மணலியில் 27.செ.மீ.மழை: நள்ளிரவில் சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை…

சென்னை: சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தன. அதிகபட்சமாக மணலி பகுதியில் 27 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. வளிமண்ட மேலடுக்கு சுழற்றி காரணமாக,   தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் சில பகுதிகளில் ஓரிரு இடங்களில்  மிதமானது முதல் கனமழை பேய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம்  ஆகஸ்டு 29ந்தேதி அறிவித்திருந்தது. மேலும்,  பலத்த தரைக்காற்று மணிக்கு … Read more

தருமா பொம்மை

ஜப்பானின் தகாசாகி-குன்மாவில் உள்ள ஷோரின்சான் தருமா-ஜி கோயிலின் தலைமைப் பூசாரி ரெவ். சீஷி ஹிரோஸைச் சந்தித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தருமா பொம்மை வழங்கப்பட்டது. இந்தியா – ஜப்பான் இடையிலான கலாச்சார உறவைக் குறிக்கும் விதமாக வழங்கப்பட்ட இந்த பொம்மை புகழ்பெற்ற பௌத்த துறவியான போதிதர்மனின் பாதிப்பால் உருவானது. தென்னிந்தியாவின் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஒரு புத்த துறவி என்று கூறப்படும் போதிதர்மர் 5 அல்லது 6 ஆம் நூற்றாண்டில் சீனாவுக்குப் பயணம் செய்தார். தொடர்ந்து நெடுங்காலம் … Read more

திருச்சி பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல் – 3 பேருக்கு அரிவாள் வெட்டு – போலீஸ் தடியடி…

திருச்சி: திருச்சி  பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையம்  திறக்கப்பட்டது முதலே அங்கு அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக   நள்ளிரவில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே மோதல்  ஏற்பட்டது. இதில் சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்த நிலையில்,  போலீஸ் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். திருச்சி மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு காணும் வகையில்,  பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம்  அனைத்து நவீன வசதிகளையும் கொண்ட வகையில்,  சுமார்  38 ஏக்கா் பரப்பளவில் தரைத்தளம் மற்றும் முதல் … Read more

ரூ.77ஆயிரத்தை நெருங்கியது: சாமானிய மக்களின் எட்டாக்கனியாக மாறுகிறது தங்கம்….!

சென்னை: சாமானிய மக்களின் வாழ்வாதாரத்துக்கு பக்கபலமாக இருந்து வரும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே வருகிறது. இது மக்களுக்கு எட்டாக்கனியாக மாறும் நாள் அதிக தூரத்தில் இல்லை என்பது தெரிய வருகிறது. இன்று ஒரே நாளில்,  சரவனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் தங்கம் விலை ரூ.77ஆயிரத்தை நெருங்கி உள்ளது. இது குடும்ப தலைவிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை  இன்று (சனிக்கிழமை)  அதிரடியாக பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.76.960-க்கு விற்பனையாகி … Read more

320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில் ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பயணம்..

டோக்கியோ: அரசு முறை பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி,  மணிக்கு  320 கி.மீ. வேகத்தில் செல்லும் புல்லட் ரயிலில்  ஜப்பான் பிரதமருடன் பிரதமர் மோடி பயணித்தார். பிரதமர் மோடி 4 நாள் பயணமாக ஜப்பான் சீனா பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் ஆகஸ்டு 29, 30ந்தேதிகளில் ஜப்பானில் அந்நாட்டு தலைவர்களை சந்தித்து பேசி வருகிறார்.  ஆகஸ்ட் 29 அன்று டோக்கியோவில் நடைபெற்ற  வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். பின்னர், ஜப்பான் மாகாண ஆளுநர்களைச் சந்தித்து பேசினார். அப்போது … Read more

பாலஸ்தீன அதிபரின்  விசாவை ரத்து செய்தார் அமெரிக்க அதிபர் டிரம்ப்…

வாஷிங்டன்: ஐ.நா பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் பங்கேற்பதை தடுக்கும் வகையில், அவரது விசாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். ஐ.நா. பொதுச் சபையின் (UNGA 80) 80வது அமர்வு செப்டம்பர் 9, 2025 செவ்வாய்க்கிழமை தொடங்கும். உயர்மட்ட பொது விவாதத்தின் முதல் நாள் செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவின்  நியூயார்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் பங்கேற்க இருப்பதாக … Read more

இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல்…

கெய்ரோ: இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் ஹவுதி பிரதமர் கொல்லப்பட்டதாக தகவல்  வெளியாகி உள்ளது. “ஏமனில் உள்ள சனா பகுதியில் ஹவுதி பயங்கரவாத ஆட்சியின் இராணுவ இலக்கை துல்லியமாகத் தாக்கியதாக” இஸ்ரேலிய இராணுவம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தது. இந்த தாக்குதலில்   ஹவுதி பிரதமர் அகமது அல்-ரஹாவி மற்றும் பல அமைச்சர்கள் கொல்லப்பட்டதாக இன்று தகவல் வெளியாகி உள்ளது. ஏமன் தலைநகர் சனாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்தின் பிரதமர் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈரானிய ஆதரவு ஹவுதிகள் இன்று … Read more

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு…

சென்னை:  சென்னையில் 12 நாட்கள் போராட்டம் நடத்திய   தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாக போராடிய ஆண் பெண், வழக்கறிஞர்கள் மீதான வழக்குகளை தமிழ்நாடு அரசு கைவிட முடியாது என நீதிமன்றத்தில் தொரிவித்து உள்ளது. இந்த வழக்கில், தூய்மை பணியாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களையும் காவல்துறையினர் தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டு உள்ளதால், இந்த வழக்கின் விசாரணையின்போது, தமிழ்நாடு அரசு கைவிட மறுப்பு தெரிவித்து உள்ளது. இதையடுத்து,  இந்த சம்​பவம் தொடர்​பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலை​மை​யி்ல் ஒருநபர் ஆணை​யம் அமைத்து விசா​ரிக்​கலாம் … Read more

2 புதிய நீதிபதிகள் பதவி ஏற்பு; உச்சநீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பியது….

டெல்லி: உச்சநீதிமன்றத்தில் 2 புதிய நீதிபதிகள் பதவியேற்ற நிலையில், உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட 34 நீதிபதி பணியிடங்களும் நிரம்பி முழு பலத்தை எட்டி உள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வது, பணியிட மாற்றம் செய்வது போன்ற முடிவுகளை, உச்ச நீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பு எடுக்கிறது. இந்த கொலிஜியத்தில்,   தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும்  மூத்த நீதிபதிகள் சூர்யகாந்த், விக்ரம் நாத், ஜே.கே.மகேஸ்வரி, பி.வி.நாகரத்னா ஆகியோர் உள்ளனர். இந்த கொலீஜியம் அமைப்பின் கூட்டம், ஆகஸ்டு  25ந்தேதி … Read more

நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்வு! அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு…

சென்னை: தமிழ்நாடு அரசு நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ரூ.2500 ஆக உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. விவசாயிகளின் வாழ்வாரத்தை உயர்த்தும் வகையில் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றி நெல் கொள்முதல் விலையை தற்போது உயர்த்தி உத்தரவிட்டுள்ள முதல்வர் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி  ஆகியோர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்,  … Read more