ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி – தமிழ்நாடு அரசு எதிர்ப்பு…

சென்னை: ராமநாதபுரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு மத்தியஅரசு அனுமதி  வழங்கியுள்ள நிலையில், அதை அனுமதிக்க மாட்டோம் என தமிழ்நாடு அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் சோதனை கிணறுகளை அமைக்க, ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு  மத்தியஅரசு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  அதன்படி,  முதல்கட்டமாக 20 இடங்களில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.  அதன்படி, எண்ணை கிணறுகள் எரிவாயுக்காக சுமார்  3,000 மீட்டர் ஆழம் … Read more

பிகார் SIR: விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி!

டெல்லி: பீகார் மாநிலத்தில்  வாக்காளர்கள் பட்டியலில் இருந்து  விடுபட்ட வாக்காளர்கள் தங்களுடைய  ஆதார் எண்ணுடன்  விண்ணப்பிக்கலாம்‘ என உச்ச நீதிமன்றம்  அனுமதி வழங்கி உள்ளது. 65 லட்சம் வாக்காளர்கள் விடுபட்டிருக்கும் நிலையில், வாக்காளர்களுக்கு உதவ முன் வராத அரசியல் கட்சிகளின் செயல், ஆச்சரியமளிப்பதாக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. பீகாரில்  சுமார் 65லட்சம் போலி வாக்காளர்கள்  நீக்கப்பட்டு, வரைவு  வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இது எதிர்க்கட்சிகளிடையே கோபத்தை ஏற்படுத்தியது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள், இது பாஜக … Read more

முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை கைது செய்தது இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே அரசு…

கொழும்பு:  இலங்கையின் முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கேவை  தற்போதைய இலங்கை அதிபர் அநுர குமார திசாநாயகே அரசு அதிரடியாக கைது செய்துள்ளது. இது  இலங்கை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரணில் விக்ரமசிங்கே  அதிபராக இருந்தபோது,  அரசு நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில்   கைது செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலங்கை பிரதமராக 1993 முதல் 2022-ம் ஆண்டு வரை பல்வேறு காலகட்டங்களில் 5 முறை பதவி வகித்தவர் ரணில் விக்ரமசிங்கே. மேலும் இவர் அதிபராக 2022-ம் … Read more

பீகாரில் ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல்…

சென்னை: பீகாரில் ராகுல்காந்தி நடத்தும் யாத்திரையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் 27ந்தேதி ராகுலுடன் ஸ்டாலினும்  யாத்திரையில் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. பீகாரில் தீவிர வாக்காளர் சீர்திருத்தம் என்ற பெயரில் அகதிகள் வாக்குரிமை உள்பட சுமார் 65 லட்சம் வாக்காளர் நீக்கப்பட்டு உள்ளனர். விடுபட்ட வாக்காளர்கள் உரிய ஆவணங்களுடன் மீண்டும் பெயரை சேர்க்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில்,  மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி,  ‘வாக்காளர் அதிகார் யாத்திரை’ என்ற … Read more

கொடிகட்டி பறக்கும் போதைபொருள் விற்பனை! வடசென்னையில் 5 பேர் கைது!

சென்னை; சென்னையில் போதை பொருள் விற்பனை கொடிகட்டி பறக்கும் நிலையில்,   வடசென்னையில் போதைப்பொருள் விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாட்டில் சமீப காலமாக போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக காவல்துறையினர் கூறி வந்தாலும், போதை பொருட்கள் விற்பனை செய்வதில் அரசியல் கட்சிகளே ஈடுபட்டுவருவதால், அவர்களை கைது செய்ய காவல்துறை தயங்கி வருகிறது. இதனால், போதை … Read more

திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம் கோலாகலம்! பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோவிலில் ஆவணித்திருவிழா தேரோட்டம்  இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது.  பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்  அரோகரா கோஷத்துடன் தேரை இழுத்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா நடைபெற்று வருகிறது. 12 நாட்கள் நடைபெறும் ஆவணி திருவிழா  கடந்த 14-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி,  ஒவ்வொரு நாளும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்தது பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். … Read more

பாஜக ஆளாத மாநிலங்கள் மீது குறுகிய எண்ணத்தோடு செயல்படும் ஒன்றிய அரசு’! முதல்வர் ஸ்டாலின் காட்டம்…

சென்னை: ‘பாஜக ஆளாத மாநிலங்களில் தொடர்ந்து பல தொல்லைகளை ஒன்றிய அரசு ஏற்படுத்தி வருகிறது; குறுகிய எண்ணத்தோடு செயல்பட்டு வருகிறது, ஆனால் தமிழ்நாடு அரசு சமூக நீதி அரசாக திமுக உள்ளது என மத்திய பாஜக அரசை முதல்வர் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், மாநிலங்கள் சுயாட்சி பெற தமிழ்நாடு அரசு ஏற்று நடத்தும் தேசிய கருத்தரங்கே இது என்றும் கூறினார். சென்னை கலைவாணர் அரங்கில் ஒன்றிய, மாநில உறவுகள் குறித்த தேசிய கருத்தரங்கை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் … Read more

130-வது சட்டத் திருத்தம், வாக்கு திருட்டு குறித்து காங்கிரஸ் மாநில மாநாடு! செல்வபெருந்தகை தகவல்…

சென்னை: மத்தியஅரசு  கொண்டு வர முயற்சிக்கும்,  130-வது சட்டத் திருத்தம், வாக்கு திருட்டு குறித்து காங்கிரஸ் மாநில மாநாடு குமரியில் நடத்த  திட்டமிட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்  செல்வபெருந்தகை  தெரிவித்துள்ளார். இந்த மாநாடு செப்டம்பர் 7ந்தேதி நடைபெறும் என்றும் அறிவித்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம் பீகாரில் நடத்திய வாக்காளர் சீர்திருத்தம் , அதைத்தொடர்ந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்ட விவகாரம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சலசலப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தில்,. நீக்கம் மற்றும், … Read more

நேரடி போட்டி: குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மனுக்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட  பலர்  மனுத் தாக்கல் செய்த நிலையில், அவர்களில்  66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.  இந்த தேர்தலில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன், சுதர்ஷன் ரெட்டி ஆகியோரின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே நேரடி போட்டி எழுந்துள்ளது முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக,   கடந்த ஜூலை மாதம் 21ந்தேதி அன்று திடீரென தனது பதவியை  … Read more

பாமக தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தான்தான் தலைவர்கள் என்று கூறி வருகின்றனர். இதனால் பாமக தொண்டர்கள் குழப்பி போய் உள்ளதுடன், பலர் மாற்றுகட்சியை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், ராமதாசின் தீவிர ஆதரவாளரான கட்சியின் கவுரவ தலைவர்  ஜி.கே.மணி,   நெஞ்சுவலி மற்றும் … Read more