ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை எப்படி இருக்கிறது? – மருத்துவமனை அறிக்கை!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.  கடந்த பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஈ.வி.கே.எஸ் இளங்கோவன், 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இடைத்தேர்தலில் வெற்றிபெற்றதை தொடர்ந்து, கடந்த மார்ச் 10-ம் தேதி சட்டமன்ற உறுப்பினராக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு கட்சி மற்றும் நலத் திட்ட … Read more

‘கண்ணை நம்பாதே’ முதல் ‘வாத்தி’ வரை – இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும்!

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படைப்பு, எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம். இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்: திரையரங்கு (Theatre) 1. கண்ணை நம்பாதே (தமிழ்) – மார்ச் 17 2. கோஸ்ட்டி (தமிழ்) – மார்ச் 17 3. குடிமகான் (தமிழ்) – மார்ச் 17 4. டி3 (தமிழ்) … Read more

“எரிபொருளுக்குக்கூட மீன்பிடிக்க முடியா நிலை.. இலங்கை கடற்படைதான் காரணம்”- மீனவர்கள் வேதனை

ராமேஸ்வரத்தில் நடுக்கடலில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடிப்பதாக கரை திரும்பிய தமிழக மீன்பிடி தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் இருந்து நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 2500-க்கும் மேற்பட்ட மீன்பிடித் தொழிலாளர்கள் மீன்பிடி அனுமதி சீட்டு பெற்று கடலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவுக்கும் – தனுஷ்கோடிக்கும் இடையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, மூன்று ரோந்து கப்பல்களில் அங்கு சென்ற இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட … Read more

இபிஎஸ் படம் எரிப்பு விவகாரம்: இரவில் நீக்கப்பட்டு அதிகாலையில் சேர்க்கப்பட்ட பாஜக நிர்வாகி!

கோவில்பட்டியில் எடப்பாடி பழனிசாமி உருவப் படத்தை எரித்த பாஜக நிர்வாகி கட்சியில் இருந்து நேற்று இரவு தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை அவர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி விளக்கு அருகே பா.ஜ.க வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தினேஷ் ரோடி தலைமையில் பாஜக-வினர் சிலர் கடந்த 7 ஆம் தேதி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 4 பேரை … Read more

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு – 2வது முறையாக இன்று மீண்டும் ஆஜராகிறார் கவிதா

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு தெலங்கானா முதலமைச்சர் மகள் கவிதா, இரண்டாவது முறையாக இன்று மீண்டும் ஆஜராகிறார். டெல்லியில் புதிய மதுபான கொள்கை முறைகேடு வழக்கை அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ தனித்தனியே விசாரணை நடத்தி வரும் நிலையில், வழக்கின் முக்கிய புள்ளியாக கருதப்படும் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சரும், கலால் துறை அமைச்சருமான மணிஷ் சிசோடியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே கடந்த ஆண்டு நவம்பர் 15-ம் தேதி அமலாக்கத்துறை தாக்கல் … Read more

"என் ஆப்ரேஷனுக்கு காசு இல்ல.. முதல்வர்தான் காப்பாத்தணும்”- 4 வயது சிறுவன் உருக்கமான வீடியோ

“அம்மா அப்பாட்ட காசு இல்லை, முதல்வர் ஸ்டாலின் அய்யா தான் காப்பாத்தணும்” என சிறுவனொருவன் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழி சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் – சரண்யா தம்பதியரின் மகன் கஜன் (4). இந்த சிறுவனுக்கு, இதயத்தில் துளை மற்றும் இதயத்திற்கு வந்து செல்லும் ரத்த மாற்று குழாயில் பிரச்னை உள்ளன. இதையடுத்து இந்த சிறுவனுக்கு ஐந்து வயதிற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி … Read more

"கௌரவப் பிரச்னையாக பாராமல், சட்டரீதியாக பார்க்கணும்"- ஆன்லைன் ரம்மி தடை பற்றி வானதி

“அதிமுகவில் இருக்கக்கூடிய அடுத்த கட்ட தலைவர்கள் மற்றும் பாஜக நிர்வாகிகள் ஒரு சிலரிடம் கருத்து மோதல் உள்ளது. ஆரோக்கியமான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இது சிக்கலை உருவாக்கும்” என கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். கோவையில் எம்எல்ஏ வானதி சீனிவாசன் நேற்று செய்தியாளர்களை சத்தித்தார். அப்போது பேசிய அவர், “முதல்வர் முதலில் அவருடன் இருப்பவர்களிடம் இருந்து அவரையும் அரசாங்கத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதிமுகவில் இருக்கக் கூடிய அடுத்த கட்ட தலைவர்கள் … Read more

மார்ச் 16ல் ‘தேசிய தடுப்பூசி தினம்’ கடைபிடிப்பதன் முக்கியத்துவம் என்ன? முழு பின்னணி

கொரோனா பாதிப்பால் உலகளவில் கொத்து கொத்தாக மனிதர்கள் தங்களது உயிர்களை பலி கொடுத்த போதுதான், தடுப்பூசியின் தேவையும் அவசியமும் பெருவாரியான மக்களுக்கு புரிந்தது என்றே சொல்லலாம். அந்த புரிதலினாலேயேவும், இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாட்டிலும்கூட தடுப்பூசி பெரும்பாலானோரால் எடுத்துக்கொள்ளப்பட்டது. அந்தவகையில் கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிக்க இரண்டு டோஸ் தடுப்பூசிகளை அதிக இந்தியர்கள் போட்டுக்கொண்டனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. இப்படியாக தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு தற்காலத்தில் மக்கள் மத்தியில் நன்றாகவே மேலோங்கியிருக்கிறது. ஆனால், கொரோனா பரவலுக்கு முன்பு … Read more

“வேறு வேலை இல்லாததால் திமுகவை விமர்சனம் செய்துவருகிறார் அண்ணாமலை”- KKSSR ராமச்சந்திரன்

“அண்ணாமலைக்கு வேறு வேலை இல்லாததால் திமுகவை விமர்சனம் செய்து வருகிறார்” என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் தனியார் திருமண மண்டபம் ஒன்றில், மகளிர் சுய உதவிக் குழுவினருக்கான கடன் தள்ளுபடி அட்டை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் புதிதாக கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் மற்றும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு சுயஉதவிக் குழுவினருக்கு கடன் தள்ளுபடிக்கான … Read more

வேலூர்: கருவேப்பிலை கட்டுக்குள் கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை! மடக்கிப்பிடித்த காவல்துறை

இருசக்கர வாகனத்தில், கட்டை பையில் கருவேப்பிலைகளுக்கு இடையே மறைத்து கடத்தப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ளான ஐம்பொன் சிலையை விரட்டிப்பிடித்த காவல்துறையினர் இரண்டு பேரை கைது செய்துள்ளனர். வேலூர் மாவட்டம் அரியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் ரேகா தலைமையிலான போலீசார், நேற்றிரவு (15.03.2023) மலைக்கோடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சிலர் சிலை கடத்தி விற்க முயல்வதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில், பள்ளிகொண்டா செல்லும் சாலையில் சந்தேகத்திற்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்று … Read more