தமிழக முதல்வர் ஸ்டாலினின் சகோதரர் மு.க தமிழரசு அப்போலோவில் அனுமதி…

சென்னை:  தமிழக முதல்வர்  மு.க.ஸ்டாலினின் சகோதரர் மு.க தமிழரசு  இன்று காலை திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று 50வது திருமண நாளை சிறப்பாக கொண்டாடி வரும் நிலையில், அவரது சகோதரர் மு.க.தமிழரசுக்கு இன்று காலை திடீரென ஏற்பட்ட , தலைச்சுற்றல் மற்றும் மயக்கம் காரணமாக சென்னையின் கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மு.க. தமிழரசு, கடந்த  கடந்த … Read more

மல்லை சத்யா மதிமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்! வைகோ

சென்னை: மதிமுகவில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்  மல்லை சத்யா தற்காலிக நீக்கப்பட்டுள்ளார்.  இதற்கான அறிவிப்பை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார். இது மதிமுக தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மதிமுக பொதுச்செயலளராக இருந்து வந்த வைகோ, தனது மகன் துரைவைகோவை திடீரென கட்சிக்குள் கொண்டு வந்ததும், அவருக்கு எம்.பி. சீட் பெற்றுக்கொடுத்ததும் மதிமுக மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக சில மூத்த தலைவர்கள் மதிமுகவில் இருந்து ஒதுங்கிய நிலையில், மூத்த தலைவர்களில் ஒருவரான … Read more

நாடாளுமன்றத்தில் ராஜீவ் காந்தி படத்துக்கு சபாநாயகர் ஓம்பிர்லா, சோனியா, ராகுல் மலர்தூவி மரியாதை

டெல்லி; மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி,  நாடாளுமன்றத்தில் உள்ள  ராஜீவ் காந்தி படத்துக்கு சபாநாயகர் ஓம் பிர்லா, காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட பலர் மரியாதை செய்தனர். இதற்கிடையில் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி, ராகுல்காந்தி வெளியிட்டுள்ள பதிவில், அப்பா, உங்கள் கனவை நிறைவேற்றுவதே என் வாழ்க்கையின் குறிக்கோள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.   நாடு முழுவதும் மறைந்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ராஜீவ் காந்தியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள வீர்பூமியில் … Read more

ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரவே இந்தியா மீது தடை : வெள்ளை மாளிகை

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மீது தடைகளை விதித்துள்ளதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகைச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த கரோலின், ‘இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர பொதுமக்களிடமிருந்து நிறைய அழுத்தம் இருந்தது. இதையடுத்து, இந்தியா மீது தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறோம் என்று டிரம்ப் கூறியுள்ளார்.’ ‘எந்தவொரு சந்திப்பும் நடைபெறுவதற்கு … Read more

காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட அஜித் குமார் கொலை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்!

மதுரை: காவல்துறையினரால் அடித்துக்கொல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கை விசாரித்து வரும் சிபிஐ காவல்துறையினர்  மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.  ஆகஸ்டு 20ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டிருந்த நிலையில், முதல்கட்ட குற்றப்பத்திரிகயை சிபிஐ இன்று தாக்கல் செய்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மடப்புரம் காளியம்மன் … Read more

‘போலீஸ் ராஜ்ஜியமாக நாட்டை மாற்றுவதற்கான சதி’ பிரதமர்-முதல்வர் மற்றும் அமைச்சர்களை நீக்கும் மசோதா குறித்து ஓவைசி பேச்சு

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் இன்று மூன்று முக்கிய மசோதாக்களை அறிமுகப்படுத்தினார், இது குறித்து நாடாளுமன்றத்திற்குள் காரசாரமான விவாதமும் கூச்சலும் ஏற்பட்டது. இதில் அரசியலமைப்பு (130வது திருத்தம்) மசோதா 2025, யூனியன் பிரதேச ஆட்சி (திருத்தம்) மசோதா 2025 மற்றும் ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2025 ஆகியவை அடங்கும். இந்த மசோதாக்களின் கீழ், பிரதமர், முதல்வர் அல்லது எந்தவொரு அமைச்சரும் கடுமையான குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டால், அவர்களை பதவியில் இருந்து நீக்க … Read more

திண்டுக்கல் தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ திடீர் சோதனை…

சென்னை: திண்டுக்கல் தென்காசி உள்பட 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை செய்து வருகின்றனர். இது அந்த பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாமக பிரமுகர் திருபுவனம்  ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல் உள்பட 10 இடங்களில் இன்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் இன்று திண்டுக்கல், தென்காசி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம், வத்தலகுண்டு, வேடச்சந்தூர் உள்ளிட்ட … Read more

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது : சென்னை உயர்நீதிமன்றம்

துப்புரவுப் பணிகளை தனியார் மயமாக்கும் சென்னை மாநகராட்சி தீர்மானத்தை ரத்து செய்ய முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மண்டலம் V (ராயபுரம்) மற்றும் VI (திரு. வி. கா. நகர்) ஆகியவற்றில் துப்புரவுப் பணிகளை தனியார்வசம் ஒப்படைக்க கடந்த ஜூன் 16ம் தேதி சென்னை மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது. மாநகராட்சியின் இந்த முடிவை எதிர்த்து துப்புரவுப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் நீதிபதி … Read more

மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம்! அன்புமணி கண்டனம்..

சென்னை: சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் ஒப்பந்த முறையில் 2192 ஓட்டுனர், நடத்துனர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது,  மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை மறைமுகமாக தனியார் மயமாக்கும் திமுக அரசின்  நடவடிக்கை என்று பாமக தலைவர்  அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எக்ஸ் தளத்தில்  வெளியிட்டுள்ள  பதிவில், “சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்திற்கு 1020 ஓட்டுனர்களும், 1172 நடத்துனர்களும் தனியார் மனிதவள நிறுவனங்கள் மூலம் குத்தகை முறையில் நியமிக்க படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் … Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சின்னமலை ராஜீவ்காந்தி திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

சென்னை: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளையொட்டி,  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில், சின்னமலையில் உள்ள ராஜீவ்காந்தி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பாரத ரத்னா அமரர் ராஜீவ் காந்தி அவர்களது பிறந்த தினமான இன்று 20.08.2025 நாடு முழுவதும் காங்கிரசாரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அவரது நினைவை போற்றும் வகையில், பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் பொதுக்கூட்டங்களும் நடைபெறுகின்றன. அமரர் ராஜீவ்காந்தியின் பிறந்த நாளையொட்டி, டெல்லியில் உள்ள வீர் சக்ரா … Read more