காஞ்சிபுரம் ஆரம்ப சுகாதார மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி தட்டுப்பாடு! தொழிலாளர்கள் அவதி

காஞ்சிபுர மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் அப்பகுதி தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.  கஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம், ஸ்ரீபெரும்புத்தூர் ஒரகடம்படப்பை உள்ளிட்டப் பகுதிகளில் ஏராளமான சிப்காட் தொழில்பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் காஞ்சிபுர மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் இன்றி, அண்டை மாநிலங்கள், வட மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணியாற்றும் தொழிளாளர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்தி இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இப்படி இருக்க அந்த பகுதியில் … Read more

”அந்தரங்க உறுப்புக்களின் போட்டோவை வாட்ஸ் அப்பில் அனுப்பினார்”-பாதிரியார் மீது பகீர் புகார்

பாதிரியார் மீது இளம்பெண் அளித்த பாலியல் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த சைபர் கிரைம் போலீசார் தலைமறைவான பாதிரியாரை தீவிரமாக தேடி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (29). இவர், குழித்துறையை தலைமையிடமாகக் கொண்ட சீரோ மலங்கரை கத்தோலிக்க சபையில் பாதிரியாராக உள்ளார். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு தக்கலை அருகே உள்ள பிலாங்காலை சர்ச் பாதிரியாராக பொறுப்புக்கு வந்துள்ளார். இந்த நிலையில், பாதிரியார் பெனடிக்ட் … Read more

”இந்திய மீனவர்கள் நம்ம எல்லைக்குள் வந்தா இதை செய்யுங்க”- இலங்கை அமைச்சரின் சர்ச்சை பேச்சு!

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கை கடற்பகுதிக்குள் நுழைந்து மீன்பிடித்தால், அவர்களுக்கு எதிராக கடலிலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள் என இலங்கை மீனவர்களுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த அறிவுரை வழங்கியுள்ளார். ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மீன்பிடி தொழிலில் பல்வேறு சிரமங்களை தமிழ்நாட்டு மீனவர்கள் அனுபவித்து வருகின்றனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர் கதையாகவே நடைபெற்று வருகிறது. … Read more

இன்று முதல் ஆவினுக்கு பால் விநியோகம் நிறுத்தம்! தாக்குப்பிடிப்பார்களா சென்னை மக்கள்?

பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 7 ரூபாய் வரை உயர்த்தி தரவேண்டும் என்ற பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை நிகாரகரிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பால் விநியோகம் நிறுத்தப்படுவதாக கால்நடை பால் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஆவின் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் உள்ள கால்நடை விவசாயிகளிடமிருந்து பாலை கொள்முதல் செய்து பதப்படுத்தி மக்களுக்கு விநியோகம் செய்து வருகிறது. அதன்கீழ் தமிழ்நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு சுமார் 27 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை நடைபெறும் நிலையில், அதில் … Read more

FACTCHECK: ‘நோபல் பரிசு பெற மோடி தகுதியானவர்’ என பரிசுக்குழுவை சேர்ந்தவர் சொன்னாரா?

“பிரதமர் மோடி, அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர்; அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக இவர் இருக்கிறார்” என்று நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே கருத்து தெரிவித்திருப்பதாக ஒரு செய்தியை தமிழ்நாடு பாஜக நேற்று ஒரு பதிவிட்டிருந்தது. “பிரதமர் திரு.மோடிக்கு நோபல் பரிசு” இந்திய பிரதமர் திரு.@narendramodi அவர்கள் அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக இவர் இருக்கிறார் – நோபல் பரிசுக்குழுவின் துணைதலைவர் ஆஷ்லே டோஜே … Read more

“என் மகன் தவறு செய்யலை” – பிரதமர் குறித்து அவதூறு மெயில் அனுப்பியதாக சொல்லப்படுபவரின் தாய்

“என் மகன் எந்த ஒரு தவறும் செய்யாத நிலையில், அதிகாரிகள் அவனை அழைத்து சென்று விட்டனர்” என பிரதமர் அலுவலகத்துக்கு பிரதமர் பற்றி அவதூறு இமெயில் அனுப்பியவரின் பெற்றோர் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் சாலியமங்கலம் அடுத்த பூண்டி என்ற பகுதியை சேர்ந்தவர் ஜெயபால். அவரது மகன் விக்டர் ஜேம்ஸ் ராஜா. இவர் தனியார் கல்லூரியில் பிஎச்டி படித்து வருகிறார். இவர் தனது தந்தையின் மெயிலில் இருந்து பிரதமர் பற்றி அவதூறு கருத்துக்களை டெல்லியில் உள்ள பிரதமர் … Read more

அருணாச்சலில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து! தமிழக விமானி உட்பட இருவர் பலி!

அருணாச்சல பிரதேசத்தில் பறந்து கொண்டிருந்த போது இந்திய ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 2 விமானிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் மண்டாலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று நேற்று பறந்துகொண்டிருந்தது. இந்நிலையில் பொம்திலா என்ற பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது திடீரென்று ஹெலிகாப்டரில் இருந்து வந்த தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஹெலிகாப்டரில் இரண்டு விமானிகள் பயணித்ததாக கூறப்படும் நிலையில், காலை 9.15 மணி அளவில் விமானிகளுடனான தகவல் இணைப்பு துண்டிக்கப்பட்டதாக … Read more

50,000 மாணவர்கள் தேர்வு எழுதலையா? எப்படி கோட்டைவிட்டது அரசு? – பின்னணியில் பகீர் தகவல்கள்!

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு நடந்துவரும் நிலையில், மொழித்தாள்களையே 50,000 மாணவர்கள் எழுதாமல் தவிர்த்திருந்தனர். இதன் பின்னணி என்ன என்பதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், கல்வியாளர் நெடுஞ்செழியன் என பலரும் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்திருந்தனர். அந்த விவரங்களை, இங்கு காணலாம். தேர்வு தொடங்கிய முதல்நாளே அதிர்ச்சி! தமிழ்நாட்டில் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. தேர்வு தொடங்கிய முதல் நாளே மிகப்பெரிய அதிர்ச்சியாக தகவல் வெளிவந்தது. அதாவது, சுமார் 50,000 மாணவர்கள் தினசரி தேர்வு எழுதாமல் ஆப்சென்ட் … Read more

”ஆயுதங்களுடன் போட்டோ வீடியோ வெளியிட்டால்..” – கோவை மாநகர காவல்துறை விடுத்த எச்சரிக்கை!

ஆயுதங்களுடன் சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பதிவேற்றம் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மாநகர காவல்துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்… ”கோவை மாநகரில் வலைதள உபயோகிப்பாளர்கள் அவர்களது சமூக வலைதள பக்கங்களில் பொறுப்பற்ற வகையிலும், சட்டம் பற்றிய புரிந்துணர்வு இல்லாமலும், சுய விளம்பரங்களுக்காகவும், கைகளில் கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களை வைத்துக்கொண்டு தோரணையாக புகைப்படங்களை பதிவேற்றம் செய்கிறார்கள். சிலர் ஆயுதங்களை … Read more

ரூ.70 ஆயிரம் கோடி செலவில் இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு ஆயுதங்கள் வாங்க ஒப்புதல்!

இந்திய பாதுகாப்புப் படைகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பல்வேறு ஆயுதங்களை வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி கடற்படைக்கு 60 MADE IN INDIA UTILITY ஹெலிகாப்டர்கள், சூப்பர்சானிக் ஏவுகணைகள் வாங்க பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 9 ஏ.எல்.எச். துருவ் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான திட்டங்களுக்கும், ராணுவத்துக்கு 307 ஏ.டி.ஏ.ஜி.எஸ். ஹோவிட்சர்கள் வாங்கவும ஒப்புதல் தரப்பட்டுள்ளது. Source : … Read more