2019ம் ஆண்டு சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவி வழங்க மறுத்தது ஏன்? உத்தவ்தாக்கரே கேள்வி

மும்பை: மும்பையில் மீண்டும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ, பாஜக ஆதரவுடன் முதல்வராகி உள்ள நிலையில், கடந்த 2019ம் ஆண்டு மட்டும் சிவசேனாவுக்கு முதல்வர் பதவி வழங்க பாஜக மறுத்தது ஏன் என  பாரதிய ஜனதா தலைமைக்கு முன்னாள் முதல்வரும், சிவசேனா தலைவருமான  உத்தவ்தாக்கரே கேள்வி எழுப்பி உள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களைத் தொடர்ந்து, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் முதல்வராக பதவி ஏற்றுள்ளார். முன்னாள் முதல்வரான பாஜகவை சேர்ந்த தேவேந்திர … Read more

உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினம்: பெசன்ட் நகர் கடற்கரையில் பின்னோக்கி ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்திய அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: உலக பிளாஸ்டிக் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பின்னோக்கி ஓடும் ஓட்டம் நடை பெற்றது. இதில் கலந்துகொண்டு ஓடிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,  தமிழ்நாட்டில்  பிளாஸ்டிக்கை ஒழிக்க முதலமைச்சர் எடுத்துள்ள மிகப்பெரிய முயற்சி தான் மீண்டும் மஞ்சப்பை திட்டம் என்று கூறினார். இன்று பெசன்ட் நகர் கடற்கரையில் International Plastic bag free day யை முன்னிட்டு “REVERSE RUN” துவக்கி வைக்கப்பட்டது. அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டு, பொதுமக்களுடன் பினோக்கி ஓடி … Read more

02/07/2022: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு, 29 பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல் ஏற்றம் இறக்கமாக காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் முக்கவசம் அணிந்து சமூக இடைவெளிகளை கடைபிடிக்கவும், தடுப்பூசி எடுத்துக்கொள்ளவும் மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், மத்திய சுகாதாரத்துறை இன்று காலை 8மணி வரையிலான கொரோனா நிலவரம் தொடர்பாக வெளியிட்டுள்ள தகவலில், நேற்று மட்டும்  புதிதாக மேலும், 17,092 … Read more

ஈரானில் இன்று அதிகாலை 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 5 பேர் பலி

ரியாத்: ஈரான் உள்பட வளைகுடா நாடுகளில் இன்று அதிகாலை  நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமான ஈரானில் 5.7 முதல் 6.0 ரிக்டர் அளவுகோலில் இருந்தாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. சக்தி வாய்ந்த இந்த நடுக்கதால் 5 பேர் பலியாகி உள்ளதாகவும், 20க்கும் மேற்பட்டோர்  காயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஈரான்  நாட்டின் ஹார்மோஸ்கான் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான பந்தர் அப்பாஸின் தென்மேற்கில் 100 கிலோமீட்டர் (60 மைல்) தொலைவில் இன்று அதிகாலை   சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. … Read more

முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும்: ராகுல் காந்தி

திருவனந்தபுரம்: முகமது நபிகள் குறித்து நுபுர் சர்மா தெரிவித்த கருத்துக்கு பிரதமர் மோடியும் பொறுப்பேற்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் பேசிய பாஜக பெண் செய்தித்தொடா்பாளா் நூபுா் சா்மா, நபிகள் நாயகம் குறித்து ஆட்சேபத்துக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, நுபுர் சர்மாவின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்த விவகாரம் கடும் விமர்சனத்துக்குள்ளான நிலையில், டெல்லி பாஜகவை சேர்ந்த நவீன்குமார் ஜிண்டாலும் ட்விட்டரில் … Read more

தெற்கு ஈரான், சீனாவில் நிலநடுக்கம்

சின்ஜியாங்: தெற்கு ஈரான் மற்றும் சீனாவின் சின்ஜியாங் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஈரானில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.0 என்றும், சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 4.3 என்றும் பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 8 பேர் படுகாயமடைந்து உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.

திரெளபதி முர்மு இன்று சென்னை வருகை

சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சென்னை வர உள்ளார். நடைபெற உள்ள குடியரசுத் தலைவா் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜாா்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநா் திரௌபதி முா்மு அறிவிக்கப்பட்டுள்ளாா். கடந்த 25-ஆம் தேதி பிரதமா் மோடி தலைமையில் தனது வேட்புமனுவையும் முா்மு தாக்கல் செய்தாா். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் திரௌபதி முர்மு ஆதரவு திரட்டுவதற்காக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அனைத்து … Read more

ஜூலை-02: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னை: சென்னையில் 42-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இன்றி விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னையில் இன்று 42-வது நாளாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் ரூ.94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தற்காலிக ஆசிரியர் நியமனத்துக்கு இடைக்காலத் தடை! உயர்நீதி மன்றம்

மதுரை: தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான தமிழக அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்து உள்ளது. இந்த விவகாரம் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ள நிலையில், நேற்றே, பள்ளிக்கல்வித்துறை தற்காலிக ஆசிரியர் பணி நியமனத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுஉள்ளது. ஆசிரியர் தகுதித்தேர்வான டெட் தேர்வில் வெற்றி பெற்று இதுவரை பணி கிடைத்தவர்களின் சங்கத்தலைவர் ஷீலா பிரேம்குமாரி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனுவில், நாங்கள் ஏற்கனவே தகுதி தேர்வில் வெற்றி … Read more

ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பின் 25 சதவீத தொழில் நிறுவனங்கள் மூடல்

2017 ம் ஆண்டு ஜூலை மாதம் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து குஜராத்தில் மட்டும் இதுவரை சுமார் 2.75 லட்சம் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களை மூடியுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. குஜராத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த புள்ளிவிவரத்தில், 11.1 லட்சம் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி. யில் பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதார மந்தநிலை ஆகிய காரணங்களால் 2.75 லட்சம் நிறுவனங்கள் மூடப்பட்டதாக ஜி.எஸ்.டி. தெரிவித்துள்ளது. இது வரி செலுத்துவோரில் சுமார் நான்கில் ஒரு பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. … Read more