ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு? முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி…

சென்னை:  மத்தியஅரசு அமல்படுத்த உள்ள ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் தமிழகத்திற்கு ரூ.9,750 கோடி இழப்பு ஏற்படும் என கூறப்படுகிறது. வரி குறைப்பால் தமிழ்நாடு  தேசிய சராசரியை விட மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது என்று அச்சம் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி வரியை  மத்திய பாஜக அரசு கொண்டுவரும்போது, அதை எதிர்ப்பதில், முதன்மையாக இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது ஜிஎஸ்டி வரியில் சில சீர்திருத்தம் செய்து, பொதுமக்கள் பயன்படும் வகையில், வரி குறைக்க எடுக்கும் நடவடிக்கைக்கு கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார்.  GST … Read more

ஜெர்மனி புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! தமிழ்நாட்டுக்கு பெருமுதலீடுகளை ஈர்க்க செல்வதாக பேட்டி… வீடியோ

சென்னை: தமிழ்நாட்டுக்கு பெருமுதலீடுகளை ஈர்க்க வெளிநாடுகளுக்கு  செல்வதாக தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின் இன்று காலை சென்னையில் இருந்து ஜெர்மனி புறப்பட்டார். தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க  ஒரு வார கால அரசுமுறைப் பயணமாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஜெர்மனி புறப்பட்டார்.  இதையடுத்து இங்கிலாந்து செல்லும் முதல்வர் அங்குள்ள  பிரபலமான   Oxford பல்கலைக்கழகத்தில்  சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கருத்தரங்கில், தந்தை பெரியார் திருவுருவப் படத்தை திறந்து வைக்கிறார். தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், அதற்கு … Read more

அரசு ஊழியர்கள் ‘ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட்’ கிடையாது! தமிழ்நாடு அரசு

சென்னை:  ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது என தமிழ்நாடு அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. அதன்படி ஓய்வுபெறும் நாளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை கிடையாது, அதற்கான விதிகளில் திருத்தம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே  சென்னை உயர்நீதிமன்றம்,  அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளில் பணியிடை நீக்கம் செய்வது சரியல்ல, என கூறி, அதை பரிசீலிக்க தமிழ்நாடு அரசுக்கு  அறிவுறுத்தி இருந்தது. மேலும்,  ஓய்வுபெறும் நாளில் சஸ்பெண்ட் செய்வது, ஊழியர்களுக்கு … Read more

50-ஐக்கூட எட்டாமல் எவ்வளவு சாதனைகள் !

50-ஐக்கூட எட்டாமல் எவ்வளவு சாதனைகள் ! மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் பெயர் என்னவோ கிருஷ்ணன்.. ஆனால் அவரிடம் தாண்டவமாடியதோ பகுத்தறிவு. இறை நம்பிக்கையை நேரடியாக இடிக்காமல் மூடநம்பிக்கைகளை சாடவேண்டும், அதே நேரத்தில் எதிராளியின் மனதை புண்படுத்தவும் கூடாது. இப்படியொரு நுட்பமான வழியில் தமிழக மக்களுக்கு பகுத்தறிவை பக்குவமாக ஊட்டியதில், கலைவாணரை அடித்துக்கொள்ள ஆளே கிடையாது.. சுயசிந்தனையின் அவசியத்தை திரைப்படங்கள் வாயிலாக அள்ளித் தெளித்தவர், நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன். அதாவது, என்.எஸ் கிருஷ்ணன்.. நாடக கலைஞர்களுக்கு எடுபிடி … Read more

செப்டம்பர் 3 மற்றும் 10 தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை: செப்டம்பர் 3 மற்றும் 10 தேதிகளில் வங்கக்கடல் பகுதிகளில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாகவும், இதனால் சூறாவளி காற்று விச வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது. தென்கிழக்கு மத்திய பிரதேசம், அதனை ஒட்டிய வங்கங்கக்கடல்  பகுதியில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்த நிலையில்,  அடுத்தடுத்து 2 காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு  இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல … Read more

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் பெறப்பட்ட மனுக்கள் வைகையில் ஆற்றில் மிதந்த அவலம்… பொதுமக்கள் அதிர்ச்சி…

மதுரை:  முதலமைச்சர் தொடங்கி வைத்த உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்து பல்வேறு அதிருப்தி நிலவி வரும் நிலையில்,  மதுரையில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட மனுக்கள், வைகை ஆற்றில் தூக்கி எறியப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. வைகை ஆற்றில் மிதந்து வந்த மனுக்களை பார்த்த பொதுமக்கள், தங்களது  கோரிக்கைகள் தண்ணீரில் மிதக்கிறதே என்று ஆதங்கப்பட்டுள்ளனர். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப பல முகாம்களில் பெறப்படும் மனுக்கள் வெறும் கண்துடைப்பு நாடகம் … Read more

‘அனைவருக்கும் ஐஐடி’: அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் ஐஐடியில் இணையவழி படிப்புகளில் சேர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்…

சென்னை: ‘அனைவருக்கும் ஐஐடி’ திட்டத்தின்கீழ் நடப்பாண்டு,  அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடியில் இணையவழி படிப்புகளில் சேர உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ்  தெரிவித்துள்ளார். தேர்வுபெற்றவர்களின் பெயர் பட்டியலையும் வெளியிட்டுள்ளார். ‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற திட்டத்தின் கீழ்  சென்னை ஐஐடி பி.எஸ். தரவு அறிவியல், எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் ஆகிய இணையவழி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்கள் 28 பேர் உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளது. சென்னை ஐஐடி … Read more

பெசன்ட் நகர்  வேளாங்கண்ணி  மாதா கோவில் பொன்விழா! சென்னையில் போக்குவரத்து மாற்றம்

சென்னை: சென்னை  பெசன்ட் நகர்  கடற்கரை அருகே அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்க உள்ள நிலையில்,  சென்னையின் சில பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது. இது குறித்து போக்குவரத்து காவல் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல பொன்விழா ஆண்டுப் பெருவிழா 2025, வருகின்ற 29.08.2025 வெள்ளிக்கிழமை அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கி 08.09.2025 தேதி வரை திருவிழா நடைபெற … Read more

‘சமையல் புகழ்’ மாதம்பட்டி ரங்கராஜ் மீது சென்னை காவல்ஆணையர் அலுவலகத்தில் அவரது காதலி ஜாய் கிரிசில்டா ‘கற்பழிப்பு’ புகார்….

சென்னை:  விஜய் டிவியில் நடைபெற்று வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பங்குபெற்றுள்ள  மாதம்பட்டி ரங்கராஜ்மீது அவரது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா  என்பவர் சென்னை மாநகர காவல்ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை காதலித்து  வந்த நிலையில், திருமணம் செய்வதாக ஏமாற்றி, கர்ப்பமாக்கியதாக குற்றம் சாட்டி உள்ளார்.   சமையல் கலைஞராக கொடிகட்டி பறந்த  மாதம்பட்டி ரங்கராஜ், மேலும் புகழாசையில்,   விஜய் டிவியின் குக் வித் கோமாளியின் நடுவராக கலந்துகொண்டது மூலம் … Read more

அன்பில் மகேஷ் வெளியிட்டது திரிக்கப்பட்ட தகவல்: அரசுப் பள்ளி மாணவர்கள் 28பேர் ஐஐடியில் சேருவது குறித்து அன்புமணி குற்றச்சாட்டு…

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்கள் 28பேர் ஐஐடியில் சேர இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியிருப்பது,  திரிக்கப்பட்ட தகவல் என்றும், திராவிட மாடல் அரசின் பொய்களுக்கு அளவே இல்லையா? என பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டி உள்ளார்.  அரசுப் பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும். பொய்களை பரப்பும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் … Read more