முதலமைச்சர் ஸ்டாலின் 10 நாட்கள் வெளிநாடு பயணம் – ஜெர்மனி, லண்டன் பயண விவரங்கள் வெளியீடு…

சென்னை; தமிழ்நாட்டுக்கு முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் ஸ்டாலின், இந்த மாத இறுதியில் வெளிநாடு பயணமாகிறார்.  10 நாட்கள் பயணமாக அவர் லண்டன் மற்றும் ஜெர்மனி செல்கிறார். அவரது  பயண விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீட்டை ஈர்க்க ஏற்கனவே 4 முறை வெளிநாடுகளுக்கு பயணம் செய்துள்ள முதல்வர் ஸ்டாலின், 5வது முறையான  இந்த ஆண்டு லண்டன், ஜெர்மனி பயணமாகிறார். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை 1 டிரில்லியன் டாலர் என்ற அளவுக்கு உயர்த்த வேண்டும் என்ற இலக்கு … Read more

ரயில் டிக்கெட், வாடகை கார், உணவு டெலிவரி போன்றவற்றுக்கு OTP எண் கேட்கத் தடையில்லை! உயர்நீதிமன்றம்

மதுரை :  யுபிஐ பணப்பரிவர்த்தனையின்போது,  ரயில் டிக்கெட், வாடகை கார், உணவு டெலிவரிக்கு OTP எண் கேட்கத் தடையில்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தர விட்டு உள்ளது. ஏற்கனவே திமுக உறுப்பினர் சேர்க்கையின்போது, பொதுமக்களின் மொபைல் போன் பதியப்பட்டு, அவர்களின் ஓடிபி கேட்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ஓடிபி கேட்க உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், உச்சநீதிமன்றமும் அதை உறுதி செய்தது. இந்தநிலையில்,   அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் ஓடிபி பெறுவதற்கு தடை கோரி தங்கமாரி … Read more

மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அனுமதி…

மதுரை: திடீர் உடல்நலக்குறைவு காரணமாக,  திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி  மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது திமுகவினரிடையே பரபரப்பை எற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசின் மூத்த அமைச்சர்களில் ஒருவரான  ஊரகம் மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திண்டுக்கல்லில் உள்ள வீட்டில் இருந்து வருகிறார். அப்போது அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு (வயிற்று வலி)  ஏற்பட்டதால், அவரது குடும்பத்தினர், உடனே அவரை மதுரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மதுரை மீனாட்சி மருத்துவமனையில் அனுமதித்தன்ர். அங்கு அவருக்கு … Read more

ரவி மோகன் ஸ்டூடியோ தயாரிக்கும் முதல் இரண்டு படங்கள் குறித்த தகவல்…

நடிகர் ரவி மோகன் தனது பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை இன்று துவங்கியுள்ளார். ரவி மோகன் ஸ்டூடியோஸ் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த நிறுவனத்தின் தொடக்க விழா இன்று மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. இந்த விழாவில் தமிழ் திரைப்பட பிரபலங்கள் மட்டுமன்றி பிற மொழி நடிகர்களும் கலந்து கொண்டனர். கன்னட சூப்பர் ஸ்டாரான சிவராஜ்குமார், கார்த்தி, சிவகார்த்திகேயன், ஜெனிலியா, மணிகண்டன், ஷ்ரத்தா ஸ்ரீனாத், மோகன் ராஜா, அதர்வா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ரவி மோகனை வாழ்த்தினர். தயாரிப்பு … Read more

அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பம் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை: தமிழ்நாட்டில், சாலையோரம் நடப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்களை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,    உயர்நீதிமன்றதின் தீர்ப்பிற்கு   இடைக்கால தடை விதித்துள்ளது. முன்னதாக,  மதுரையில் இரு இடங்களில் அதிமுக கொடிக் கம்பம் அமைக்க அனுமதி கோரி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த தனி நீதிபதி, தமிழகம் முழுவதும் பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்களின் … Read more

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது…

வாஷிங்டன்: இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்துள்ள 50% வரி உயர்வு நாளைமுதல் அமலாகிறது. இதுதொடர்பாக அமெரிக்கா  நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் வைரம், ஜவுளி மற்றும் கடல் உணவுப்பொருட்கள் உள்பட பல பொருட்களை ஏற்றுமதி செய்வதில் நிறுவனங்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றன. இந்திய நேரப்படி நாளை காலை 9.31 வரை ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ள நிலையில், … Read more

என்ஆர்ஐ கோட்டாவில் ’18ஆயிரம் MBBS இடங்கள்’ போலி ஆவணங்கள் மூலம் பெற்றுள்ளது அம்பலம்… !

டெல்லி: நாடு முழுவதும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் என்ஆர்ஐ கோட்டாவில்  போலி ஆவணங்கள் மூலம் உள்நாட்டைச் சேர்ந்தவர்களே 18ஆயிரம் எம்.பி.பி.எஸ் இடங்கள் பெற்றுள்ளதும், இதன்மூலம்  பெரும் முறைகேடு நடந்துள்ளதும்  அமலாக்​கத்துறை விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்​தி​யா​வில் உள்ள அரசு மருத்​துவ கல்​லூரி​கள் மற்​றும் தனி​யார் மருத்​துவ கல்​லூரி​களில் வெளி​நாட்டு வாழ் இந்​தி​யர்​களுக்கு  (என்​ஆர்ஐ) குறிப்​பிட்ட சதவீதம் இடம் ஒதுக்​கப்​படு​கிறது.  அதாவதுரு,  தனியார் மருத்துவக் கல்லூரிகள் பொதுவாக தங்கள் இடங்களில் 5% முதல் … Read more

மீண்டும் நாசவேலைக்கு திட்டமா? கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் சிக்கிய வேன் – அதிர்ச்சி….

கோவை: கோவையில் 2000 கிலோ வெடி மருந்துடன் வேன் ஒன்று சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  ஏற்கனவே கோவை பகுதியில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கார் வெடிகுண்டு சம்பவம் மக்கள் மனதில் இருந்து அகலாத நிலையில், வெடிபொருட்களுடன் வேன் சிக்கி இருப்பது மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. நாளை நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. கோவையிலும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. இந்த நிலையில்,  சுமார் 2000 … Read more

காலை உணவு திட்டம் சூப்பரான சமூக முதலீடு: அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை : நகர்ப்புற பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின் ஆற்றிய உரையில் காலை உணவு திட்டம் சூப்பரான சமூக முதலீடு என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பஞ்சாப் முதல்வர் பகவத்சிங் மான் பங்கேற்று, தமிழ்நாடு அரசின் திட்டத்தை பாராட்டினார். சென்னை: நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். … Read more

வாகன ஓட்டிகள் நனைவதால்… சிக்னல்களில் மழை மூடாப்பு அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்…

வடகிழக்கு பருவமழை துவங்க ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள சிக்னல்களில் மழை பாதுகாப்புப் பந்தல்களை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்தில் எட்டு போக்குவரத்து சிக்னல்கள் அருகே ரூ.28.3 லட்சம் செலவில் இந்த ‘சன்’ ஷேடுகள் அமைக்க டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. ஏற்கனவே, இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட க்ரீன் ஷேட் அமைப்புகள் போட்ட சில நாளில் வாலும் தோலுமாய் தொங்கியதை அடுத்து பல … Read more