"ஐடி தலைநகரத்தில்" கலவரத்தை கடை விரிக்கும் பாஜக.. மாஜி அமைச்சர் பரபர தகவல்

அமைதியான, பலவகையிலும் முன்னேறிய மாநிலமான கர்நாடகத்திற்கு பாஜக செய்து கொண்டிருப்பது மிகவும் அவமானகரமானது என்று முன்னாள் கர்நாடக அமைச்சர் கிருஷ்ண பைரே கெளடா கூறியுள்ளார். கர்நாடகத்தில் சமீபத்தில் ஹிஜாப் தொடர்பான சர்ச்சை வெடித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் இது பேசு பொருளானது. சில கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிந்து இஸ்லாமிய மாணவிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டதால் போராட்டங்கள் வெடித்தன. போராட்டங்கள் முற்றி வன்முறை உருவாகும் சூழல் ஏற்பட்ட நிலையில் இதுதொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக … Read more

விரைவில் ஆண்டவர் தரிசனம்… கமலின் 'விக்ரம்' படத்தின் மாஸ் அப்டேட்..!

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் நடிப்பில் ‘ விக்ரம் ‘ படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் . அண்மையில் தொடங்கிய இந்தப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘விக்ரம்’ படத்தின் ரிலீஸ் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. கமல் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம்’ படத்தில் மாஸ்டரில் லோகேஷுடன் பணியாற்றிய விஜய் சேதுபதி , நரேன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோரும் இந்தப்படத்தில் நடிக்கின்றனர். இவர்களுடன் முக்கிய வேடத்தில் … Read more

அரசு ஊழியர்களுக்கு செக் – மாநில அரசு இப்படியொரு உத்தரவு!

கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், கர்ப்பிணி மற்றும் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள், வரும் 17 ஆம் தேதி முதல் அலுவலகத்திற்கு வருகை தர வேண்டும் என, மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில், கடந்த ஜனவரி மாதம், ஒமைக்ரான் வைரஸ் தொற்று காரணமாக, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலை கோரத் தாண்டவமாடியது. இதன் காரணமாக மத்திய – மாநில அரசுகள் ஊரடங்கில் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. அதன் ஒரு பகுதியாக, மத்திய – மாநில … Read more

வலிமை… முதல் நாள்.. முதல் காட்சி.. எத்தனை மணிக்கு தெரியுமா?

ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை . இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஹுமா குரேஷி நடித்துள்ளார். இந்தப் படத்தை பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இதயம் முரளி கலை கல்லூரியான பிக்பாஸ் வீடு.. 80ஸ் நடிகர்களான ஹவுஸ்மேட்ஸ்! இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து தொடர்ந்து அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. பொங்கல் பண்டிகைக்கு வலிமை படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் 50 சதவீத … Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் – அரசு ஊழியர்கள் செம ஹேப்பி!

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில், சிரோமணி அகாலி தளம் தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றால், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என, அக்கட்சித் தலைவர்ச சுக்பிர் சிங் பாதல் தெரிவித்து உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில், முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின் நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு, வரும் 20 ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. … Read more

‘ஹே சினாமிகா’ இளமை ததும்பும் ட்ரெய்லர் வெளியீடு!

அனைத்து தென்னிந்திய மொழிகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் பல்லாயிரக்கணக்கான திரைப்பாடல்களுக்கு நடனம் அமைத்து நாடு முழுவதும் இருக்கும் பிரபல கலைஞர்கள் மாஸ்டர் என்று பாசம் கலந்த மரியாதையுடன் அழைக்கும் பிருந்தா, ‘ ஹே சினாமிகா ’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராகியுள்ளார். வலிமை… முதல் நாள்.. முதல் காட்சி.. எத்தனை மணிக்கு தெரியுமா? ஜியோ ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இப்படத்தில் துல்கர் சல்மான் , காஜல் அகர்வால் மற்றும் அதிதி ராவ் ஆகியோர் முதன்மை வேடங்களை ஏற்றுள்ளனர். குளோபல் ஒன் … Read more

காங்கிரஸோட "டூப்ளிகேட்"தான் ஆம் ஆத்மி.. பஞ்சாபில் மோடி அதிரடி!

பாஜகவும், ஆம் ஆத்மியும் வேறு வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான் என்று பிரியங்கா காந்தி பேசுகிறார். ஆனால் பிரதமர் நரேந்திர மோடியோ, காங்கிரஸ் கட்சியின் நகல்தான் ஆம் ஆத்மி என்று கூறி பதிலடி கொடுத்துள்ளார். பஞ்சாப் தேர்தல் களத்தில் தேசியக் கட்சிகளான பாஜகவும் சரி, காங்கிரஸும் சரி, இரு கட்சிகளும் கண்டு நடுங்கும் கட்சியாக மாறி நிற்கிறது ஆம் ஆத்மி. இக்கட்சிதான் சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களை வெல்லும் என்று கருத்துக் கணிப்புகள் கூறியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் … Read more

எப்பவும் இப்படியே இருங்கண்ணே: தனுஷால் நிம்மதியடைந்துள்ள ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான தனுஷ் , ஐஸ்வர்யா ஜோடி இருவரும் கடந்த 18 வருடங்களுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் இருவரும் திடீரென கடந்த மாதம் 17ஆம் தேதி பிரிய போவதாக அறிவித்தனர். இவர்களின் இந்த முடிவு ரசிகர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கோலிவுட் வட்டாரத்திற்கு பேரதிர்ச்சியாக அமைந்தது. இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். ஆனாலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை. … Read more

குறைந்து வரும் கொரோனா – மாநிலங்களுக்கு மத்திய அரசு திடீர் உத்தரவு!

கொரோனா பரவல் குறைந்து வருவதால், கூடுதல் கட்டுப்பாடுகளை தளர்த்தும்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு அறிவுரை வழங்கி உள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில், கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஒமைக்ரான் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் இந்தியாவுக்கு பரவி கொரோனா பரவலை அதிகரிக்கச் செய்தது. இதன் காரணமாக, டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில், தமிழகம், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், … Read more

எப்போ வேணாலும் கலண்டு விழுந்துடும் போளையே…! ராய் லட்சுமி கொடுத்த ஹாட் போஸ்…!

தமிழ் சினிமாவில் விக்ராந்த் நடித்த கற்க கசடற என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. அதனை தொடர்ந்து இவர், ஜெயம் ரவியின் தாம் தூம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன்பின்னர் அரண்மனை, காஞ்சனா, மங்காத்தா போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றார். இருப்பினும் அம்மணியால் முன்னணி நாயகியாக வர வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் பாலிவுட் பக்கம் சென்ற அவர் அங்கும் ஒருசில படங்களில் நடித்து தனது மவுசை … Read more