அன்றைக்கு ரஜினியை கலாய்த்த ரோஜா.. இன்றைக்கு அதே ரஜினியை சுட்டிக்காட்டி பேச்சு.. "சும்மா அதிருதுல்ல"

அமராவதி: சில மாதங்களுக்கு முன்பு நடிகர் ரஜினியை மிகவும் தரக்குறைவாக பேசிய ஆந்திரா அமைச்சர் ரோஜா, இன்றைக்கு அதே ரஜினியின் சினிமா டயலாக்கை பேசி கைதட்டல் வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, சில மாதங்களுக்கு முன்பு அங்கு முன்னாள் முதல்வர் என்.டி. ராமாராவின் 100-வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ரஜினி, என்.டி. … Read more

கல்யாணம் முடிந்த கையோடு புது மாப்பிள்ளை கவின் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு.!

சின்னத்திரையில் இருந்து பலர் வெள்ளித்திரைக்குள் நுழைந்தாலும், ஒருசிலர் மட்டுமே வெற்றி கொடி நாட்டுகின்றனர். அந்த வகையில் சின்னத்திரையில் இருந்து சினிமாவில் நுழைந்து தற்போது பிரபல நடிகராக வலம் வருபவர் கவின். இந்நிலையில் ‘டாடா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் நடிக்கவுள்ள புதிய படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிப்பரப்பான ‘சரவணன் மீனாட்சி’ தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கவின். சீரியல் மூலமாக ரசிகர்களை கவர்ந்த அவர், கமல் தொகுத்து வழங்கிய … Read more

தமிழகத்திற்கு ஹேப்பி நியூஸ் ; காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு?

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே மீண்டும் ஒருமுறை காவிரி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்த போதிலும் தமிழகத்திற்கு ஆகஸ்ட் மாதத்திற்கு வேண்டிய 39.7 டிஎம்சி நீரை தர மறுத்து முரண்டு பிடித்து வருகிறது கர்நாடகா. இதுதொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தை நாடியது. இதனிடையே தமிழகத்திற்கு கடந்த வாரத்தில் தண்ணீர் திறந்துவிட்டது கர்நாடகா. தற்போது கர்நாடகாவில் இருந்து விநாடிக்கு 1900 … Read more

வேலை தேடுறீங்களா? : 14 கோடி புதிய வேலைவாய்ப்புகள் – அதிரடியாக பேசிய பிரதமர் மோடி

ரோஜ்கர் மேளா எனப்படும் வேலைவாய்ப்பு திருவிழா மூலம் பல ஆயிரம் பேருக்கு ஒரே நாளில் பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் இன்று நடைபெற்ற ரோஜர் மேளாவில் காணொலி வாயிலாக கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, 51,000 க்கும் மேற்பட்டோருக்கு பணிநியமன கடிதங்களை பிரதமர் வழங்கினார். சிஆர்பிஎப் உள்பட மத்திய பாதுகாப்பு காவல் படைகளில் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, சந்திரயான்-3 மற்றும் பிரக்யான் ரோவர் ஆகியவை நிலவின் சமீபத்திய படங்களை … Read more

'ஜெயிலர்' வசூல் வேட்டையால் கொண்டாட்டத்தில் ரஜினி: படக்குழுவினருக்கு அளித்த இன்பதிர்ச்சி.!

‘ஜெயிலர்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியால் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் உள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. ரூ. 500 கோடி கலெக்ஷனை கடந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது ‘ஜெயிலர்’ படம். இதனிடையில் இந்தப்படத்தின் சக்சஸ் மீட்டிங்கும் சத்தமே இல்லாமல் நடந்து முடிந்தது. ‘பேட்ட’ படத்திற்கு பிறகு ஒரு முழு நீள ரஜினி படமாக தான் ‘ஜெயிலர்’ வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பேன் பாய் படமாக வெளியாகி வேறலெவல் வரவேற்பை பெற்றது … Read more

இரண்டு நாள்கள் அடித்து வெளுக்கும் கனமழை: மக்களே உஷார் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக் கால் பகுதிகளில் இன்று முதல் ஏழு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், “தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று (ஆகஸ்ட் 28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை என ஐந்து மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் … Read more

பிரக்யான் ரோவருக்கு வந்த புதிய சிக்கல்: உடனே சுதாரித்து செய்த அடடே சம்பவம்! வெற்றி களிப்பில் இஸ்ரோ!

பிரக்யான் ரோவர் தனது பயணத்தின் போது சந்தித்த சிக்கல் ஒன்றை எவ்வாறு முறியடித்து வெற்றிப் பயணம் மேற்கொள்கிறது என்பதை இஸ்ரோ தெரியப்படுத்தியுள்ளது. சந்திராயன் 3 விண்கலத்திலிருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் ஆகஸ்ட் 23ஆம் தேதி மாலை 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது. நிலவின் தென் துருவத்தில் லேண்டர் தரை இறங்கிய நிகழ்வை உலகமே கொண்டாடி வருகிறது. நிலவில் விக்ரம் லேண்டர் தரை இறங்குவதற்கான முயற்சியில் இறங்கிய கடைசி 15 நிமிடங்கள் திக் திக் … Read more

"பெண்கள் ஊர் சுற்ற வேண்டிய அவசியமில்லை".. தலிபான் போட்ட அதிரடி தடை.. இதுக்கு ஜெயிலிலேயே அடைச்சிடலாம்

காபூல்: கல்வி, வேலைவாய்ப்பு என அடுத்தடுத்து பெண்களுக்கு பல்வேறு தடைகளை போட்டு வரும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள், தற்போது பெண்கள் தேசிய பூங்காவுக்கு செல்லவும் தடை விதித்திருக்கின்றனர். பெண்கள் அப்படி ஒன்றும் வெளி இடங்களை சுற்றிப்பார்க்க வேண்டிய அவசியம் இல்லை என அந்நாட்டு தலிபான் அரசு தெரிவித்துள்ளது. ஒரு நாட்டில் பிற்போக்கு சித்தாந்தத்தை கொண்ட அரசு அமைந்தால் அங்கு என்ன விபரீதம் எல்லாம் நடக்கும் என்பதற்கு ஆப்கானிஸ்தானே சிறந்த உதாரணம். அமெரிக்க படைகள் வெளியேறி ஆப்கானிஸ்தானில் தலிபான் அரசு … Read more

'கங்குவா' படம் பற்றி எல்லாரும் சொல்றதை பார்த்தா.. வெறித்தனமான அப்டேட்.!

தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பிரம்மாண்ட படங்கள் உருவாகி வருகிறது. அந்த வகையில் தற்போது உருவாகியுள்ள ‘கங்குவா’ கோலிவுட் சினிமாவின் அடுத்த பிரம்மாண்ட ரிலீசாக இருக்க போகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில் ‘கங்குவா’ படம் திரையுலக பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவை கலக்கி வருகிறது. சிறுத்தை சிவா கார்த்திக்கை வைத்து ஏற்கனவே படம் இயக்கி இருந்தாலும், தற்போது தான் முதன்முறையாக ‘கங்குவா’ மூலம் சூர்யாவும் கைகோர்த்துள்ளார். தமிழ் … Read more

"என்ன ஓபி அடிச்சிட்டு இருக்கீங்க".. போய் வேலைய பாருங்க.. அரசு மருத்துவரை விரட்டிய மா. சுப்பிரமணியன்

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அங்கு ஒரு அறையில் அமர்ந்திருந்த மருத்துவரை விரட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது. தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த சில வாரங்களாகவே பல்வேறு அரசு மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இன்று கன்னியாகுமரியில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நுழைந்தார் மா. சுப்பிரமணியன். அப்போது அமைச்சர் மனோ … Read more