ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவிப்பு….

சென்னை: ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சுழல் பந்துவீச்சாளர் அஸ்வின் ரவிச்சந்திரன் அறிவித்து உள்ளார். அஸ்வின் ரவிச்சந்திரன்  ஐபிஎல் போட்டியில் இறுதியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தனது சொந்த ஊரான சென்னையில்  விளையாடிய நிலையில், அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.   ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில், தற்போது ஐபிஎல் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளதுடன்,  மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் … Read more

28, 29ம் தேதி சுபமுகூர்த்த நாளையொட்டி, சார்பதிவாளர்கள் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன்கள் வழங்க உத்தரவு…

சென்னை: நாளை  மற்றும் நாளை மறுதினமான (ஆகஸ் 28, 29ம் தேதிகள்)  சுபமுகூர்த்தநாள் என்பதால், அன்று ஏராளமான பத்திரபதிவுகள் நடைபெறும் வகையில், கூடுதல்  முன்பதிவு வில்லைகள் (டோக்கன்கள்) வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டு உள்ளது. சுபமுகூர்த்த தினங்களான நாளை மற்றும் 29ம் தேதி கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து பதிவுத்துறை வெளியிட்ட அறிக்கையில்,   சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை … Read more

சென்னை கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ. 5 கோடி முறைகேடு? துணைவேந்தர் சஸ்பெண்ட்…

சென்னை: சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் 5 கோடி ரூபாய் முறைகேடு  நடைபெற்றுள்ள நிலையில், அக்கல்லூரியின் துணைவேந்தர் தற்காலிக மாக இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் கணக்கு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.  இதில் ரூ. 5 கோடி வரையில் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. பல்வேறு செலவினங்களில் முறைகேடு நடந்துள்ளதைக் கணக்கு குழுவினர்க் கண்டறிந்தனர். இந்த  சம்பவம் மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து,  … Read more

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலம் 1,02,061 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது! சொல்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன்…

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த  2024-ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 5,068 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்தன் மூலம் 1,02,061 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று 26.08.2025 சென்னை கிண்டி சிட்கோ அலுவலக வளாகத்தில் மாண்புமிகு குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்  தா.மோ.அன்பரசன் அவர்கள் தலைமையில் மாவட்ட தொழில் மையங்களின் பொது மேலாளர்களுடன் துறை சார்ந்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. … Read more

அமலாக்கத்துறை சோதனை: சுவர்ஏறி குதித்து தப்படியோட முயன்ற மம்தா கட்சி எம்எல்ஏ கைது… இது மேற்குவங்க சம்பவம்…

கொல்கத்தா: கல்வித்துறை ஊழல் தொடர்பாக, மேற்குவங்க மாநிலத்தில்  மாநில முதல்வரான மத்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைக்கு வந்ததை கண்ட,   எம்எல்ஏ ஜிபன் கிருஷ்ணா சாஹா சுவர்ஏறி குதித்து தப்படியோடிய நிலையில், அவரை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் விரட்டிச்சென்று  கைது செய்தனர்.  வயக்காட்டில் அவர் வீசி எறிந்த அவரது போனும் மீட்கப்பட்டது இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்கத்தில் பள்ளிக் கல்வித் துறை நியமனங்களில் நடந்த ஊழல் தொடா்பாக … Read more

அனந்த் அம்பானி தொடர்புடைய விலங்கு நல அமைப்பு மீதான புகார்களை SIT விசாரிக்கும் : உச்ச நீதிமன்றம்

குஜராத் மாநிலம் ஜாம் நகரில் அனந்த் அம்பானியின் கருத்துருவில் உருவான விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாரா மீது எழுப்பப்பட்ட புகார்கள் மற்றும் மீறல்கள் குறித்து விசாரணை செய்ய முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை (SIT) உச்சநீதிமன்றம் அமைத்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமாக விலங்குகளை வாங்குதல், சிறைபிடிக்கப்பட்ட விலங்குகளை தவறாக நடத்துதல், நிதி முறைகேடுகள், பணமோசடி போன்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி வழக்கறிஞர் ஜெயா சுகின் தாக்கல் செய்த … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் 10 நாட்கள் வெளிநாடு பயணம் – ஜெர்மனி, லண்டன் பயண விவரங்கள் வெளியீடு…

சென்னை; தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாத இறுதியில் வெளிநாடு பயணமாகிறார்.  10 நாட்கள் பயணமாக அவர் லண்டன் மற்றும் ஜெர்மனி செல்கிறார். அவரது  பயண விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க ஏற்கனவே 4 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், 5வது முறையான  இந்த ஆண்டு லண்டன், ஜெர்மனி பயணமாகிறார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கு … Read more

ரயில் டிக்கெட், வாடகை கார், உணவு டெலிவரி போன்றவற்றுக்கு OTP எண் கேட்கத் தடையில்லை! உயர்நீதிமன்றம்

மதுரை :  யுபிஐ பணப்பரிவர்த்தனையின்போது,  ரயில் டிக்கெட், வாடகை கார், உணவு டெலிவரிக்கு OTP எண் கேட்கத் தடையில்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தர விட்டு உள்ளது. ஏற்கனவே திமுக உறுப்பினர் சேர்க்கையின்போது, பொதுமக்களின் மொபைல் போன் பதியப்பட்டு, அவர்களின் ஓடிபி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓடிபி கேட்க உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், உச்சநீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இந்தநிலையில்,   அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஓடிபி பெறுவதற்கு தடை கோரி தங்கமாரி … Read more

மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அனுமதி…

மதுரை: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக,  திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி  மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திமுகவினரிடையே பரபரப்பை எற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான  ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் இருந்து வருகிறார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு (வயிற்று வலி)  ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர், உடனே அவரை மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தன்ர். அங்கு அவருக்கு … Read more

ரவி மோகன் ஸ்டூடியோ தயாரிக்கும் முதல் இரண்டு படங்கள் குறித்த தகவல்…

நடிகர் ரவி மோகன் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இன்று துவங்கியுள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தின் தொடக்க விழா இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ் திரைப்பட பிரபலங்கள் மட்டுமன்றி பிற மொழி நடிகர்களும் கலந்து கொண்டனர். கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, மணிகண்டன், ஷ்ரத்தா ஸ்ரீனாத், மோகன் ராஜா, அதர்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரவி மோகனை வாழ்த்தினர். தயாரிப்பு … Read more