மகளிர் உரிமைத் தொகையில் முக்கிய தளர்வு: கடைசி நேரத்தில் ஸ்டாலின் அறிவிப்பு!

மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட உள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் முக்கிய தளர்வு ஒன்றை அறிவித்துள்ளதால் பலரும் பயன்பெற உள்ளனர். மகளிர் உரிமைத் தொகை வாக்குறுதி!திமுகவின் தேர்தல் வாக்குறுதியின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. ஆட்சிக்கு வந்த பின்னர் நிதி நிலைமை அதற்கு … Read more

'சன்'னால் பதவிக்கு வந்தவர்களுக்கு சந்நியாசி குறித்து தெரியாது… ஸ்டாலினை சாடிய தமிழிசை!

சமீபத்தில் உத்தரப்பிரதேசத்திற்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த், அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் காலின் விழுந்து ஆசி பெற்றார். யோதி ஆதித்யநாத், ரஜினிகாந்தை விட வயதில் இளையவர் என்பதால் அவரது காலில் விழுந்தது சமூக வலைதளங்களில் பெரும் வைரலானது. பலரும் வயதில் குறைந்த யோகி ஆதித்யநாத்தின் காலில் ரஜினிகாந்த் விழுந்திருக்கக்கூடாது என விமர்சனம் செய்தனர். இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகர் ரஜினிகாந்த் வயதில் சிறியவர்களாக இருந்தாலும் யோகிகள் மற்றும் சந்நியாசிகளின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவது தனது வழக்கம் … Read more

ஒரு வாரத்திற்கு விடாது மழை.. இன்று எங்கெல்லாம் மழை தெரியுமா? வானிலை அலெர்ட்!

தமிழகத்தில் கோடைக்காலம் முடிந்த பிறகும் இன்னும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதே சமயம் இரவு நேரத்தில் பெரும்பாலும் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இரவில் மழையும், பகலில் வெயிலுமாக இருப்பதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். அதே சமயம் டெல்டா விவசாயிகள் மழையை ஆவலோடு எதிர்நோக்கி காத்துள்ளனர். இந்த நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், வடதமிழக கடலோரப்பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கிழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி … Read more

காலாண்டு விடுமுறை எத்தனை நாட்கள்? அரசு பள்ளிகளுக்கு வெளியான சூப்பர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் காலாண்டு தேர்வுகள் நடைபெறும். அந்த வகையில் நடப்பு 2023-24ஆம் கல்வியாண்டில் 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி காலாண்டு தேர்வுகள் தொடங்குகின்றன. இதையடுத்து 6 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 18ஆம் தேதி தேர்வுகள் தொடங்கி நடைபெறும். காலாண்டு தேர்வுகள் விடுமுறை6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் … Read more

துண்டுச் சீட்டை ஒப்பிப்பதை முதல்வர் எப்போது நிறுத்துவார்? சிஏஜி அறிக்கையில் எங்கு ஊழல் உள்ளது? ஸ்டாலினை ரவுண்டு கட்டும் அண்ணாமலை!

தமிழக முதல்வர் மயிலாடுதுறை, நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக திருவாரூரில் நாகை எம்.பி. செல்வராஜ் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் திருமண விழாவில் உரையாற்றிய அவர், ஊழல் குறித்து பேச மோடிக்கு என்ன யோக்கியதை இருக்கிறது? என்ன தகுதி இருக்கிறது? மத்திய அரசு செய்துள்ள ஊழல் சிஏஜி அறிக்கையிலேயே அம்பலமாகியுள்ளது என்றும் கூறினார். இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினின் பேச்சுக்கு … Read more

கோவை டூ பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்… வெறும் 5 மணி நேரத்தில்… எகிறிய மில்லியன் டாலர் எதிர்பார்ப்பு!

கோவை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களுக்கு இடையில் தினமும் சராசரியாக 9 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் அதிவேகமாக பயணம் செய்வது ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் (CBE RJT Express). 385 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 43 நிமிடங்களில் கடந்து விடுகிறது. மற்ற ரயில்கள் 7 முதல் 8 மணி வரை பயணிக்கின்றன. இந்த வழித்தடத்தில் சிறப்புமிக்க டபுள் டெக்கர் ரயிலும் (CBE SBC Uday Express) இயக்கப்படுகிறது. டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ்இதில் இரண்டு அடுக்குகளாக … Read more

இந்தியாவிற்கு வருகை தரும் சவுதி இளவரசர்.. அடுத்தக்கட்டத்திற்கு போகும் இந்தியா – சவுதி உறவு!

டெல்லி: சவுதி அரேபியா இளவரசரும், அந்நாட்டு பிரதமருமான முகமது பின் சல்மான் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் 11-ம் தேதி இந்த சுற்றுப்பயணம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்கும் – ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே நீண்டகால நல்லுறவு நிலவி வருகிறது. குறிப்பாக, சவுதி அரேபியா உடனான இந்தியாவின் உறவு மிகவும் வலுவானதாக மாறியுள்ளது. இந்தியாவின் 4-வது மிகப்பெரிய வர்த்தக கூட்டாளியாக சவுதி அரேபியா விளங்கி வருகிறது. மேலும், லட்சக்கணக்கான இந்தியர் சவுதி … Read more

"நாக்கை அடக்கி பேசணும்".. இல்ல உங்க அப்பா விஷயம் வெளியே வந்துரும்.. உதயநிதியை எச்சரித்த ஜெயக்குமார்

சென்னை: அதிமுக நிர்வாகியின் மனைவி காணாமல் போன விவகாரத்தில் ஜெயக்குமாரை சம்பந்தப்படுத்தி அமைச்சர் உதயநிதி பேசிய விவகாரம் பூதாகரமாகியுள்ளது. இதுதொடர்பாக உதயநிதியை ஜெயக்குமார் மிகவும் கடுமையாக எச்சரித்துள்ளார். மதுரையில் அதிமுக மாநில மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்திருந்த அதிமுக நிர்வாகி ஒருவரின் மனைவி காணாமல் போனதாக தகவல் வெளியாகியது. இதனிடையே, இதுதொடர்பாக உதயநிதி நேற்று மயிலாடுதுறையில் நடைபெற்ற திமுக இளைஞரணி கூட்டத்தில் பேசினார். அப்போது அவர், “அதிமுக மாநாட்டிற்கு வந்திருந்த நிர்வாகி ஒருவரின் … Read more

திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் திருமாவளவன்.. சட்டென சொன்ன ஜெயக்குமார்.. திகைக்கும் ஸ்டாலின்

சென்னை: திமுக கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் விரைவில் வெளியேறப் போவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி அங்கம் வகிக்கும் போதிலும், திருமாவளவனின் சமீபகால பேச்சுகள் அவர் கூட்டணியில் இருந்து விலகி விடுவாரோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற விசிக பொதுக்கூட்டத்தில், “எம்.பி. பதவியில் இருக்க வேண்டுமே என பயந்து போய் கூட்டணியில் ஒட்டிக்கொள்ளும் ஆள் இந்த … Read more

அதிமுக மாநாட்டிற்கு வந்தவரின் மனைவி மாயம்.. ஜெயக்குமாரை அட்டாக் செய்த உதயநிதி

மயிலாடுதுறை: அதிமுக மதுரை மாநாட்டிற்கு வந்தவரின் மனைவி மாயமான சம்பவத்தை குறிப்பிட்ட அமைச்சர் , அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயக்குமாரை அதனுடன் சம்பந்தப்படுத்தி கிண்டல் அடித்துள்ளார். மதுரையில் அதிமுக மாநில மாநாடு கடந்த வாரம் நடைபெற்றது. மிக பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர். இத்தனை பிரம்மாண்டமாக நடந்த போதிலும், அதிமுக மாநாட்டில் சில விரும்பத்தகாத சம்பவங்களும் நடைபெற்றதை மறுக்க முடியாது. குறிப்பாக, மாநாட்டிற்கு வந்திருந்த தொண்டர்கள் பலர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த … Read more