மேற்கு ஆசியாவிலேயே முதன்முறை… காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐ.நா. அதிகாரபூர்வ அறிவிப்பு…

பாலஸ்தீனப் பகுதியான காசாவில் பஞ்சம் நிலவுவதாக ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை மறுத்துள்ள இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் “காசாவில் பஞ்சம் இல்லை” என்று கூறியுள்ளதுடன், ரோமை தளமாகக் கொண்ட ஐபிசி குழுவின் அறிக்கையைக் கடுமையாக சாடியது, காசாவில் பஞ்சம் நிலவுவதாக கூறியுள்ள ஐ.நா., 500,000 மக்கள் “பேரழிவு” பசியை எதிர்கொள்வதாக தெரிவித்தனர். மேற்கு ஆசியாவில் பஞ்சம் எனபது இதுவே முதல் முறை என்றும், “இஸ்ரேலின் திட்டமிட்ட தடைகள் காரணமாக” இந்த பஞ்சம் ஏற்படுத்தப்பட்டதாக ஐ.நா … Read more

கிரிப்டோகரன்சி மோசடி : ரூ. 113 கோடியை சுருட்டிய திருடன் சிகரெட் துண்டை சாலையில் போட்டபோது சிக்கினான்…

சியோலில் உள்ள ஒரு ரயில் நிலையம் அருகே சிகரெட் துண்டை சாலையில் போட்ட நபரை பிடித்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஐந்து ஆண்டுகளாக கிரிப்டோகரன்சி மோசடியில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்று தெரியவந்தது. சிகரெட் பிடித்துவிட்டு சாலையில் வீசிய 60 வயது நபரை பிடித்து அதற்கான பிரிவில் கைது செய்ய முயன்ற போலீசாரிடம் “இந்த ஒரு முறை மட்டும்” தன்னை விடுவிக்குமாறு கெஞ்சியுள்ளார். இதையடுத்து அவரது அடையாள அட்டையைக் கேட்டபோது கொடுக்க மறுத்த அந்த நபர் … Read more

ரஷ்ய எண்ணெய் குழாய் தகர்ப்பு… உக்ரைன் தாக்குதலால் ஹங்கேரியில் எரிபொருள் தட்டுப்பாடு…

ரஷ்யாவிலிருந்து ஹங்கேரிக்கு செல்லும் பெட்ரோல் குழாய் உக்ரைன் தாக்குதலில் தகர்க்கப்பட்டதாக ஹங்கேரி வெளியுறவுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் பிரையான்சுக் மாகாணத்தில் ட்ருஸ்பா எண்ணெய் குழாய் மீது நடைபெற்ற தாக்குதலில் அந்தக் குழாய் வெடித்து பற்றி எரிந்தது. இதனால் ஹங்கேரிக்கு குழாய் வழியாக எண்ணெய் அனுப்பும் பணி தடைபட்டுள்ளதால் அங்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ஹங்கேரி வெளியுறவு அமைச்சர் பீட்டர் சுஜிஜ்ஜார்டோ, இந்த எண்ணெய் குழாய் மீது கடந்த … Read more

கோவில்களின் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும்! அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள ஒவ்வொரு கோவில்களின் வரவு-செலவு கணக்கை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறநிலையத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,   அனைத்து கோவில்களின் வரவு-செலவு கணக்கை யும் அறநிலையத்துறை இணையதளத்தில் பி.டி.எப். வடிவில் வெளியிட உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக,   மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில்  தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் , இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளின்படி, … Read more

முதல்வருடன் ஆதரவு கோரி, இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன்ரெட்டி 24ந்தேதி சென்னை வருகை…

சென்னை: துணை குடியரசு தலைவர் பதவிக்கு போட்டியிடும்,  இண்டியா கூட்டணி வேட்பாளர் சுதர்சன்ரெட்டி   வரும் 24ந்தேதி (ஞாயிறு) சென்னை வருகை தருகிறார். தமிழ்நாட்டில் திமுக தலைவரும், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, திமுக மற்றும்  கூட்டணி வேட்பாளர்களின் ஆதரவு கோருகிறார். நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு வருகிற செப். 9 ஆம் தேதி  தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், கோவையைச் சேர்ந்த மூத்த பாஜக … Read more

இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனைபயணம் டிசம்பரில்….! இஸ்ரோ தலைவர்

டெல்லி: இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான் சோதனை பயணம் டிசம்பரில்  (2025) மேற்கொள்ளப்படும்  என இஸ்ரோ தலைவர் நாராணயன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் மனிதர்களை அனுப்பும் விண்வெளிப் பயணமான ககன்யான், இந்த ஆண்டு டிசம்பரில் அதன் முதல் சோதனைப் பயணத்தை மேற்கொள்ளும் என்று இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் இன்று தெரிவித்தார். அதன்படி முதற்கட்டமாக ரோபோவுடன் ககன்யான் சோதனை பயணம் நடைபெற உள்ளது. தலைநகர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய இஸ்ரோ … Read more

சென்னையில் இன்று காலை முதலே பரவலாக மிதமானது முதல் கனமழை! வானிலை மையம் எச்சரிக்கை…

சென்னை: சென்னையில் இன்று அதிகாலை காலை முதலே  பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் மிதமான மழையில், பல இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில், 29 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், … Read more

வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்! சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: சென்னையில்,  வளர்ப்பு நாய்கள் வைத்திருப்பவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுளை  சென்னை மாநகராட்சி  அறிவித்து உள்ளது.  விதியை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டள்ளது. சென்னையில் நாய்க்கடி அதிகரிப்பதால், மாநகராட்சி புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. உரிமம், தடுப்பூசி, பொது இடங்களில் நாய்களைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்டவை இதில் அடங்கும். விதிமீறல்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் நாய்க்கடி பிரச்சினை பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் சென்னை ஜாபர்கான் பேட்டையை சேர்ந்த கருணாகரன்(48) என்பவரை, பக்கத்து … Read more

திமுக இருப்பது சிறுபான்மை மக்களுக்காகதான்! ரகுமான்கான் நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு….

சென்னை: திமுக இருப்பது சிறுபான்மை மக்களுக்காகதான் என முன்னாள் அமைச்சர் ரகுமான்கான்  நூல் வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின்  பேசியுள்ளார். முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா இன்று சென்னை  அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில்  முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டு, ரகுமான்கான் எழுதிய  5 நூல்களை வெளியிட்டார். நியாயங்களின் பயணம், மௌனமாய் உறங்கும் பனித்துளிகள், உலகமறியா தாஜ்மஹால்கள், பூ பூக்கும் இலையுதிர் காலம், வானம் பார்க்காத நட்சத்திரங்கள் ஆகிய … Read more

தமிழ்நாட்டில் மேலும் 3 பல்கலைக்கழகங்களின் பதவிகாலம் இன்றுடன் நிறைவு…

சென்னை: தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் தத்தளித்து வரும் நிலையில், மேலும் 3 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களின் பதவி காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. இது கல்வியாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாட்டில் கவர்னருக்கும் திமுக அரசுக்கும் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில்,  துணைவேந்தர் நியமனம் குறித்து அரசுக்கும், ஆளுனருக்கும் மோதல் காரணமாக சர்ச்சை ஊஎற்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கும் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால் அண்ணா பல்கலைக்கழகம் உள்பட பல … Read more