போதுள்ள  ராம்நாத் கோவிந்த்பதவிக் காலம், வரும் ஜூலை மாதம் 24 ஆம் தேதி முடிவடைகிறது. இதையடுத்து, நாட்டின் 15வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், அடுத்த … Read more

கருப்பு உடையணிந்து டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்திய ஸ்டாலின் அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கலாமா? கமல்ஹாசன்

சென்னை: கடந்த ஆட்சியின்போது,  கருப்பு உடையணிந்து டாஸ்மாக்குக்கு எதிராக போராட்டம் நடத்திய ஸ்டாலின், தற்போது அரசின் வருமானத்திற்காக மக்களை பலி கொடுக்கலாமா? என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்து உள்ளார். புதிதாக திறக்கப்படும் டாஸ்மாக் கடைகளை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ள கமல்ஹாசன், ஆட்சி மாறினாலும், காட்சி மாறவில்லை’ என்றும் விமர்சித்துள்ளார். இதுகுறித்து மக்கள்  நீதி மய்யத்தின் மாநிலச் செயலாளர்  செந்தில்ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,   தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளின் … Read more

தற்காலிக ஆசிரியர்கள் பணி நியமனம் நிறுத்தம்?

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள இடைக்கால ஆசிரியர் பணி நியமனத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலும், மதுரை ஐகோர்ட்டு கிளையும், காலி பணியிடங்களுக்கு தற்காலிக ஆசியர்களை நிரப்பும் செயல் ஆபத்தானது என விமர்சித்துள்ளது.  இந்த நிலையில்,  இடைக்கால ஆசிரியர்களை நியமனம் செய்யும் பணியை உடனடியாக நிறுத்துமாறு பல்வேறு மாவட்ட பள்ளிகளுக்கு வாய்மொழியாக  உத்தரவிட்டப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் 13,331 காலிப்பணியிடங்கள் உள்ளது. இடைநிலை ஆசிரியர்பணியில் 4,989  பணியிடமும், பட்டதாரி ஆசிரியர் களில் 5,154 … Read more

பா.ஜ.க. ஊராட்சி மன்றத் தலைவி முறைகேடு? அதிரடியாக தகுதி நீக்கம் செய்த பழனி ஆட்சியர்…

பழனி: பா.ஜ.க. ஊராட்சி மன்றத் தலைவி முறைகேடு செய்தது தெரிய வந்த நிலையில்,அவரை அதிரடியாக தகுதி நீக்கம் செய்த பழனி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பழனி அடுத்த  புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத்தின் தலைவியாக பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்த செல்வராணி இருந்து வந்தார். இந்த ஊராட்சியில் மொத்தம் 12 வார்டுகள் உள்ளன.  இந்தநிலையில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே பிரச்சினை இருப்பதாகவும், இதனால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக … Read more

ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

ராணிப்பேட்டை: இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை  புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்தார். 2நாள் நிகழ்ச்சியாக திருப்பத்தூர், வேலூர், மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை திருப்பத்தூரில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். நேற்று காலை, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்து வைத்ததுடன்,  16,820 பயனாளிகளுக்கு ரூ.103.42 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை திருப்பத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில் வழங்கினார். .இதனைத் … Read more