நேரடி போட்டி: குடியரசுத் துணைத்தலைவர் தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மனுக்களில் 66 வேட்பு மனுக்கள் நிராகரிப்பு!

டெல்லி: குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட  பலர்  மனுத் தாக்கல் செய்த நிலையில், அவர்களில்  66 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.  இந்த தேர்தலில் போட்டியிடும் ராதாகிருஷ்ணன், சுதர்ஷன் ரெட்டி ஆகியோரின் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையில், இருவருக்கும் இடையே நேரடி போட்டி எழுந்துள்ளது முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், பாஜக தலைமைமீது கொண்ட அதிருப்தி காரணமாக,   கடந்த ஜூலை மாதம் 21ந்தேதி அன்று திடீரென தனது பதவியை  … Read more

பாமக தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: பாமக தலைவர் ஜி.கே.மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணிக்கும் இடையே மோதல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, இருவரும் தனித்தனியாக பொதுக்குழு கூட்டத்தை கூட்டி, தான்தான் தலைவர்கள் என்று கூறி வருகின்றனர். இதனால் பாமக தொண்டர்கள் குழப்பி போய் உள்ளதுடன், பலர் மாற்றுகட்சியை நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், ராமதாசின் தீவிர ஆதரவாளரான கட்சியின் கவுரவ தலைவர்  ஜி.கே.மணி,   நெஞ்சுவலி மற்றும் … Read more

சென்னையில் பரிதாபம்: மின்சார பாய்ந்த மழைநீரில் சிக்கி தூய்மை பணியாளர் மரணம்…

சென்னை: சென்னையில் நள்ளிரவு முதலே மழை பெய்து வரும் நிலையில், அதிகாலையிலேயே  தூய்மை பணிக்கு வந்த இளம்பெண் தூய்மை பணியாளர் ஒருவர்   மின்சார பாய்ந்த மழைநீரில் சிக்கி பலியானார். இது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. சென்னை  கண்ணகி நகர் பகுதியை சார்ந்தவர் திருமதி வரலட்சுமி அவர்கள் இன்று காலை தூய்மை பணி  வேலை செய்து வரும் வேலைக்கு செல்லும்போது மழை நீரில் உள்ள கேபிள் மீது தெரியாமல்  காலை வைத்ததால், அதில் பாய்ந்த மின்சாரம் … Read more

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் ஆகஸ்ட் 30ம் தேதி நடைபெறும் என அறிவிப்பு…

சென்னை: அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் அதிமுக தலைமை அலுவலகத்தில் வரும் 30ந்தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டுஉள்ளது. அதிமுக பொதுச்செயலாளர்  எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆகஸ்ட் 30ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ,  அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், சென்னை ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் … Read more

மனோன்மணீயம் சுந்தரனாா், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு! கவர்னர் ரவி உத்தரவு…

சென்னை: ஆகஸ்டு  22ந்தேதியுடன் பணிக்காலம் முடிவடைந்த மனோன்மணீயம் சுந்தரனாா் , அழக்கப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவி காலம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு செய்து பல்கலைக்கழக வேந்தரான ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 8 பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர் இல்லாமல் இருந்து வருகிறது. ஆளுநருக்கும்  திமுக அரசுக்கும் இடையே மோதல் காரணமாக, துணைவேந்தர்கள் நியமனம் செய்யப்படாமல் இருந்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில்,  திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தா்களின் … Read more

தெருநாய் விவகாரம்: பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க தடை உள்பட முக்கிய உத்தரவுகள்…

டெல்லி: நாடு முழுவதும் தெருநாய் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தெருநாய்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. ஏற்கனவே தெருநாய்களை தெருக்களில் இருந்து அகற்றி காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்ற  உத்தரவு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் தெரு நாய்களுக்கு உணவளிக்கக் கூடாது, தெரு நாய்களுக்கு உணவளிக்க தனி இடம் உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் புதிய உத்தரவுகளை வழங்கியுள்ளனர். முன்னதாக,  டெல்லி மற்றும் என்.சி.ஆர் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் … Read more

கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை!

சென்னை: கிராமங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுமுறை அளிக்கப்படும் என  ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கு மேல் விடுப்பு எடுத்தால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் பணியாற்றி வரும் தூய்மை காவலர்களுக்கு (தூய்மை பணியாளர்கள்)  சுழற்சி முறையில் வாரம் ஒரு நாள் விடுப்பு வழங்க ஊரக வளர்ச்சித்துறை உத்தரவிட்டுள்ளது. வார விடுமுறை வழங்க, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு ஊரக … Read more

மருத்துவம் உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மருத்துவம் உள்பட டிஎன்பிஎஸ்சி  சார்பில்  பல்வேறு துறைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 644 பேருக்கு பணி நியமன ஆணைகளை   வழங்கினார். சென்னை மாநில கல்லூரி வளாகத்தில்  இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பல்வேறு துறை சார்பான நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்தும், ஏராளமானோருக்கு அரசு பணிகக்கான ஆணைகளையும் வழங்கினார். ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.1O4.24 இலட்சம்பல்வேறு திட்டங்களை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.124.97 கோடி மதிப்பீட்டிலான … Read more

இளம்பெண்களே தயாரா? 3 நாள் ‘மேக்கப் மாஸ்டர் கிளாஸ்’ பயிற்சி அளிக்கிறது தமிழ்நாடு அரசு…

சென்னை: பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில், தமிழ்நாடு அரசு அவர்களை தொழிமுனைவோராக்கும்  முயற்சியாக  தமிழ்நாடு அரசன் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின்  மூலம்  மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி அளிக்கிறது. விருப்பமுள்றளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,  தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மூன்று நாள் மேக்கப் மாஸ்டர்கிளாஸ் பயிற்சி வரும் 10.09.2025 முதல் 12.09.2025 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற … Read more

மேற்கு ஆசியாவிலேயே முதன்முறை… காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா. அதிகாரபூர்வ அறிவிப்பு…

பாலஸ்தீனப் பகுதியான காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் “காசாவில் பஞ்சம் இல்லை” என்று கூறியுள்ளதுடன், ரோமை தளமாகக் கொண்ட ஐபிசி குழுவின் அறிக்கையைக் கடுமையாக சாடியது, காசாவில் பஞ்சம் நிலவுவதாக கூறியுள்ள ஐ.நா., 500,000 மக்கள் “பேரழிவு” பசியை எதிர்கொள்வதாக தெரிவித்தனர். மேற்கு ஆசியாவில் பஞ்சம் எனபது இதுவே முதல் முறை என்றும், “இஸ்ரேலின் திட்டமிட்ட தடைகள் காரணமாக” இந்த பஞ்சம் ஏற்படுத்தப்பட்டதாக ஐ.நா … Read more