வாகன ஓட்டிகள் நனைவதால்… சிக்னல்களில் மழை மூடாப்பு அமைக்க சென்னை மாநகராட்சி திட்டம்…

வடகிழக்கு பருவமழை துவங்க ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் சென்னையில் உள்ள சிக்னல்களில் மழை பாதுகாப்புப் பந்தல்களை அமைக்க பெருநகர சென்னை மாநகராட்சி தயாராகி வருகிறது. முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்தில் எட்டு போக்குவரத்து சிக்னல்கள் அருகே ரூ.28.3 லட்சம் செலவில் இந்த ‘சன்’ ஷேடுகள் அமைக்க டெண்டர்கள் விடப்பட்டுள்ளன. ஏற்கனவே, இந்த ஆண்டு கோடைகாலத்தில் வெயிலில் இருந்து பாதுகாக்க அமைக்கப்பட்ட க்ரீன் ஷேட் அமைப்புகள் போட்ட சில நாளில் வாலும் தோலுமாய் தொங்கியதை அடுத்து பல … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 89 பேருக்கு பணி நியமன ஆணை, திரைப்பட பயிற்சி கல்லூரி தளம், பள்ளிகல்வித்துறை கட்டிங்களை திறந்து வைத்தார்…

சென்னை :  முதலமைச்சர் ஸ்டாலின் இன்று 89 பேருக்கு பணி நியமன ஆணை, திரைப்பட பயிற்சி கல்லூரி தளம் திறப்பு, பள்ளிகல்வித்துறை கட்டிங்கள் திறந்து வைத்தார்.. சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன்படி, டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 மூலம் தேர்வான 89 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். தொடர்ந்து,   உயர்கல்வித் துறை சார்பில் 51 கோடியே 4 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள … Read more

நாளை திரு.வி.கலியாணசுந்தரனார் 142ஆவது பிறந்த நாள்! தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை

சென்னை:  திரு. வி.கலியாணசுந்தரனார் 142வது பிறந்த நாளை முன்னிட்டு நாளை அவரது  திருவுருவச்சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள்  மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் உரைநடையைப் பாமரரும் படிக்கும் வண்ணம் எளிமைப்படுத்தி, எழிலூட்டி வழங்கியவரும் சொற்களின் பொருளில் புதுமை கண்டவரும் தமிழ்த்தென்றல் என்று அனைவராலும் போற்றப்படுபவருமான திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்களின் 142ஆம் பிறந்தநாள் 26.8.2025 செவ்வாய்க்கிழமையன்று அமைகிறது. திரு.வி.க (திருவாரூர் விருத்தாசலம் கலியாணசுந்தரனார்) அவர்கள் தற்போதுள்ள சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், … Read more

தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்: தமிழ்நாடு அரசு சார்பில் 3 நாள் டிரோன் பயிற்சி அறிவிப்பு…

சென்னை: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில்,   சென்னையில், 3 நாட்கள்  டிரோன் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை கிண்டி  தொழிற்பேட்டையில் தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் உள்ளது. இங்கு  தொழில்முனைவோர்களை உருவாக்கும்வ வகையில்  பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. சில பயிற்சிகள் இலவசமாகவும், சில பயிற்சிகள் குறைந்த கட்டணங்கள் மூலம்  வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி முடித்தவர்கள், தொழில்தொடங்க தமிழ்நாடு  அரசு … Read more

தமிழ்நாட்டில் இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவு – 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலி

சென்னை: தமிழ்நாட்டில் பி.இ., பி.டெக் போன்ற இளநிலை பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வு முடிவடைந்துள்ள நிலையில்,  நடப்பாண்டு,  கடந்த ஆண்டைவிட  ஆண்டு  20 ஆயிரம் மாணவர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ள நிலையிலும்,  37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆதிதிராவிடர் அருந்ததியருக்கான நிரப்பப்படாத இடங்களை, ஆதிதிராவிடர் பிரிவினருக்கு மாற்றி அளிப்பதற்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பொறியியல்படிப்பிற்கான மூன்று கட்ட கலந்தாய்வு ஏற்கனவே … Read more

சிக்குன்குனியா தடுப்பூசி ‘ஐஎக்ஸ்சிக்’ கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதால் அமெரிக்காவில் தடை

சிக்குன்குனியா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியாக அங்கீகரிக்கப்பட்ட ‘ஐஎக்ஸ்சிக்’ (Ixchiq) மருந்து கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதாகக் கூறி அமெரிக்கா தடை விதித்துள்ளது. பிரெஞ்சு நிறுவனமான வால்னேவா தயாரிக்கும் இந்த மருந்து அமெரிக்க சுகாதார அதிகாரிகளால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவன அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர். கொசு மூலம் பரவும் சிக்கன்குனியா வைரசுக்கு எதிராக அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகரித்துள்ள இரண்டு தடுப்பூசிகளில் Ixchiq-க்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. 2023 ஆம் ஆண்டில் இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்பட்ட … Read more

Find My செயலி உதவியுடன் பிக்பாக்கெட் அடித்தவரை கொத்தாகப் பிடித்து அலறவிட்ட அமெரிக்க சுற்றுலாப் பயணி… வீடியோ

இத்தாலியின் வெனீஸ் நகருக்குச் சுற்றுலா சென்ற அமெரிக்கப் பெண்ணிடம் பாஸ்போர்ட் மற்றும் இயர்போட் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய கைப்பை திருடப்பட்டது. ‘Find My’ என்ற செயலி உதவியுடன் கைப்பை இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தார். தன்னிடம் கைவரிசை காட்டி சிக்கிய பெண்ணிடம் “எட்டு பிள்ளைகளுக்குத் தாயான என்னிடம் நீமட்டும் சிக்காமல் போயிடுவியா” என்று கொத்தாக அவரது தலைமுடியப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவரது மகள் கரீஸ் மெக்எல்ராய், “தனது தாயாரிடம் சிக்கிய … Read more

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ‘ஏர் டிராப்’ சோதனை வெற்றி!

சென்னை: இந்தியாவின் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தின் ஏர் டிராப் எனப்படும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. இஸ்ரோவின் இந்த நடவடிக்கைக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனை பயணம் டிசம்பரில்  (2025) மேற்கொள்ளப்படும்  என இஸ்ரோ தலைவர் நாராணயன் தெரிவித்திருந்த நிலையில், விண்வெளி வீரர்கள் விண்வெளிக்கு சென்று திரும்பும்  பாராசூட் சோதனை  நடத்தப்பட்டது. இது வெற்றிகரமாக நடைபெற்றுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவதில் அமெரிக்கா, … Read more

வாட்ஸ்ஆப் வழியாக சென்னை மாநகராட்சி சேவைகள்! தொடங்கி வைத்தார் மேயர் பிரியா,…

சென்னை: சென்னை மாநகராட்சியின் சேவைகள் வாட்ஸ்ஆப் வழியாக பெறும் திட்டத்தை  சென்னை  மாநகராட்சி மேயர் பிரியா இன்று தொடங்கி வைங்ததார். சென்னை மாநகராட்சியின் 2025-26ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை அறிவிப்பின்படி, தமிழ்நாட்டில் முதன்முறையாக பெருநகர சென்னை மாநகராட்சியில் பொதுமக்களின் தேவைகளுக்கான அனைத்து சேவைகளையும் WhatsApp வாயிலாக வழங்கிடும் செயல்பாட்டினை மேயர் திருமதி ஆர் பிரியா  இன்று ரிப்பன் கட்டட அலுவலகக் கூட்டரங்கில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி, இனிமேல் பொதுமக்கள்,  வாட்ஸ்ஆப் மூலம் சொத்து வரி, தொழில் … Read more

சுதர்சன் ரெட்டி நக்சல் பயங்கரவாதிகளுக்கு உதவியவர் என அமித்ஷா விமர்சனம்! முன்னாள் நீதிபதிகள் கண்டனம்…

டெல்லி: குடியரசு துணைத்தலைவர் தேர்தலில்  எதிர்க்கட்சிகளின் கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி சுதர்ஷன் ரெட்டி, நக்சல் பயங்கரவாதி களுக்கு உதவியர் என உள்துறை அமித்ஷா விமர்சனம் செய்திருந்தார். இதற்கு  முன்னாள் நீதிபதிகள்  18 பேர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். துணை குடியரசுத் தலைவர் தேர்தல், வரும்  செப்டம்பர் 9ம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோல் இந்தியா கூட்டணி சார்பில் உச்சநீதிமன்ற முன்னாள் … Read more