பெங்களூருவில் வீட்டு வாடகை… பாதிக்கும் மேல் எகிறிடுச்சு… ஐடி கம்பெனிஸ் சர்ப்ரைஸும், தவிக்கும் ஊழியர்களும்!

பெங்களூருவில் ஒரு நல்ல ஐடி கம்பெனியில் வேலை கிடைத்தால் போதும். நன்றாக செட்டிலாகி விடலாம் என்ற பேச்சு, இளைஞர்கள் மத்தியில் இருப்பதை தவிர்க்க முடியாது. வேலை கிடைச்சாச்சு சரி. வாடகைக்கு வீடு எடுத்து தங்கலாம் என்று தேடிப் பார்த்தால், அப்போது தான் வருகிறது வில்லங்கம். அதாங்க பெரிய சிக்கல். பெங்களூருவை பொறுத்தவரை மாரதஹள்ளி, பெல்லந்தூர், ஒயிட்ஃபீல்டு உள்ளிட்ட பகுதிகளில் ஐடி நிறுவனங்கள் அதிகமிருக்கின்றன. ​பெங்களூருவில் வீட்டு வாடகைஇதனை ஒட்டிய பகுதிகளில் ஐடி ஊழியர்கள் பலரும் வீடு வாடகைக்கு … Read more

"பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா".. கூட்டணி வச்சா என்ன தப்பு.. ஆவேசமான எடப்பாடி பழனிசாமி

மதுரை: பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுவீர்களா என நிருபர்கள் கேட்ட கேள்வியால் சூடான அதிமுக பொதுச் செயலாளர் , “பாஜக என்ன தீண்டத்தகாத கட்சியா?” என பதில் கேள்வியெழுப்பினார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஏற்பட்ட குழப்பமான சூழலில் டெல்லி மேலிட நிர்பந்தத்தால் அதிமுக – பாஜக கூட்டணி உருவானது. இப்போது வரை அந்தக் கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கூட ஜெயலலிதாவை ஊழல் குற்றவாளி என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை … Read more

கொடநாடு வழக்கு: நான் பதறலயே… ஆனா உடனே சிபிஐக்கு மாத்திருங்க: எடப்பாடி போடும் ஸ்பின் பால்!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஓய்வுக்காக கொடநாடு எஸ்டேட் பங்களாவை பயன்படுத்தி வந்தார். அதிமுக ஆட்சி நடந்த 2017ஆம் ஆண்டில் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவம் தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார். கொடநாடு வழக்கில் கேரளாவைச் சேர்ந்த சயன், வாளையார் மனோஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. ஆட்சிக்கு வந்த பின் கொடநாடு வழக்கு சிபிசிஐடி … Read more

தமிழ்நாடு முழுக்க கனமழை தான்.. அடி தூள்: இன்னும் எத்தனை நாள்களுக்கு தெரியுமா?

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த ஒரு வாரம் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 30) ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம் மற்றும் திருச்சிராப்பள்ளி … Read more

கைக்கு வரும் ரூ.2,000… சொல்லி அடிச்ச காங்கிரஸ்… மக்களவை தேர்தல் 2024க்கு மெகா வியூகம் ரெடி!

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 2,000 ரூபாய் வழங்கும் குருஹ லக்‌ஷ்மி (Gruha Lakshmi) திட்டம் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான தொடக்க விழா மைசூருவில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இந்த விழாவில் சுமார் ஒரு லட்சம் பேர் கலந்து கொள்வர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குருஹ லக்‌ஷ்மி திட்டம் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை … Read more

சுங்க கட்டணம் மீண்டும் உயர்வு: பாஜக அரசுக்கு எதிராக குரல் கொடுக்கும் பாமக, தேமுதிக

தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்சாவடிகளில் 27 சுங்கச் சாவடிகளில் கடந்த ஏப்ரம் மாதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. மீதமுள்ள 28 சுங்கச் சாவடிகளில் நாளை நள்ளிரவு கட்டணம் உயர்கிறது. விக்கிரவாண்டி, ஓமலூர், தருமபுரி, சமயபுரம் உள்ளிட்ட 28 சுங்கச் சாவடிகளில் நாளை நள்ளிரவு (செப்டம்பர் 1) முதல் சுங்க கட்டணம் குறைந்தது ரூ.5 முதல் அதிகபட்சமாக ரூ.150 வரை உயர்த்தப்படவுள்ளது. நெடுஞ்சாலைகள் முறையாக பராமரிக்கப்படுவதில்லை, சுங்கச் சாவடிகளில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் வந்துள்ளன இந்த சூழலில் சுங்க கட்டணத்தை … Read more

திருப்பதியில் தரிசனம் செய்ய சரியான நேரம்: கூட்டம் குறைந்தது… மளமளவென தரிசிக்கும் பக்தர்கள்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளதால் தரிசனத்திற்கான காத்திருப்பு நேரம் குறைந்துள்ளது. பவித்ர உற்சவம் நிறைவுதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த மூன்று நாட்களாக பவித்ர உற்சவம் நடைபெற்று வந்தது. கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்களால் ஏற்படும் தோஷத்தை நிவர்த்தி செய்யும் வகையில் இந்த பவித்ர உற்சவம் நடைபெறுகிறது. யாகசாலை பூஜைகளுடன் பவித்ர உற்சவம் நேற்றுடன் நிறைவடைந்தது.கூட்டம் குறைந்ததுபவித்ர உற்சவத்திற்காக ஆர்ஜித சேவைகள் கடந்த 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் இன்று முதல் ஆர்ஜித … Read more

3வது வாரத்திலும் கெத்து காட்டும் ஜெயிலர்: இந்தியாவில் மட்டும் ரூ. 350 கோடியை நெருங்கும் ரஜினி படம்

Jailer Blockbuster: ஜெயிலர் படம் இந்தியாவில் மட்டும் ரூ. 350 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதுவரை இந்தியாவில் ரூ. 320 கோடி வசூல் செய்துள்ளது. ​ஜெயிலர்​நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டைகர் முத்துவேல் பாண்டியனாக ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது. படம் ரிலீஸாகி 20 நாட்களாகியும் ஜெயிலர் படம் தொடர்ந்து நல்ல வசூல் செய்து கொண்டிருக்கிறது. நேற்று இந்தியாவில் மட்டும் ரூ. 3.29 கோடி … Read more

தலைமை செயலகம் மாற்றப்படுமா? – ஒரு முடிவு சொல்லுங்க.. முதல்வரை விடாமல் துரத்தும் ஊழியர்கள்!

தமிழகத்தின் தலைமைச் செயலகமாக ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் கோட்டை இயங்கி வருகிறது. இட நெருக்கடி காரணமாகவும், தமிழக அரசு சொந்த கட்டடத்தில் இயங்க வேண்டும் எனவும் ஆசைப்பட்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்ற கட்டத்தை கட்டினார். 2011ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு, தலைமைச் செயலக கட்டடத்தை, அரசு பன்னோக்கு மருத்துவமனையாக மாற்றி அறிவித்தது. அதன்பிறகு கடந்த 10 … Read more

ஆதித்யா எல்1 மிஷன்: அடுத்த ஆட்டத்துக்கு ரெடியான இஸ்ரோ… சூரியனுக்கு வச்ச குறி!

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ சமீபத்தில் நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த திட்டம் வெற்றி பெற்ற நிலையில் தற்போது சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா என் 1 என்ற விண்கலத்தை விண்ணில் செலுத்தவுள்ளது. பிஎஸ்எல்வி – சி 57 ராக்கெட்டில் செப்டம்பர் 2 தேதி காலை 11.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஆதித்யா எல்1 விண்கலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான பணிகள் … Read more