பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா: கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் நீட்டிப்பு…

டெல்லி: பிரதமர், முதல்வர்களை நீக்கும் மசோதா  கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில்,  கூட்டுக்குழு அறிக்கை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. பாஜக தலைமையிலான மத்திய அரசு, அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா, 2025 போன்ற சட்டங்களை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது. அதாவது, பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர் அல்லது அமைச்சரை கைது செய்து 30 நாட்கள் காவலில் வைத்திருக்கும் எந்தவொரு பிரதமர், முதலமைச்சர், மத்திய அமைச்சர் அல்லது அமைச்சரையும் பதவியில் இருந்து நீக்க முடியும். அதற்காக அரசியலமைப்பு (130வது … Read more

இன்று மாலை வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்…

சென்னை: தமிழ்நாட்டில், வரைவு வாக்காளர் பட்டியல் இன்று மாலை வெளியாகும் என தேர்தல் ஆணையம்அறிவித்துள்ளது. தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று (வெள்ளிக்கிழமை)  மாலை 5.30  மணிக்கு வெளியிடுகிறார். இன்று வெளியாகும் வரைவு வாக்காளர் பட்டியலில்,  97 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாக்காளர் பட்டியல் பெயர் இருக்கிறதா என்பதை, voters.eci.gov.in இணையதளத்தில், வாக்காளர் அடையாள அட்டை எண் Enter செய்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. … Read more

இன்று அனுமன் ஜெயந்தி: 1,00,008 வடைமாலை அலங்காரம் அருள்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்…

நாமக்கல்: இன்று அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயகர் சுவாமிக்கு  1,00,008 வடைமாலை அலங்காரம்  செய்யப்பட்டு உள்ளது.   வடைமாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் நாமக்கல் ஆஞ்சநேயர்… அனுமன் ஜெயந்தியை முன்னி  திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் நாமக்கல் ஆஞ்சனேயர் கோவிலில்  சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மார்கழி மாதத்தில் வரும் ஹனுமன் ஜெயந்தி மிகவும் சிறப்புக்குரிய நாளாகும். இந்த நாளில் அனுமனை சரியான முறையில் வழிபட்டால் அவரது அருளை முழுவதுமாக பெற முடியும். மார்கழி மாத அமாவாசை, … Read more

டாஸ்மாக் முறைகேடு தொடர்பான 41 வழக்குகளை சிபிஐக்கு மாற்றக்கோரி வழக்கு!

சென்னை: டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த டில்லிபாபு என்பவர் தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை அதிகவிலைக்கு விற்பனை செய்தது, பார் உரிமம் வழங்கியது உள்ளிட்டவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக, கடந்த 2017 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த 41 வழக்குகளின் விசாரணையை சிபிஐக்கு மாற்றக்கோரி,  வழக்கு தாக்கல் … Read more

நீதிமன்ற விசாரணைக்கு செந்தில்பாலாஜி நேரில் ஆஜராகத்தான் வேண்டும்! நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கின் நீதிமன்ற விசாரணக்கு  செந்தில் பாலாஜி நேரில் ஆஜராகித் தான் ஆக வேண்டும்  என சென்னை  முதன்மை அமர்வு  நீதிமன்றம் அதிரடியாக கூறி உள்ளது. இது செந்தில்பாலாஜி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திமுகவைச் சேரந்த  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதப் பணப்பரிமாற்ற நடவடிக்கைகளில் ஈடுப்பட்டதாகக் கூறி அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை முதன்மை அமர்வு … Read more

ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! முதலமைச்சர் ஸ்டாலின் காட்டம்…

சென்னை: ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் மத்திய பா.ஜ.க அரசுக்கு ஒத்து ஊதுகிறார் பழனிசாமி! மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என  ஜி ராம் ஜி திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக விமர்சனம் செய்துள்ளார். மக்களை காக்க குரல் தரச் சொன்னால் டெல்லியை குளிர்விக்க அறிக்கை விட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காட்டமாக தெரிவித்துள்ளார்.  தனது ஒனர் பாஜக செய்தது சரியென்றால் வெளிப்படையாக ஜி … Read more

ஜனவரி 1 முதல் டெல்லியில் பாரத் டாக்சி அறிமுகம் – விரைவில் மற்ற மாநிலங்களில்…! மத்திய அரசு தகவல்!

டெல்லி:  ஜனவரி 1 முதல் டெல்லியில் பாரத் டாக்சி அறிமுகம்  செய்யப்படுகிறது.  இது மத்திய அரசின் துறையின்கீழ் செயல்பட உள்ளது. இந்த திட்டம்   விரைவில் மற்ற மாநிலங்களிலும் செயல்படுத்த மத்தியஅரசு திட்டமிட்டு உள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள  ஓலா, ஊபர், ராபிடோ  போன்ற   நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்களை சேர்ந்த சேவை வாகனங்கள் மீது,  அவ்வப்போது கட்டண உயர்வு, சேவை முறைகேடு என புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அதற்கு  மாற்றாக  மத்தியஅரசு ஜனவரி 1ஆம் … Read more

2026 சட்டமன்ற தேர்தல் அறிக்கை: கனிமொழி எம்.பி. தலைமையில் 12 பேர் குழு அமைத்தது திமுக தலைமை…

சென்னை: 2026 நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக அறிக்கை தயாரிக்கும் பணியில், திமுக எம்.பி.  கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை திமுக தலைமை அமைத்துள்ளது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள  சட்டப்பேரவைத் தேர்தலுக்கான, தேர்தல்  அறிக்கை தயாரிக்க, கனிமொழி எம்.பி., தலைமையில் 12 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.   இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்  வெளியிட்டார். அதில், தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் பழனிவேல் தியாகராஜன், … Read more

அதிமுக அழுத்தத்தால்தான் திமுக அரசு லேப்டாப் கொடுப்பதாக அறிவித்துள்ளது! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: திமுக அரசு லேப்டாப் கொடுப்பதாக அறிவித்துள்ளது என்றும்,  அதிமுக ஆட்சிக்கு வந்ததும் மாணவர்களுக்கு மீண்டும் லேப்டாப்  வழங்கப்படும் என சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற  மாணவர்களுடனான சந்திப்பில்  கலந்துகொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உறுதி தெரிவித்தார். அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச அம்மா லேப்டாப் வழங்கப்பட்டது. அத்திட்டத்தால் பயனடைந்த மாணவர்கள் மற்றும் திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் லேப்டாப் கிடைக்காத மாணவர்கள், அம்மா லேப்டாப்பை உறவினர்களிடம் இருந்து பெற்று … Read more

எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவி – கொளத்தூர் வந்தாலே புத்துணர்ச்சி! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு வந்தாலே எனக்கு புத்துணர்ச்சி வந்து விடுகிறது என கூறிய முதல்வர் ஸ்டாலின்,  எனது வெற்றிக்கு பின்னால் எனது மனைவிதான்  என்றவர், கொளத்தூர் தொகுதியை பார்க்கும் போது அமைச்சர்களுக்கே பொறாமை  வந்துவிடும் என்றார். “கொளத்தூர் என்று சொன்னாலே அது ‘சாதனை’, இல்லையென்றால் ‘ஸ்டாலின்’ என்று நினைவுக்குவரும் அளவுக்கு இந்த தொகுதியில் இரண்டறக் கலந்திருக்கிறேன்  என  நெகிழ்ச்சியுடன் கூறினார். கொளத்தூரில் ரூ.25.72 கோடி செலவில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகையை திறந்து வைத்த பிறகு முதல்வர் … Read more