இந்தோனேசியாவில் அரசுக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறியதால் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சலுகைகள் ரத்து…

இந்தோனேசியாவில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட நிதி சலுகைகளுக்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், வன்முறையாக மாறி, ஆறு பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, ஜகார்த்தா உட்பட பல நகரங்களில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழகிழமை டெலிவரி டிரைவர் ஒருவரை போலீஸ் வாகனம் மோதிய காட்சி வெளிவந்ததை அடுத்து போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. மாகாசார் (Makassar) நகரில் கவுன்சில் கட்டிடம் எரிக்கப்பட்டதில் நால்வர் உயிரிழந்தனர் என்று யோக்யாகார்த்தா பல்கலைக்கழகம் உறுதி செய்தது. கலவரத்தை அடுத்து தனது சீன பயணத்தை ரத்து … Read more

ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலநடுக்கம் – பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டம் – பலி எண்ணிக்கை 600ஐ தாண்டியது…

காபூல்: ஆப்கானிஸ்தானில்   இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்  கால பல கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இதில் ஏராளாமானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை  (மதியம் 1மணி நிலவரம்) பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த  நிலநடுக்கத்தின் தாக்கம் , இந்தியா,  கிழக்கு ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் சில பகுதிகளில் உணரப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தில், செப்டம்பர் 1, 2025 அன்று காலை  ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் … Read more

ஆபரேஷன் சிந்தூரின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது குறித்து ஏன் கேள்வியெழுப்பவில்லை : மோடிக்கு காங்கிரஸ் கண்டனம்

இந்தியாவும் சீனாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவை என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்கிடம் பிரதமர் மோடி கூறியுள்ளார். மோடியின் இந்த செயல் டிராகன் முன்பு யானை மண்டியிட்டது போன்றது என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவரான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “பயங்கரவாதத்துக்கு எதிராக சீனா “இரட்டை நிலைப்பாடு” மற்றும் “இரட்டைப் பேச்சு” கொண்டுள்ளதாக நீண்டகாலமாக இந்தியா குற்றம்சாட்டி வருகிறது. ஆனால், இப்போது, இந்தியாவும் சீனாவும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்டவை … Read more

பராமரிப்புப் பணி: கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம்

செங்கல்பட்டு: பராமரிப்புப் பணி காரணமாக  கல்பாக்கம் அணுமின் நிலையத்தில்  மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் தலா 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் 2 அலகுகள் உள்ளன.  இகுள்ள முதல் அலகில், தொழில் நுட்ப கோளாறு காரணமாக  கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், முதல்  மின் உற்ப்பத்தி நிறுத்தப்பட்டது. 8 வருடங்கள் கடந்தும் அந்த அலகில் மின் உற்பத்தி … Read more

உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம் – தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது! ஜெர்மனியில் முதல்வர் பேச்சு…

சென்னை: உழைப்பால் உயர்ந்துள்ள இனம்தான் தமிழ் இனம் – தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றும், ஆண்டுக்கு ஒருமுறையாவது தமிழ்நாட்டிற்கு வாருங்கள், தமிழ்நாடு அடைந்துள்ள மாற்றங்களை காண வாருங்கள் என ஜெர்மனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறினார். தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பதற்காக 5வது முறையாக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த முறை, ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஜெர்மனி சென்ற முதல்வரை, அமைச்சர் டிஆர்பி ராஜா பூங்கொத்து கொடத்து … Read more

கணபதி விழாவை கோலாகலமாக நடத்தி வந்த பிரபல தாதா-வின் மகன் விநாயகர் சதுர்த்தியன்று மரணம்

மும்பையை கதிகலங்க வைத்தவர் பிரபல தாதா வரதராஜன். நிழல் உலக தாதாவாக இல்லாமல் ’70 – ’80 களில் மும்பையின் நிஜ உலக தாதாவாக வலம் வந்த வரதராஜன் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தியின் போது மாடுங்காவில் கணபதி விழா நடத்திவந்த இவரது வரலாறு பலத் திரைப்பட இயக்குனர்களுக்கு பணமாக மாறியது. ’88ல் மறைந்த இவரது குடும்பத்தில் பலர் மும்பையை விட்டு வெளியேறி தனித்தனி ரூட்டில் பயணிக்க வரதா பாயின் மகனான மோகன் … Read more

சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை, ‘மேக வெடிப்பு’ என்கிறார் வெதர்மேன் பிரதீப் ஜான்…

சென்னை: சென்னையில்  நள்ளிரவு கொட்டி தீர்த்த கனமழை, ‘மேக வெடிப்பால்’  உருவானது என தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார். இந்த மேகவெடிப்பு   நடப்பாண்டு முதன்முறையாக சென்னையில் நிகழ்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், 2026 ஆகஸ்டு மாதம், சென்னைக்கு வரலாற்று சிறப்பு மிக்க மாதம் எனறு குறிப்பிட்டுள்ளதுடன், ஒரு மாதத்தில் குறைந்த பட்சம் 3 மி.மீ முதல் அதிகபட்சமாக ரூ. 100 மிமீட்டர் வரை மழை பெய்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். மேக வெடிப்பு என்றால் … Read more

பிரதமர் மோடி பயணத்தில் ஒப்பந்தம்: இந்தியாவில் ரூ.6 லட்சம் கோடி முதலீடு செய்கிறது ஜப்பான்!

டெல்லி: பிரதமர் மோடியின் ஜப்பான் பயணம் மூலம் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கான அந்நிய முதலீட்டை இந்தியா பெறுகிறது. சந்திரயான் முதல் செயற்கை நுண்ணறிவு வரையிலான, செமி கண்டக்டர் மற்றும்  கழிவுநீர் மேலாண்மைப் போன்றவற்றில் இருநாடுகளும் இணைந்து பயணிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பதாக வெளியுறவுத்துறைத் தெரிவித்துள்ளது. இஸ்ரோவிற்கும் ஜப்பானின் விண்வெளி நிறுவனமான ஜாக்ஸாவிற்கும் இடையிலான ஒப்பந்தத்தைப் பாராட்டிய பிரதமர் மோடி, “பூமியின் எல்லைகளுக்கு அப்பால் மற்றும் விண்வெளியில் மனிதகுலத்தின் முன்னேற்றத்தின் அடையாளமாக செயலில் … Read more

இந்தியாவிடம் மண்டியிட்டார் அமெரிக்க அதிபர்: இந்திய மருந்துகளுக்கு ‘வரி விலக்கு’ அளித்த டொனால்டு டிரம்ப்!

டெல்லி: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50சதவிகிதம் வரியை உயர்த்திய அமெரிக்க அதிபர், இந்திய மருந்துகள் இறக்குமதிக்கு வரி விலக்கு அளித்துள்ளார். இந்திய மருந்துபொருட்களின் தேவை அமெரிக்காவுக்கு இன்றியமையாதது என்ற நிலையில், மருந்து பொருட்களுக்கு வரிவிலக்கு அளித்து, இந்தியாவிடம் மண்டியிட்டுள்ளார். இந்திய மருந்துகளுக்கு உடனடி சுங்க வரியில் இருந்து அமெரிக்கா விலக்கு அளித்துள்ளது. தனது சுங்க வரி கொள்கைகள் மூலம் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் அதிபர் டிரம்ப், இந்திய மருத்துவத்துறை முன்பு அடிபணிந்து … Read more

மணலியில் 27.செ.மீ.மழை: நள்ளிரவில் சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை…

சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. அதிகபட்சமாக மணலி பகுதியில் 27 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்ட மேலடுக்கு சுழற்றி காரணமாக,   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் ஓரிரு இடங்களில்  மிதமானது முதல் கனமழை பேய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம்  ஆகஸ்டு 29ந்தேதி அறிவித்திருந்தது. மேலும்,  பலத்த தரைக்காற்று மணிக்கு … Read more