இளையராஜாவின் பெயரில் விருது! ‛சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்’ பாராட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு…

சென்னை: சிம்பொனி இசை அமைத்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில்  ‛சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் இளையராஜா பெயரில் ஆண்டுதோறும்  தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்படும் என அறிவித்தார். நேரு உள்விளையாட்டு அரங்கில்  நேற்று மாலை (செப்., 13) ‛சிம்பொனி சிகரம் தொட்ட தமிழன்’ இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டு 50 பாராட்டு விழா தமிழ்நாடு அரசு சார்பில் பிரமாண்டமாக  நடந்தது.  இதில் தமிழக … Read more

சொன்னிங்களே செஞ்சிங்களா..? CM சார்…  ! திருச்சி அரியலூரை அதிரவிட்ட விஜய்

திருச்சி: சொன்னிங்களே செஞ்சிங்களா..? CM சார்…  ! திருச்சி அரியலூரில் பிரசாரம் மேற்கொண்ட விஜய்தவெக தலைவர் கேள்வி எழுப்பினார். தவெக தலைவர் விஜய்-ன் முதல் தேர்தல் பிரசார பரப்புரை நேற்று (செப்டம்பர் 13ந்தேதி) திருச்சியில் தொடங்கியது. இந்த பிரசாரத்துக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு கெடுபிடிகளை செய்ததுடன் ஏராளமான கண்டிஷன்களையும் காவல்துறை கூறியது. அவை ஏற்று, விஜய்  சுற்றுப்பயணம் திருச்சியில் தொடங்கியது. இந்த சுற்றுப்பயணத்திற்கு மாநிலம் முழுவதும் இருந்து விஜய் ரசிகர்கள் ஏராளமான குவிந்ததால் கடுமையான போக்குவரத்து நெரிசல் … Read more

20226ல் ‛‛நான் தான் சிஎம்”! அதகளப்படுத்திய பார்த்திபன்…

சென்னை: 20226ல் ‛‛நான் தான் சிஎம்”  என சமூக வலைதளங்களில் புதிர்போட்டு அதகளப்படுத்தி உள்ளார் நடிகர் பார்த்திபன். தனது படத்தின் பெயரை வெளியிட்டுள்ளார். நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனக்கென தனி பாணியில் படங்களை இயக்கி வருகிறார். அவரின் ஒவ்வொரு படத்திற்குமே ஒவ்வொரு விதமான வித்தியாச படைப்புகள் இருக்கும். அந்தவகையில்  நேற்று காலை தனத எக்ஸ் சமூக வலைதளத்தில்  திடீரென ஒரு பதிவை போட்டிருந்தார். அதில், இன்று மாலை 4.46-க்கு அரசியல் களத்தில் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு  பதிவு … Read more

பிரதமர் மோடி, அவரது தாயார் குறித்த ‘டீப்ஃபேக்’ வீடியோ! காங்கிரஸ்மீது வழக்கு பதிவு…

டெல்லி: பிரதமர் மோடி மற்றும் அவரது மறைந்த தாயாரை இழிவுபடுத்தும் வகையில் AI உருவாக்கிய டீப்ஃபேக் வீடியோவுக்கு எதிராக டெல்லி போலீசார்FIR பதிவு செய்துள்ளனர். பாஜகவின் டெல்லி தேர்தல் பிரிவு ஒருங்கிணைப்பாளர் சங்கேத் குப்தா  செப்டம்பர் 10 அன்று கொடுத்த புகாரின் பேரில்,   டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். புகாரில், காங்கிரஸ் பீகார் பிரிவு தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்த போலி வீடியோவை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும்,  ஆகஸ்ட் 27-28 … Read more

லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 90,892 வழக்குகளுக்கு தீர்வு – ரூ.719 கோடி இழப்பீடு!

சென்னை: தமிழ்நாடு  முழு​வதும் செப்டம்பர் 13ந்தேதி   நடை​பெற்ற தேசிய லோக்​-அ​தாலத்  மூலும்,  ஒரே நாளில் 90,892 நிலுவை வழக்​கு​களுக்​குத் தீர்வு காணப்​பட்​டு, பாதிக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ரூ.718.74 கோடி இழப்​பீடு வழங்க உத்​தர​விடப்​பட்​டுள்​ளது.  நீதிமன்றங்களில் தேங்கும் வழக்குகளை குறைக்கும் வகையில், அவ்வப்போது லோக்அதாலத் மூலம் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வழக்குகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அதன்படி,  மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு சார்​பில் தேசிய லோக்​-அ​தாலத் தமிழகம் முழு​வதும் நேற்று (செப்டம்பர் 13ந்தேதி) நடை​பெற்​றது. மாநில சட்​டப்​பணி​கள் ஆணைக்​குழு செயல் தலை​வரும் மூத்த … Read more

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் முடிவு

டெல்லி: வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீது நாளை ( திங்கள்கிழமை)  இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. வக்ஃப் திருத்தச் சட்டத்தின் அரசியலமைப்பு செல்லுபடியை எதிர்த்து தொடரப்பட்ட ஒரு தொகுதி மனுக்களில், உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை முன்பதிவு செய்து கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பிறகு, திங்கட்கிழமை இடைக்கால உத்தரவை அறிவிக்க உள்ளது. சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் தொடர்ச்சியான மூன்று நாட்கள் வாதங்களுக்குப் பிறகு, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான … Read more

ராகுல் மம்கூத்தீலை சுயேச்சை உறுப்பினராகக் கருத வேண்டும்! கேரள சபாநாயகருக்கு மாநில காங்கிரஸ் கடிதம்…

திருவனந்தபுரம்:  பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள  கேரள இளைஞர் காங்கிரஸ்  தலைவர் எம்.எல்.ஏ-ராகுல் மம்கூத்தீல்  மீது மாநில காங்கிரஸ் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் தொடர்ச்சியாக அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவிகிளில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு சட்டப்பேரவையில் தனி இருக்கை ஒதுக்கும்படி,  மாநில காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் சபாநாயகரிடம்  கடிதம் கொடுத்துள்ளார். ராகுல் மீது மூன்று நபர்கள் தகாத நடத்தை மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளை எழுப்பியதை அடுத்து, ஆகஸ்ட் 25 ஆம் … Read more

‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ எதிர்சீட்டில் கால் வைக்கக்கூடாது! புறநகர் ரயில் பயணிகளுக்கு  தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…

சென்னை: புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகள், ‘முதலில் வருபவருக்கே முன்னுரிமை’ என்ற அடிப்படையில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும், என்றும், ரயிலில் ஏறாத மற்றவர்களுக்காக இருக்கைகளைப் பிடித்து வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ள  தெற்கு ரயில்வே ,பயணிகள் எதிர்சீட்டில் கால் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே  வெளியிட்டுள்ள அறிக்கையில்,  தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம், புறநகர் ரயில்களில் சக பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் மற்றும் பயணத்தின் ஒழுங்கைக் குலைக்கும் … Read more

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூல்! ராமதாஸ்…

சென்னை: தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக குற்றம் சாட்டி உள்ள பாமக நிறுவனர்  ராமதாஸ், விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவக் கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். தனியார் மருத்துவ கல்லூரிகளில்,  அரசு நிர்ணயித்ததை விட கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்த விஷயத்தில், திமுக அரசு  உடனடியாக தலையிட்டு தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கூடுதல் கட்டாய … Read more

மக்கள் வெள்ளத்தில் திக்குமுக்காடும் திருச்சி! விஜய் வருகையால் கடுமையான போக்குவரத்து நெரிசல்…

திருச்சி: தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இன்று (சனிக்கிழமை) தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை தொடங்குவதற்காக திருச்சி வந்தடைந்தார். அவரை வரவேற்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், மக்கள் வெள்ளத்தில் அவர் பிரசாரம் நடைபெறும் இடத்துக்கு வந்தடைந்தார். திருச்சி  விமான நிலையத்தில் விஜய்க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், அவரது வாகனத்தையும்,  தவெக தொண்டர்கள்  தொடரத் தொடங்கினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தவெக கூட்டத்தினரால் திருச்சி திக்குமுக்காடி வருகிறது. இதுதொடர்பாக ஏற்கனவே காவல்துறை தவெகவுக்கு பல்வேறு … Read more