திடீர் நெஞ்சுவலி காரணமாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்று சமீபத்தில் எம்.எல்.வான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், திடீர் நெஞ்சு வலி காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி சட்டசபை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிட்டு 66 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் தென்னரசு 43 ஆயிரத்து 923 ஓட்டுகள் மட்டுமே பெற்று தோல்வியைத் தழுவினார். இந்த … Read more

"தரம் உயர்த்தப்பட்டு 15 வருஷமாச்சு… இன்னும் கழிவறை வசதிகூட வரலை"- அரசு பள்ளியின் அவலநிலை

காஞ்சிபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு 15 வருடங்கள் ஆகிவிட்டபோதும், போதிய வசதிகள் செய்யப்படாமல் ஒரு அரசுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதனால் அடிப்படை வசதிகள்கூட கிடைக்காமல் மாணவ மாணவிகள் அவதியுற்று வருகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டம் காரை ஊராட்சியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி கடந்த 2008-ம் ஆண்டேவும் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுவிட்டது. ஆனால் தற்போது வரை அங்கு போதிய அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் உள்ளது. இதனால் கடும் சிரமத்துக்கு மாணவ … Read more

விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ குறித்து பரவும் தகவல் – ரசிகர்களிடையே எகிறும் எதிர்பார்ப்பு!

நீண்ட நாள் கிடப்பில் இருந்த விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெளியாகும் தேதி என்ற பெயரில் ஒரு தகவல் சமூகவலைத்தளத்தில் பரவி வருவதால், அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கெளதம் மேனன் – விக்ரம் கூட்டணியில் உருவான ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் டீசர் கடந்த 2017-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்த நிலையில், சில காரணங்களால் படத்தின் படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. அதன்பிறகு, மீண்டும் சில காலம் படப்பிடிப்பு துவங்கி நடந்துவந்த நிலையில், கடந்த … Read more

கோடை வெயிலிலிருந்து சரும பிரச்னைகளை தடுக்க என்ன செய்ய வேண்டும்? மருத்துவர்கள் அறிவுரை!

கோடை வெயிலால் ஏற்படும் சரும பிரச்னைகளில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். கோடை காலத்தில் வெயில் என்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயிலானது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக இருக்கும் என்றும், வெப்ப காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களை கோடையின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் என்னென்ன செய்ய வேண்டும் என இந்திய … Read more

நடிகை அனன்யா பாண்டேவின் ‘புகை’ப்படத்தை கண்டு கொதித்தெழுந்த நெட்டிசன்ஸ்! என்ன நடந்தது?

பிரபல பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே, உறவினரின் திருமண விழாவில் சிகரெட் பிடித்தது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் சுங்கி பாண்டேவின் மகள் அனன்யா பாண்டே. இவர், ஸ்டூடண்ட் ஆப் தி இயர் 2 படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தொடர்ந்து, பதி பட்னி அவுர் வோ என்கிற படத்தில் நடித்தார். இந்த இரு படங்களுக்கும் சிறந்த பிலிம்பேர் விருதை அனன்யா வென்றார். இதைத் தொடர்ந்து, பூரி ஜெகநாத்தின் பன்மொழிப் படமான ‘லைகர்’ படத்தில் … Read more

"அன்று கைது செய்த போலீஸே, இன்று பாதுகாப்பு தந்தனர்!"-கோ பட பாணியில் பேசிய அமைச்சர் உதயநிதி

“தமிழகத்தில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக ஆங்கிலத்தில் பேசுவதற்கு சூழல் உருவாக்கப்பட்டுள்ளது” என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார். தமிழகத்தில் மொழிகள் ஆய்வகம் திட்டமானது, அரசு பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்தும் பொருட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்முறையாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மொழி ஆய்வகத்தை இன்று திறந்துவைத்தார் இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையானது … Read more

"இந்தியாவின் பாதுகாப்பு ஏன் சமரசம் செய்யப்படுகிறது?"- ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு

இந்திய ஏவுகணை மற்றும் ரேடார்களை மேம்படுத்தும் ஒப்பந்தத்தை, மத்திய அரசானது அதானி குழுமம் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த எலாரா நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இதைத்தொடர்ந்து “இந்திய பாதுகாப்பு தொடர்பான கருவிகளை, யார் என்றே அறியாத ஒரு நிறுவனத்திடம் எப்படி ஒப்படைக்க முடியும்?” என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “இந்தியாவின் ஏவுகணை மற்றும் ரேடார் மேம்படுத்தல் ஒப்பந்தம் அதானிக்கு சொந்தமான நிறுவனத்திற்கும், எலாரா என்ற சந்தேகத்திற்குரிய வெளிநாட்டு … Read more

சிம்புவின் 'பத்து தல' இசை வெளியீட்டு விழா எங்கே, எப்போது நடைபெறுகிறது தெரியுமா?

சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் இடம் மற்றும் தேதியை, படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவுறுத்தியுள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு கன்னடத்தில் சிவராஜ்குமார், ஸ்ரீ முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மஃப்டி’ படத்தின் ரீமேக்தான் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்து தல’ திரைப்படம். இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ ஆகியப் படங்களின் இயக்குநர் கிருஷ்ணா இயக்கியுள்ளார். பத்து தல படத்தில் சிம்புவுடன் கெளதம் கார்த்திக், பிரியா … Read more

இரவில் தந்தை மரணம்… காலையில் பொதுத்தேர்வுக்கு சென்ற +2 மாணவன்! கிருஷ்ணகிரியில் சோகம்

ஊத்தங்கரை அருகே தந்தை இறந்த நிலையில், பிளஸ் 2 தேர்வெழுத சென்றுள்ளார் மாணவரொருவர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியையடுத்த கல்லாவி கீழ் காலனியை சேர்ந்தவர் கோடீஸ்வரன். இவர் நோய்வாய்ப்பட்டு உடல்நிலை சரியாமல் இருந்து வந்துள்ளார். அவருடைய மகன் ஜெகத், கல்லாவி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு தொழில் பிரிவில் படித்து வருகிறார். தற்போது +2 மாணவர்களுக்கான அரசு பொதுத்தேர்வை எழுதி வருகிறார் ஜெகத். இந்நிலையில் நேற்று இரவு ஜெகத்தின் தந்தை கோடீஸ்வரன் உடல்நலக்குறைவால் மரணித்துள்ளார். தந்தையை … Read more

35 வருஷம் கழித்து சந்தித்த ரியல் லைஃப் ராம் – ஜானு… வீடுதிரும்பாததால் ஏற்பட்ட விபரீதம்!

96 படத்தைப்போன்று, பள்ளிப் பருவத்தில் காதலித்த சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிந்த ஒரு காதல் ஜோடியொன்று, ஸ்கூல் ReUnion-ல் சந்தித்துள்ளனர். ஆனால் எதிர்பாரா விதமாக இந்த காதல் ஜோடி, குடும்பத்தைவிட்டுச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது. தமிழில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் 96. கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை பிரேம்குமார் இயக்கி இருந்தார். இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற பள்ளிக்கூட … Read more