சைலண்டாக காய் நகர்த்தும் விஜயண்ணா: வெற்றிமாறனுடன் நடந்த மீட்டிங்.!

லியோ, தளபதி 68 படங்கள் என பயங்கர பிசியாக இருக்கிறார் விஜய். அக்டோபர் மாதம் வெளியாகவுள்ள ‘லியோ’ படத்திற்காக பயங்கரமான எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. இதனிடையில் விஜய்யின் புதிய படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் ‘வாரிசு’ ரிலீசுக்கு பிறகு லியோவில் நடித்து முடித்துள்ளார். ‘மாஸ்டர்’ … Read more

"மத்திய அரசால் பேராபத்து வருகிறது".. கையில் காசு கொடுத்து சீரழிக்கும் திட்டம்.. திருமாவளவன் ஆவேசம்

சென்னை: குலக்கல்வி திட்டத்தை மீண்டும் இந்தியாவுக்குள் கொண்டு வர மத்திய பாஜக அரசு முயன்று வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முடி வெட்டுபவரின் மகன் முடிதான் வெட்ட வேண்டும்.. செருப்பு தைப்பவரின் செருப்பு தான் தைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாகவும் திருமாவளவன் தெரிவித்தார். மத்திய அரசு அண்மையில் ‘விஸ்வகர்மா யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இளைஞர்களின் தொழில் திறனை மேம்படுத்துவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக … Read more

தலைமைச் செயலகத்திற்குள் புகுந்த விவசாயிகள் ; மாடியிலிருந்து குதித்து போராட்டம்.. உச்சகட்ட பரபரப்பு!

மகாராஷ்டிராவில் பல்வேறு பகுதிகள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. தொழிற்சாலைகள் அமைப்பதற்காக நகர்புற மற்றும் தொழில் வளர்ச்சிக் கழகம் விவசாயிகளிடம் இருந்து நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரியும், நிலங்களுக்கு உரிய இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் எனவும் விவசாயிகள் போராடி வருகின்றனர். இன்று தலைமைச் செயலகம் முற்றுகையிடப்பட்ட நிலையில், மிகப்பெரிய போராட்டமாக வெடித்தது. மகாராஷ்டிரா மாநிலத்தின் தலைமைச் செயலகமான மந்திராலயம் முன்பு 5000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கூடி போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் தலைமைச் … Read more

குவைத் நாட்டில் வசிப்பவரா? அப்ப 'Sahel App' கட்டாயம் உங்க மொபைலில் இருக்கணும்… ஏன் தெரியுமா?

சர்வதேச அளவிலான பண மதிப்பில் மிகவும் வலிமையான நாடாக குவைத் திகழ்கிறது. இந்திய ரூபாயுடன் ஒப்பிட்டால் ஒரு குவைத் தினார் என்பது இன்றைய நிலவரப்படி 268 ரூபாய் 20 பைசா. இதனால் இந்நாட்டில் பணிபுரிய பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் மிகுந்த ஆர்வம் கொண்டிருக்கின்றனர். வெளிநாடு செல்வோருக்கு NRE & NRO Accounts எவ்வளவு அவசியம்? உரிய நேரத்தில் கட்டணம் குறிப்பாக இந்தியர்கள் பலரும் குவைத்தில் தங்கி வேலை செய்து வருகின்றனர். குவைத் நாட்டில் மின் கட்டணம், குடிநீர் … Read more

என்ஐஏ சம்மன்.. தீயாய் பரவிய செய்தி: வரலட்சுமி சரத்குமார் பரபரப்பு விளக்கம்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து வருகிறார் வரலட்சுமி சரத்குமார். கடந்த 2012 ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘போடா போடி’ படத்தில் சிம்புவின் ஜோடியாக நடித்ததன் மூலம் கோலிவுட் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். இவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சரத்குமாரின் மகள் வரலட்சுமி. இவர் தொடர்ச்சியாக கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைக்களங்களை தேர்ந்தெடுத்து … Read more

நீட் தேர்வு.. "இதுதான் உங்க ரகசியமா".. பிரச்சாரத்திலேயே நீ சொல்லிருக்கணும்.. கொதித்து பேசிய இபிஎஸ்

சென்னை: நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியத்தை அமைச்சர் அண்மையில் கூறிய நிலையில், அதை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக பொதுச்செயலாளர் . “உங்களிடம் நேர்மை இருந்திருந்தால் இந்த ரகசியத்தை பிரச்சாரத்தின் போதே நீங்கள் கூறியிருக்க வேண்டும்” என்றும் அவர் சாடியுள்ளார். சென்னையில் சில வாரங்களுக்கு முன்பு நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த காரணத்தால் மாணவன் ஒருவன் தற்கொலை செய்து கொண்டான். ஏற்கனவே நீட் தேர்வால் அடிக்கடி தற்கொலை நடந்து வரும் நிலையில், இந்த தற்கொலை சம்பவம் … Read more

நாத்திகனா.. இதுக்கெல்லாம் அஞ்சும் ஆள் நான் இல்லை… திருப்பதி தேவஸ்தான புதிய தலைவர் ஆவேசம்!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அறக்கட்டளை தலைவராகக் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த ஒய்.வி. சுப்பாரெட்டியின் பதவிக் காலம் சமீபத்தில் நிறைவடைந்தது. இதையடுத்து அந்தப் பதவியில்புதிய தலைவராக திருப்பதி சட்டமன்ற உறுப்பினர் பூமனா கருணாகர் ரெட்டி நியமிக்கப்பட்டார். அவர் கடந்த 10 ஆம் பதவியேற்ற நிலையில் 24 பேர் கொண்ட ஆட்சிமன்றக் குழுவை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த வாரம் அறிவித்தார். ஆனால் பூமனா கருணாகர் ரெட்டியின் நியமனத்திற்கும், அறங்காவலர் குழுவில் ஊழல் வழக்கில் … Read more

நாட்டுக் கோழி, மட்டன்… வெளுத்துக்கட்டிய இம்ரான் கான்… சிறையில் இவ்ளோ சொகுசு வசதிகளா?

உணவில் விஷம் கலக்கப்படலாம் என்பதால் வீட்டில் சமைத்த உணவை தர வேண்டும் என அவரது மனைவி கோரிக்கை விடுத்திருந்த நிலையில், இம்ரான் கானுக்கு பல்வேறு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. ​ ஆட்சியை இழந்த இம்ரான் கான்பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக 2018 முதல் 2022ஆம் ஆண்டு வரை பதவி வகித்தவர் இம்ரான் கான். கடந்த ஆண்டு நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியைச் சேர்ந்த நவாஷ் … Read more

'ஜெயிலர்' படத்தின் வெற்றி எதிரொலி: 'தலைவர் 170' குறித்த ரஜினியின் அதிரடி முடிவு.!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘தலைவர் 170’ படத்தில் ‘ஜெயிலர்’ சென்டிமென்ட்டை ரஜினி கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஜெயிலர் பார்மூலா’ஜெயிலர்’ பட வெற்றியை தொடர்ந்து ‘தலைவர் 170’ பட வேலைகள் வேகமெடுத்துள்ளது. த.செ. ஞானவேல் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஜெயிலரை போல் தனது அடுத்த படமும் மிகப்பெரிய ஹிட்டடிக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார் ரஜினிகாந்த். இதற்காக ‘ஜெயிலர்’ பார்மூலாவை ‘தலைவர் 170’ படத்திலும் கொண்டு வர வேண்டும் என்ற … Read more

காவிரி நீர்: ஒரே அடியாக கை விரித்த கர்நாடகா அரசு – என்ன செய்யப் போகிறது தமிழக அரசு ?

காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை வழங்காமல் கர்நாடகா அரசு தொடர்ந்து இழுத்தடித்து வருகிறது. இந்த சூழலில் இன்று காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் சார்பாக நீர்வளத்துறைச் செயலாளர் சந்தீப் சக்சேனா கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கர்நாடாகா அரசு தமிழ்நாட்டுக்கு நீர் திறந்துவிடவே முடியாது என்று கூறியுள்ளது. “கர்நாடகாவில் 47 சதவீதத்துக்கு அளவுக்கு நீர் பற்றாக்குறை இருப்பதால் கர்நாடகாவுக்கு தேவையான குடிநீருக்கே தண்ணீர் இல்லை. நான்கு அணைகளில் போதுமான அளவு … Read more