தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலில், தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் வலுவிழந்து தமிழ்நாட்டை நோக்கி நகர்வதால் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று குறிப்ப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில், சென்னையில் அடுத்த 12 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் … Read more

பாலோ ஆன் : ரவீந்திர ஜடேஜா-வின் டிக்ளர் முடிவால் இலங்கை அணியை 174 ரன்களில் சுருட்டியது இந்தியா

இலங்கைக்கு எதிராக மொஹாலியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 174 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இலங்கை அணி நேற்று இரண்டாவது நாள் ஆட்ட நேர இறுதியில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் எடுத்திருந்தது. இன்று காலை ஆட்டம் மீண்டும் துவங்கியதும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இலங்கை 66 ரன்கள் மட்டுமே சேர்த்து … Read more

தமிழகத்தை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வுப்  பகுதி : மழை எச்சரிக்கை

சென்னை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகத்தை நோக்கி நகர்வதால்  கடலோர மாவட்டங்களில் 3 நாட்கள் மழை பெய்யலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நேற்று மாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று மாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடதமிழக கடலோரப் பகுதியில் இருந்து சுமார் 300 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. இது  அடுத்த 36 மணி நேரத்தில் தமிழக கடற்கரையை நோக்கி இது … Read more

பொதுமக்கள் தெருநாய்களுக்கு உணவளிக்க உச்சநீதிமன்றம் தடை

டில்லி பொதுமக்கள் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களுக்கு உணவளிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. நாடெங்கும் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படுவது அதிகரித்து வருகிறது.    தற்போது விலங்கியல் ஆர்வலர்களின் வலியுறுத்தல் காரணமாக இவற்றை உள்ளாட்சி அமைப்புக்கள் பிடித்துச் செல்வது அடியோடு நின்றுள்ளதாகவும் இதனால் மக்களுக்கு ஆபத்து அதிகரித்துள்ளதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதையொட்டி டில்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடரப்பட்டது   வழக்கு விசாரணையின் போது பொது மக்கள் தெருநாய்களுக்கு பொது இடங்களில் உணவளிப்பதால் அவை … Read more

பொறியியல் மாணவர்களுக்கு நேரடி செமஸ்டர் தேர்வு! அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு…

சென்னை: பொறியியல் மாணவர்களுக்கு  நேரடி செமஸ்டர் தேர்வு தேதிகள் மற்றும் அடுத்த கல்வியாண்டுக்கான கல்லூரி திறப்பு குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா ஊரடங்கு காரணமாக மூடப்பட்ட கல்லூரிகள் பின்னர் ஆன்லைன் மூலம் பாடங்களையும் செமஸ்டர் தேர்வுகளையும் நடத்தி வருகிறது. பின்னர் தொற்று குறைந்தவுடன் நேரடி வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஆனால், பொறியியல், பாலிடெக்னிக்  மற்றும் கலை, அறிவியல் மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைன் வழியாகவே நடைபெற்று வருகின்றன. பின்னர் மார்ச் 7-ம் … Read more

‘ஒன்-வே ஒன்லி’ – மார்ச் 8 முதல் சர்வதேச விமான போக்குவரத்தை நிறுத்த ரஷ்ய விமான நிறுவனங்கள் முடிவு

மார்ச் 8 முதல் சர்வதேச விமான போக்குவரத்தை ரஷ்ய விமான நிறுவனங்கள் நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளதை அடுத்து நாளை முதல் ரிட்டர்ன் டிக்கெட் வைத்திருப்பவர்கள் ரஷ்ய விமானத்தில் பயணம் செய்ய முடியாது. ரஷ்ய விமான நிறுவனமாக ஏரோபிளோட் விமானத்தில் ரிட்டர்ன் டிக்கெட் வைத்துள்ள சர்வதேச பயணிகள் மார்ச் 6 ல் இருந்து அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறியுள்ளது. மார்ச் 8 முதல் அனைத்து சர்வதேச விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப் போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு போக்குவரத்தில் எந்த வித … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கேபினட் கூட்டம் நிறைவடைந்தது…!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில்  ,இன்று மாலை 6மணி அளவில் தொடங்கி அமைச்சரவை கூட்டம் இரவு 7மணி அளவில் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்  வரைவு  அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட இருப்பதாக தகவல் வெளியானது. மேலும்,  தமிழ்க தொழில் வளர்ச்சி , மின்விநியோகத்திட்டம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளதாக உள்ளதாகவும் , நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்காக  சட்டப்பேரவை கூட்டுவது … Read more

உ.பி.யில் 7ந்தேதி 7வது கட்ட இறுதி வாக்குப்பதிவு: மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது…

லக்னோ: உத்தரபிரதேச சட்டசபைக்கான 7வது கட்ட தேர்தல் வரும் 7ந்தேதி (நாளை மறுதினம் – திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. இது இறுதிக்கட்ட தேர்தல் ஆகும். இதையொட்டி, தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5மணியுடன் முடிவடைந்தது. தேர்தல் முறைகேடுகளை தடுக்க தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளில் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 6 கட்டங்களாக தேர்தல்  வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில்,  7வது கட்ட வாக்குப்பதிவு  … Read more

05/03/2022 7.30 PM: தமிழ்நாட்டில் இன்று மேலும் 223 பேருக்கு கொரோனா பாதிப்பு ..!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று மேலும் 223 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல்  குறைந்து வருகிறது. தொற்று பரவலை முற்றிலுமாக ஒழிக்க தடுப்பூசி போடும் பணியையும் தமிழக அரசு தீவிரமாக செயல்படுத்தி வருகிறது. இதனால் தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது.  தமிழகத்தில் நேற்று கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 261 ஆக இருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 223  ஆக குறைந்துள்ளது. … Read more

கபில்தேவின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளான இன்று இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்புக்கு 574 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. மொஹாலியில் நடைபெறும் இந்த போட்டியில் நேற்று முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 45 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்த ரவீந்திர ஜடேஜா இன்று தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார் முதல் இன்னிங்ஸ் முடிவில் 228 பந்துகளில் 175 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். … Read more