ரஞ்சி கோப்பை கிரிக்கெட், ஜார்கண்ட் அணிக்கு எதிராக தமிழக அணி சிறப்பான ஆட்டம்.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 74 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் 38 அணிகள் கலந்து கொண்டுள்ளன. தமிழக அணி டெல்லி மற்றும் சத்தீஷ்கர் அணிக்கு எதிரான ஆட்டங்களை டிரா செய்திருந்த நிலையில், தனது 3-வது ஆட்டத்தில் ஜார்கண்ட் அணியுடன் விளையாடி வருகிறது. நேற்று தொடங்கிய இந்தப் போட்டியில் தமிழக … Read more

#BigBreaking || திருடு போன விருத்தாசலம் விருத்தாம்பிகை சன்னதி கோபுரத்தின் 3 கலசங்கள் பெரியார் நகரில் கண்டுபிடிப்பு.! ஒருவர் கைது.!

கடலூர் மாவட்டம்,  விருத்தாசலம் விருத்தாம்பிகை அம்மன் சன்னதி கோபுரத்தில் 3 கலசங்கள் வைக்கப்பட்டு இருந்தன.  சுமார் 3 அடி உயரம் கொண்ட இந்த கலசங்களில் தலா 100 கிராம் என 300 கிராம் தங்கமுலாம் பூசப்பட்டு இருந்தது.  கடந்த இரு தினங்களுக்கு முன் வழக்கமான பூஜைகள் முடிந்தவுடன் சிவாச்சாரியர்கள் கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது விருத்தாம்பிகை அம்மன் சன்னதி கோபுரத்தில் 3 கலசங்கள் திருடு போனது தெரியவந்தது. … Read more

கோவை மேயர் முதல் நாள்.. முதல் கையெழுத்து.. பொதுமக்கள் பாராட்டு.!

கோவை மேயராக இன்று கல்பனா ஆனந்த்குமார் பதவியேற்றவுடன் போட்ட முதல் கையெழுத்து பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தில் சமீபத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. இதில், 21 மாநகராட்சிகளிலும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றனர். இந்த நிலையில் நேற்று வார்டு கவுன்சிலர் பதவி ஏற்ற நிலையில், இன்று மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது. இதில் கோவை … Read more

ஜனநாயகப்படுகொலை.. வெற்றி பெற்ற சிபிஎம் தலைவரை.. தாக்கி தோல்வியடைய வைத்த திமுகவினர்.! கோவையில் பரபரப்பு.!

நேற்று திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு குறிப்பிட்ட சில இடங்களை ஒதுக்கீடு செய்தது, அதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு விருப்பப்பட்ட இடங்களுக்கு வேட்பாளர்களை அறிவித்தனர்.  இன்று மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்று வருகிறது. சிபிஎம் வேட்பாளரை அடைத்து வைத்து திமுகவினர் அராஜகம்#theekkathir |#dmk |#cpim |#cpm pic.twitter.com/3ukkmzKaaF — Theekkathir (@Theekkathir) March 4, 2022 இதற்கிடையில், கூட்டணி கட்சிகளுக்கு … Read more

#BigBreaking || எல்லாரையும் ராஜினாமா செய்ய சொல்லுங்க., போர்க்கொடி தூக்கும் திருமாவளவன்.! கூட்டணி தர்மத்தை காப்பாத்துங்க.!

விடுதலை சிறுத்தை கட்சி : தர்மபுரி மாவட்டம் பொ. மல்லாபுரம் பேரூராட்சி தலைவர் தேர்தலில் விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரை வீழ்த்தி திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.  கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் தேர்தலில் அறிவிக்கப்பட்ட விடுதலை சிறுத்தை கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து, திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த நிலையில், திமுக கூட்டணியில், போட்டி வேட்பாளர்கள் வெற்றி குறித்து திமுக தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட … Read more

#BigBreaking || இரு நகராட்சி பறிபோனது – திமுகவை வீழ்த்திய சுயேச்சை வேட்பாளர்கள்.! பின்புலமாக இருந்த அரசியல் கட்சி யார் தெரியுமா?! 

குமாரபாளைம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் திமுகவை வீட்டில் சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இதேபோல், செங்கோட்டை நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில், அதிமுகவின் ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளரை வீழ்த்தி சுயேச்சை வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். திமுக வேட்பாளர் சத்தியசீலன் 15 வாக்குகள் பெற்ற நிலையில், அதிமுக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளர் விஜய கண்ணன் 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். … Read more

உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை.. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்.!!

தமிழகத்தின் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 152 ரூபாய் உயர்ந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தை தொடர்ந்து உலகம் முழுவதும்  முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்கு சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தின் முதலீடு செய்து வருகின்றனர். நேற்று 22 கார்ட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 4864 ஆகவும், 8 கிராம் ஆபரண தங்கம் ரூ. 38912-க்கு விற்பனை செய்யப்பட்டது. 24 காரட் தங்கம் விலை, … Read more

தமிழகத்தில் இன்று கொட்டி தீர்க்க போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்.!!

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, இன்று கடலோர தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள் ( தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை கடலோர தமிழகம் … Read more

தமிழகத்தில் இன்று இந்த 3 மாவட்டங்களுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.!

தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலும் கோவில் திருவிழாக்கள் சிறப்பு பண்டிகை உள்ளிட்ட தினங்களை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அய்யா வைகுண்டர் அவதார தின விழா இன்று நடைபெற உள்ளது. இந்த விழாவையொட்டி இன்று கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று மாநில அரசு அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக மார்ச் 12 ஆம் தேதி வேலை … Read more

மறைமுக தேர்தலுக்கான மதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது. 12,819 வார்டு கவுன்சிலர் பதவிக்கு அமைதியான முறையில் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்தியது.  ஓட்டு எண்ணிக்கை கடந்த 22ஆம் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. இதையடுத்து, வெற்றி பெற்ற மாமன்ற உறுப்பினர்கள் நேற்று கவுன்சிலர்களாக பதவி ஏற்றுக்கொண்டனர். இன்று மேயர் … Read more