செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் எப்போது? வழக்கறிஞர் டீம் வேகம்! நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்த நிலையில் இன்று புழல் சிறையிலிருந்து நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையால் மே 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டபோது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நீதிமன்ற அனுமதி பெற்று அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர் சென்னை புழல் சிறையில் … Read more

ஜெயலலிதா பேர சொல்லமாட்டீங்களா? – வம்பில் மாட்டிய சென்னை மெட்ரோ.. இபிஎஸ் எச்சரிக்கை!

சென்னையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மெட்ரோ ரயில்கள் இயங்கி வருகின்றன. அத்துடன், சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மெட்ரோ ரயில் முக்கிய பங்கு வகிக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டு ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்று பெயர் மாற்றப்பட்டது. அதே போல சென்ட்ரல் மெட்ரோ என்பது புரட்சித் தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோ என்றும், கோயம்பேடு மெட்ரோவுக்கு புரட்சித் தலைவி ஜெயலலிதா சிஎம்பிடி மெட்ரோ என்றும் பெயர் மாற்றம் செய்து … Read more

விஜய்யின் மாஸ்டர் பிளான்..'லியோ' பட ஆடியோ லான்ச்சில் பங்கேற்கும் கமல்.?: பரபரக்கும் கோலிவுட்.!

விஜய் படங்களின் ரிலீஸ் அளவிற்கு அவருடைய படங்களின் ஆடியோ லான்ச் பங்ஷனையும் திருவிழா போல் ரசிகர்கள் கொண்டாடுவது வழக்கமான ஒன்று. அந்த வகையில் தான் அடுத்ததாக நடக்கவுள்ள விஜய்யின் ‘லியோ’ பட ஆடியோ லான்ச்சிற்காக ரசிகர்கள் ஆரவாரமாக தயார் ஆகி வருகின்றனர். இந்நிலையில் ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து வெளியாகியுள்ள லேட்டஸ்ட் தகவல் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. ‘லியோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த பேச்சுக்கள் தான் கடந்த சில நாட்களாக … Read more

ஒரு வழியா இறங்கி வந்த சீமான் – திமுக கூட்டணிக்கு ஓகே – ஆனா ஒரு கன்டீஷன்!

கூட்டணி, அண்ணாமலை மீது விமர்சனம் என பல்வேறு கருத்துக்களை கரூரில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் , வரவுள்ள மக்களவைத் தேர்தல் தொடர்பாகவும் கட்சி பணிகள் குறித்தும் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார். முன்னதாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய சீமான், தற்போதைய அரசியல் விவகாரங்கள் குறித்து பேசினார். விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் சீமான் பேசும்போது, நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதை நான் வரவேற்கிறேன், எனக்கு … Read more

தளபதி 68 படத்தில் பிகில் ஃபார்முலா: விஜய்ணாவுக்கு ஒரு ஹிட் பார்சல்

Venkat Prabhu: விஜய்யை தன் படத்தில் அப்பா, மகனாக நடிக்க வைக்கப் போகிறார் இயக்குநர் வெங்கட் பிரபு என கூறப்படுகிறது. ​தளபதி 68​லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்திருக்கிறார் விஜய். அந்த படத்தை அக்டோபர் மாதம் 19ம் தேதி ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள். லியோவை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார் விஜய். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு லியோ படப்பிடிப்பு நடந்தபோதே வெளியானது. இந்நிலையில் தளபதி 68 குறித்து … Read more

சீமானை கைது செய்தே ஆக வேண்டும்: நேராக களத்தில் இறங்கிய விஜயலட்சுமி

தன்னுடன் சேர்ந்து வாழ்ந்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்து வீடியோ மூலம் புகார் கூறி வந்த நிலையில் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேரடியாக வந்து புகார் அளித்துள்ளார். சீமானை கைது செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எனக்கு இழப்பதற்கு எதுவுமே இல்லை. நிறைய நேரங்களில் இறந்துவிடலாம் என்றுகூட முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் எனது இறப்பிற்கும் தவறான காரணம் கற்பித்துவிடக்கூடாது. கட்சியின் பொதுச் செயலாளராக இருந்தவரான மறைந்த தடா சந்திரசேகர் … Read more

Fahad Fasil : நடிக்கிற எல்லா படமும் ஹிட்டு !! யாரு சாமி இவரு ?

​கேமியோவா வில்லனா எதுவா இருந்தாலும் ஹிட்டு !!படங்களில் ஹீரோ ரோலில் நடித்து வெற்றி பெறுவது இயல்பு. அப்படி ஹீரோவாக நடித்து வெற்றி பெற்றவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர். அனால், கேமியோ ரோலில் அவர் நடித்த தமிழ் படங்கள் அனைத்துமே வேற லெவல் ஹிட். அது வேற யாருமில்லை, மலையாள நடிகர் ஃபஹத் ஃபாசில் தான். தந்தை ஃபாசில் மற்றும் மகன் ஃபஹத் ஃபாசில்மலையாள பட இயக்குனரான ஃபாசிலின் மகன் தான் ஃபஹத் ஃபாசில். இவர் தனது 20 வயதில் … Read more

ஓடோடி உதவிய பிடிஆர் : அந்த மனசுதான் சார் கடவுள்.. துயரத்திலும் உருகிய உ.பி மக்கள்!

மதுரை ரயில் தீ விபத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஓடோடிச் சென்று உதவி செய்துள்ளார் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். அவர்கள் விமானத்தில் ஏறும் வரை உறுதுணையாகவும் இருந்துள்ளார். முக்கிய துறைக்கு அமைச்சர்திமுக ஆட்சிக்கு வந்ததும் முதல்வருக்கு அடுத்து முக்கிய துறையாக கவனிக்கப்படும் நிதித் துறையை மூத்த தலைவர்களில் ஒருவருக்கு மு.க.ஸ்டாலின் அளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை நிதியமைச்சராக்கி அதிரடி காட்டினார் முதல்வர். முதல்வரின் நம்பிக்கையை பொய்யாக்கவில்லை பழனிவேல் தியாகராஜன். நிதித் துறையில் … Read more

8 years of Thani oruvan : தனிஒருவன் நினைத்துவிட்டால் இந்த உலகத்தில் தடைகள் இல்லை !!

அண்ணன் தம்பி வெற்றி கூட்டணி !தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வருபவர்தான் ஜெயம்ரவி. இவர் இவரின் அண்ணன், மோகன் ராஜா இயக்கிய ‘ஜெயம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பல வெற்றி படங்களை இந்த அண்ணன் தம்பி கூட்டணி கொடுத்திருக்கிறது. ஜெயம் படத்தை தொடர்ந்து M.குமரன் Son of மஹாலக்ஷ்மி, உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம், தில்லாலங்கடி அந்த வகையில் தனி ஒருவன் என இவர்களின் கூட்டணி வெற்றி கூட்டணியாகவே இருந்து வருகிறது. வசூல் … Read more

காலாண்டு தேர்வு 2023 வினாத்தாள்… வந்தது புது அப்டேட்… அரசு பள்ளிகளில் ட்ரையல் ஏற்பாடு!

தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இதையொட்டி தேர்வு அட்டவணை தயாரித்து அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வு தொடங்குகிறது. காலாண்டு வினாத்தாள் தயாரிப்பு6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்கி நடைபெறவுள்ளது. இதையடுத்து 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான அனைத்து … Read more