இன்று சென்னையில்  மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்

சென்னை சென்னையின் சில பகுதிகளில் இன்றுமின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது/ தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , ”சென்னையில் இன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 5:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும் ரெட்ஹில்ஸ்: தர்காஸ் சாலை, ஸ்ரீ பால விநாயகர் நகர், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சென்றம்பாக்கம், சிரங்கவூர், புது நகர் மூன்றாவது … Read more

கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை! பாஜகவுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை பதில்…

சென்னை: கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என  பாஜகவுக்கு அதிமுக எம்.பி. தம்பிதுரை பதிலடி கொடுத்துள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாஜக கூட்டணி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணியை செய்தியாளர்களிடம் அறிவித்த உள்துறைஅமைச்சர் அமித்ஷா, மத்தியில் மோடி ஆட்சி, மாநிலத்தில் எடப்பாடி ஆட்சி என்று கூறினார்.  இதைத்தொடர்ந்து பாஜகவினர், தமிழ்நாட்டில் எடப்பாடி தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என கூறி வருகின்றனர். இது அதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நேற்று (ஏப்ரல் 16)ந்தேதி செய்தியாளர்களிடம் … Read more

விசைத்தறியாளர்கள் போராட்டம்: எடப்பாடி பழனிச்சாமியின் தீர்மானத்துக்கு அமைச்சர்கள் பதில்…

சென்னை:   போராட்டம் நடத்தி வரும் விசைத்தறியாளர்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பேசிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பதில் அளித்த அமைச்சர்கள்,   விசைத்தறியாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும்  என நம்பிக்கை தெரிவித்தனர். மூன்று முறை உயர்த்தப்பட்ட மின்கட்டண உயர்வு, தொழில் வரி உயர்வு, சொத்து வரி உயர்வு, தங்களது விசைத்தறியில் வேலை செய்யும் கூலி ஆட்களின் சம்பள உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால், தற்போது வழங்கப்படும் கூலி மிகமிகக் குறைவு என்றும், எனவே, … Read more

கருணாநிதி கல்லறை மீது கோவில் கோபுரம் அலங்கரிப்பு! அமைச்சர் சேகர்பாபுவுக்கு பாஜக, அதிமுக கடும் கண்டனம்..

சென்னை:  மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வ கருணாநிதி கல்லறை மீது கோவில் கோபுரம் அலங்கரிப்பு செய்யப்பட்டு இருப்பது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்று பேரவையில் அறநிலையத்துறை மானிய கோரிக்கையையொட்டி,  அமைச்சர் சேகர்பாபு தரப்பில், கருணாநிதியின் கல்லறை மேல் பூங்களால் கோவில் கோபுரம் போன்று அமைத்து அடாடவடி செய்யப்பட்டுள்ளது. இதற்கு  பாஜக, அதிமுக உள்பட இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கருணாநிதியின் சமாதியில் கோவில் கோபுரத்தை வரைந்திருப்பது வன்மையாக கண்டிக்கதக்கது, ஓட்டு மொத்த … Read more

ஆளுநர் ஆர் என் ரவியின் திடீர் டெல்லி பயணம்

சென்னை தமிழக ஆளுநர் ஆர் என் ரவி திடீர் என டெல்லி சென்றுள்ளார். ஆளுநர் ஆர்.என்.ரவி 4 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். அவருடன் அவருடைய தனி செயலாளர், உதவியாளர், பாதுகாப்பு அதிகாரி ஆகியோரும் சென்றுள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி, வரும் 20ம் தேதி மூலமாக சென்னைக்கு திரும்புகிறார். கவர்னர் ரவி,மத்திய அரசின் அவசர அழைப்பின்பேரில் டெல்லி சென்றுள்ளதாகவும் அவர் அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, உயர் அதிகாரிகள் மற்றும் சட்ட நிபுணர்களை சந்தித்து பேசுவார் … Read more

சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிய உத்தரவு

சென்னை சென்னை உயர்நீதிமன்றம் அமைச்சர் பொன்முடி மீது வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தி.க. கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி, சைவ மற்றும் வைணவம் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.பொன்முடியின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து தி.மு.க.வில் பொன்முடி வகித்து வந்த தி.மு.க. துணைப்பொதுசெயலாளர் பதவி பறிக்கப்பட்டது. ஆயினும் அவர், தி.மு.க.வில் அடிப்படை உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவியில் உள்ளார். எதிர்க்கட்சிகள் அநாகரிகமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க … Read more

தடைக்கால  உத்தரவை மீறி மீன் பிடித்தால் நிவாரண தொகை நிறுத்தம்

புதுச்சேரி புதுச்சேரியில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மீன்பிடி தடைக்கால உத்தரவை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மீன்வளத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”புதுச்சேரி அரசு, சார்பு செயலர் அவர்களின் 10.04.2025 தேதியிட்ட அறிவிப்புபடி , கடல்சார் மீன்வளங்களை நீண்ட காலத்திற்கு நிலைநிறுத்தும் வகையில் பாதுகாத்திட 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 15 ஆம் நாள் முதல் ஜூன் மாதம் 14-ஆம் நாள் வரையிலான கால அளவில் 61 நாட்கள் (இரு நாட்களும் … Read more

திடீர் என திருச்செந்தூரில் கடல் உள் வாங்கியதால் பரபரப்பு

திருச்செந்தூர் திடீரென திருச்செந்தூரில் கடல் உள் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு மாதமும் வழக்கமாக அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்கள், முந்திய நாட்கள், பிந்திய நாட்களில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதாரபதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் காலையில் கடல்நீர் உள்வாங்குவதும், பின்னர் மாலையில் இயல்புநிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது. இன்று, திருச்செந்தூரில் கடல் நீர் திடீரென உள்வாங்க தொடங்கியது. சுமார் 100 அடி தூரம் கடல் நீர் உள்வாங்கியதால் பாசி படர்ந்த … Read more

நில மோடி தொடர்பான ‘மூடா’ வழக்கு: சிபிஐ விசாரணை கோரிய மனுவுக்கு பதில் அளிக்க சித்தராமையாவுக்கு நீதிமன்றம் உத்தரவு…

பெங்களூரு: முடா  நிலம் ‘மோசடி’ வழக்கை சிபிஐ விசாரணைக்கு  மாற்றக் கோரிய மனுவை விசாரித்த   கர்நாடக உயர்நீதிமன்றம் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளது  முடா நில ஒதுக்கீட்டு ஊழல் குறித்து சிபிஐ விசாரணை கோரிய மனு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றம் முதல்வர் சித்தராமையா மற்றும் அவரது மனைவி பி.எம். பார்வதிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கை லோக்ஆயுக்தா போலீசாரிடமிருந்து சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற  மனுதாரரின்  கோரிக்கையை லோக் ஆயுக்தா நீதிமன்றம்  … Read more

ஒரே நாளில் ரூ.840 உயர்வு: புதிய உச்சத்தை நோக்கி பறக்கிறது தங்கத்தின் விலை…

சென்னை: நடுத்தர மக்களின் ஆபாந்தவனாக இருந்து வரும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் தினசரி உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் சரவனுக்கு ரூ.840 உயர்ந்து புதிய உச்சத்தை நோக்கி சென்றுள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருவது சாமானிய மக்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், 2025ம் ஆண்டு பிறந்தது முதல் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வருகிறது. சவரன் ரூ.55 ஆயிரம் முதல் … Read more