”மிகுந்த மனவேதனையில் உள்ளேன்; இப்போது எதுவும் பேச முடியாது” – திருச்சி சிவா எம்பி பேட்டி

தனது வீட்டில் நிகழ்ந்த தாக்குதல் மிகுந்த மன வேதனை அளிக்கிறது என்று திமுக எம்.பி., திருச்சி சிவா தெரிவித்துள்ளார். திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள எஸ்.பி.ஐ. காலனியில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீடு உள்ளது. இந்த பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட நவீன இறகுப்பந்து உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைப்பதற்காக, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு புதன்கிழமை காலை வருகை தந்தார். அப்போது, திறப்பு விழா அழைப்பிதழ், பேனர் மற்றும் கல்வெட்டுகளில், திருச்சி சிவா எம்.பி., … Read more

“ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றார்” – பெண் டிசைனர் மீது ஃபட்னாவிஸ் மனைவி பரபரப்பு புகார்

தனக்கு பெண் ஒருவர் ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு புகார் ஒன்றை போலீசிடம் கொடுத்திருக்கிறா அம்ருதா ஃபட்னாவிஸ்.   மகாராஷ்டிரா மாநில துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் மனைவியான அம்ருதா ஃபட்னாவிஸ், தனியார் வங்கி ஒன்றில் நிர்வாகியாக உள்ளார். இந்நிலையில் தனக்கு பெண் ஒருவர் ரூ.1 கோடி லஞ்சம் கொடுக்க முயன்றதாக பரபரப்பு புகார் ஒன்றை போலீசிடம் கொடுத்திருக்கிறார் அம்ருதா ஃபட்னாவிஸ். அந்த புகாரில், “கடந்த 2021 நவம்பரில் அனிக்ஸா என்ற பெண் என்னை … Read more

ஆதார் தகவல்களை மாற்ற இன்னும் 3 மாதங்கள் மட்டுமே இலவசம்.. மத்திய அரசு சொல்வதென்ன?

ஆதார் அட்டை விவரங்களை அடுத்த 3 மாதங்களுக்கு இணையதளத்தில் இலவசமாக புதுப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் தகவல்களை புதுப்பிப்பது கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில், தற்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் லட்சக்கணக்கான மக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக அப்டேட் செய்து கொள்ளும் வசதியை செய்துள்ளது. இதன்படி, மக்கள் myaadhaar.uidai.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி OTP நம்பர் மூலமாக தங்களின் தரவுகளை புதுப்பித்துக் … Read more

“பேரழிவின் காலங்களில் பெண்கள் அனுபவிக்கும் சொல்லமுடியா துயரங்கள்” – ஆஸ்கர் நடிகையின் குரல்

நடப்பாண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் போட்டியிட்ட “எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்” எனும் திரைப்படம், மொத்தம் 7 விருதுகளை வென்று அசத்தியது. இத்திரைப்படத்தில் நடித்த ‘மைக்கேல் யோவ்’-க்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதினை வென்றதற்காக, உலகெங்கிலும் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. முன்னதாக இவர் கோல்டன் குளோப், ஸ்க்ரீன் ஆக்டர்ஸ் கில்ட் விருது மற்றும் இன்டிபென்டன்ட் ஸ்பிரிட் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்நிலையில் தற்போது தனக்கு கிடைத்து வரும் மக்களின் கவனத்தை, மற்றொரு விவகாரத்தின் மீது … Read more

நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணை கட்டையால் தாக்கி தரதரவென இழுத்து செல்லும் அதிர்ச்சி காட்சி!

நடைப்பயிற்சி மேற்கொண்ட பெண்ணைக் கட்டையால் தாக்கி இருசக்கர வாகனம் மற்றும் செல்ஃபோன் ஆகிய இரண்டையும் கொள்ளையடித்த நபர் ஒருவர், அந்தப் பெண்ணைத் தரதரவென இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி வ.உ.சி. சாலைப் பகுதியில் வசித்து வருபவர் சீதா லட்சுமி. இவர் அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறார். வழக்கமாக மாலை நேரத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகச் சாலைப் பகுதியில் உள்ள தனியார் பள்ளி அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, … Read more

நடுவானில் சமோசா, காபியுடன் ஹோலி கொண்டாடிய விமானிகள்.. அதிரடியில் இறங்கிய ஸ்பைஸ்ஜெட்!

விமானத்தை இயக்கிக் கொண்டிருக்கும் போது இரு விமானிகள் காஃபி குடித்துக் கொண்டும் குஜ்யாஸ் என்ற சமோசா சாப்பிட்டுக்கொண்டும் இருந்ததற்காக விமான போக்குவரத்துத்துறை அவர்கள்மேல் அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது. ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்ட போது இஸ்லாமியர்கள் மீது வேண்டுமென்றே துரத்தி துரத்தி கலர் பொடியை வீசுவதும், பெண்கள் மீது அத்துமீறி கலர் பொடியை தூவியதும் என சில சம்பவங்கள் நடந்து, மக்களிடையே முகச்சுழிப்பை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான வீடியோக்களுமே சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு கண்டனங்களை பெற்றிருந்தன. இந்த நிலையில், டெல்லியில் இருந்து … Read more

“விலங்கு சீசன் 2 ஆரம்பிக்குது…” திருச்செந்தூர் முருகன் கோயிலில் நடிகர் விமல் பேட்டி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை வழிபட்டுச் செல்வது வழக்கம். இதில் திரைத்துறை பிரபலங்களும் அரசியல் கட்சியைச் சார்ந்த பலரும் அடங்குவர். அப்படி இன்று நடிகர் விமல் குடும்பத்துடன் சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். வாகை சூடவா, களவாணி திரைப் படங்களில் நடித்த நடிகர் விமல் இன்று தனது மனைவி பிரியதர்ஷினி மற்றம் குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து திருக்கோயில் வளாகத்தில் உள்ள யானை … Read more

+2 பொதுத்தேர்வு எழுதாதவர்களுக்கு சிறப்பு தேர்வு வைக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்

பொதுத் தேர்வெழுத அதிக அளவிலான மாணவர்கள் வராதது குறித்த விவாதம் பரவலாக நடந்து வரும் நிலையில், பொதுத் தேர்வுக்கு வராத 50 ஆயிரம் மாணவர்களின் பின்னணி பற்றி இங்கு விரிவாக காணலாம். பள்ளிகளுக்கு தொடர்ச்சியாக மூன்று, நான்கு மாதம் வரவில்லை என்றாலே அந்த மாணவர்களின் பெயர், வருகை பதிவேட்டில் இருந்து நீக்கப்படும். இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து விசாரணை நடத்தி, டிசி வழங்குவதற்கும் கடந்த காலங்களில் நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். ஆனால் சமீப காலங்களாக, ஒரு … Read more

மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை உயர்வு! ஏன்? அதிர்ச்சி காரணம்

இன்புளுயன்சயா காய்ச்சல் பாதிப்பால் மதுரை அரசு மருத்துவமனையில் வழக்கத்தை விட அதிகமாக வெளிநோயாளிகள் சிகிச்சைக்கு வருவதாக அரசு இராஜாஜி மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது. கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது மக்களை இன்புளுயன்சா காய்ச்சல் அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் இன்புளுயன்சா வைரஸ் பரவி வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பாக முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த காய்ச்சல் நான்கு நாட்கள் வரை பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து மதுரை அரசு … Read more

புதுச்சேரி: “விரைவில் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைப்போம்”- முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுக்கு என தனித்துறை ஏற்படுத்தப்படும் என முதல்வர் ரங்கசாமி பேரவையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி சட்டமன்றத்தில் கடந்த 13 ஆம் தேதி முதல்வர் ரங்கசாமி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை மீது இன்று உறுப்பினர்கள் விவாதம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் ரங்கசாமி, இளைஞர்களின் நலனையும் விளையாட்டையும் ஊக்குவிக்கும் வகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கென தனிதுறை இந்தாண்டு துவக்கப்படும் எனவும், இதற்காக … Read more