ரயில்களில் ATM வசதி… இந்திய ரயில்வே புதிய முயற்சி… பயணவழி செலவுக்கு இனி கவலையில்லை… வீடியோ

இந்திய ரயில்வே தனது 172வது நிறைவு விழாவை இன்று கொண்டாடியது, 1853 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 ஆம் தேதி மகாராஷ்டிராவின் போரி பந்தரிலிருந்து தானே வரையில் ரயில் இயக்கப்பட்டது. இதையடுத்து ரயில்வே தனது 172வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், சோதனை அடிப்படையில் ரயிலுக்குள் ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளது. மும்பை-மன்மத் ‘பஞ்சவதி எக்ஸ்பிரஸ்’ ரயிலில் சோதனை அடிப்படையில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. இந்த முயற்சி பொதுமக்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மத்திய ரயில்வேயின் மும்பை தலைமையகம், … Read more

தமிழ்நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளிகள் நாளையுடன் முடிவு!

சென்னை: தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முழு ஆண்டு  தேர்வுகள்  நாளையுடன் முடிவடையும் நிலையில், நாளை மறுதினம் முதல்  கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளிகள் திறப்பு குறித்து மே மாதம் இறுதியில் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் தொடக்கப் பள்ளிகள் அனைத்திற்கும் நாளையோடு (ஏப்ரல் 17) முழு ஆண்டு தேர்வுகள் நிறைவடைகின்றன. இதைத்தொடர்ந்து, கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே இந்த மாதம் இறுதிவரை தேர்வுகள் திட்டமிட்டிருந்த நிலையில்,  … Read more

தர்பூசணி பழங்களில் ஊமைக்குத்தாக ரசாயன நிறமி செலுத்தப்படுவதாக கூறுவதில் உண்மையில்லை நீதிமன்றத்தில் அரசு தகவல்

தர்பூசணி பழங்களில் எந்த ரசாயனமும் கலக்கப்படுவதில்லை என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தர்பூசணி பழங்களின் ரசாயன நிறமியை ஊசிமூலம் செலுத்துவதாக சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஸ்குமார் கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு தர்பூசணி விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், மாநிலத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு அலுவலர்கள் இதனை ஆய்வு செய்து ரசாயன கலப்பு இல்லை என்பதை உறுதி செய்தனர். இந்த நிலையில் தர்பூசணி உள்ளிட்ட சாமானிய மக்களின் … Read more

சிவாஜியின் அன்னை இல்ல வழக்கு : தீர்ப்பு ஒத்தி வைப்பு

சென்னை சிவாஜி கணேசனின் அன்னை  இல்ல வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது/ மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் ‘ஜெகஜால கில்லாடி’ என்ற படத்தை தயாரிப்பதற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3.74 கோடி ரூபாய் கடன் பெற்றதாக கூறப்படுகிறது. கடன் தொகையை திருப்பித் தராததால், கடன் தொகை வட்டியுடன் 9.39 கோடி ரூபாய் வசூலிக்க ஏதுவாக ‘ஜெகஜால கில்லாடி’ படத்தின் அனைத்து உரிமைகளையும் தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் வேண்டும் என … Read more

அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை  விலக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை சென்னை உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் பதவியில் இருந்து பொன்முடியை விலக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நிகழ்ச்சியில் பேசும் போது தமிழக வனத்துறை அமைச்சர் பொன்முடி வைணவம் சைவம் தொடர்பாக சர்ச்சை கூறிய கருத்துக்களை தெரிவித்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதற்கு திமுக எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்தார். திமுக துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கி தமிழ்நாடு முதல் அமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். … Read more

கல்வி நிறுவனங்களில் உள்ள சாதிப் பெயர்களை நீக்க வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதி மன்றம் உத்தரவு

சென்னை: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள  உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களுக்குள் நீக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சென்னை  உயர்நீதி மன்றம் உத்தர விட்டு உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் கூடங்களின் பெயர்கள், அதை உருவாக்கியவர்களின் பெயரில் இயங்கி வருகிறது. அப்போதைய காலக்கட்டத்தில் ஒருவர் பற்றிய குறிப்பு, அவருடைய பெயருடன் அவரது சாதி மத அடையாளங்களும்  சேர்ந்தே இடம்பெற்றிருக்கும்.   ஆனால், தற்போது அதைக்கொண்டு அரசியல் மற்றும் சர்ச்சைகள் ஏற்படுவதால், பள்ளி பெயர்களில்  உள்ள சாதியப் … Read more

மாற்றுத்திறனாளிள் தேர்தலில் போட்டியிடாமலேயே கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை பேரவையில் அறிமுகம் செய்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: மாற்றுத்திறனாளிகளுக்கு கவுன்சிலர் பதவி வழங்கும் சட்ட முன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  இன்று பேரவையில் அறிமுகம் செய்தார். அப்போது,  எல்லாருக்கும் எல்லாம் என்ற பரந்த உள்ளத்தோடு திராவிட மாடல் அரசு செயல்படுகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து இந்த சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தின்படி, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகள் தேர்வு செய்யப்படுவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்  மார்ச் மாதம் 14ந்தேதி அன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.  … Read more

அமைச்சர்கள் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜிமீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம்! சபாநயாகர் அனுமதி மறுப்பு – அதிமுக வெளிநடப்பு…

சென்னை: தமிழக அமைச்சர்கள் நேரு, பொன்முடி, செந்தில் பாலாஜிமீது அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து விவாதிக்க வலியுறுத்திய நிலையில், அதற்க  சபாநயாகர் அனுமதி மறுத்ததால், எதிர்க்கட்ச தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக வெளிநடப்பு செய்தது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீதும், பெண்களை இழிவாக பேசிய அமைச்சர் பொன்முடி மீதும், நகராட்சி நிர்வாகத் துறை முறைகேடு தொடர்பாக அமைச்சர் கே.என் நேரு மீதும் அதிமுக  நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதுபோல, … Read more

5.9 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

பஹ்லன் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.43 மணிக்கு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில்  இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. தலைநகர் டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் … Read more

அழுகிய நிலையில் கி்டைத்த நீலகிரி காங்கிரஸ் செயலாளர் சடலம்

ஊட்டி நீலகிரி மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ராஜ்குமார் சடலம் அவர் வீட்டில் அழுகிய நிலையில் கிடைத்,துள்ளது நீலகிரியில் மஞ்சூர் அருகே உள்ள மேல் கொட்டரகண்டி பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 60) ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்று விட்டதால், தனியாக வசித்து வந்த ராஜ்குமார்  நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக அவர் கொட்டரகண்டியில் உள்ள ஒரு … Read more