மாடுகளை சுற்றித் திரிய விட்டால் உரிமையாளர்களுக்கு அபராதம், சென்னை மாநகராட்சி எச்சரிக்கை.!

பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படும் வகையில் மாடுகளை சுற்றித் திரிய விட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியில், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் மாநகராட்சி  பொது சுகாதாரத்துறையினரால்  கால்நடை பிடிக்கும் வாகனங்கள் மூலம் பிடிக்கப்பட்டு, புதுப்பேட்டை  மற்றும் பெரம்பூரில் உள்ள மாநகராட்சி மாட்டுத் தொழுவங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வருகின்றது.  … Read more

தொடரும் கைதுகள் : மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் – மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.!

தொடரும் கைதுகள் : மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள டிவிட்டர் பதிவில், “வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள்  8 பேரை சிங்களக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்! பிப்ரவரி மாதத்தில் மட்டும் இதுவரை 80 தமிழக மீனவர்களை இலங்கை … Read more

சுந்தரபாண்டியம் பேரூராட்சி : அதிமுகவை சேர்ந்த 7 கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்தனர்.!

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சுந்தரபாண்டியம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற 7 அதிமுக கவுன்சிலர்கள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளனர். தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு மாநகராட்சி, 5 நகராட்சி, 9 பேரூராட்சியை திமுக கைப்பற்றியது. இதனையடுத்து மாற்று கட்சி கவுன்சிலர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பேரூராட்சி 15 வார்டுகளை கொண்டது இந்த பேரூராட்சியில் திமுக 7 வார்டுகளையும், அதிமுக 7 … Read more

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு-சென்னை வானிலை ஆய்வு மையம்.!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காற்றின் கிழக்கு திசை வேகம் மாறுபாட்டால், தமிழகத்தில் 10 மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கோயமுத்தூர், திண்டுக்கல், நீலகிரி, விருதுநகர், திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி, இராமநாதபுரம், கன்னியாகுமரி … Read more

சென்னையில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்.. தமிழக முதல்வர் தொடக்கம்.!

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தேனாம்பேட்டையில் முதலமைச்சர் இன்று காலை தொடங்கி வைத்துள்ளார். இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயை ஒழிக்க இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக போலியோ நோய் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா முழுமைக்கும் … Read more

இனி இந்த இடங்களில் டாஸ்மாக் கடைகளை திறக்க கூடாது-உயர்நீதிமன்றம் உத்தரவு.!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தாலுக்கா ஆரம்பாக்கம் கிராமத்தில் உள்ள யாழினி நகரில் டாஸ்மாக் கடை திறக்க தடை விதிக்கக்கோரி, அந்தப் பகுதியை சேர்ந்த, அருண் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த பகுதி வேளாண் நிலம் என்பதால் டாஸ்மாக் கடை திறக்கப் போவதில்லை. சட்ட விதிகளின்படி உரிய இடத்தில் அமைக்க அனுமதிக்கப்படும் என்று அரசு … Read more

பள்ளி மாணவியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய இளைஞர்..போக்சோவில் கைது.!

பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கீழ் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் செபஸ்டியன் என்பவர் வசித்துவருகிறார். இவர் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது பள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இந்த நிலையில் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளைக் கூறி செபாஸ்டியன் அந்த பள்ளி மாணவியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் அந்த மாணவி தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதனையடுத்து இது … Read more

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்! தமிழகத்திற்கு எதிராக சத்தீஷ்கர் அணி நிதான ஆட்டம்.!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் தமிழக அணிக்கு எதிரான ஆட்டத்தில் சத்தீஷ்கர் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. எலைட், ‘ஹெச்’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி  தனது இரண்டாவது போட்டியில் சத்தீஷ்கர் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது.  இதில் முதலில் பேட்டிங் செய்த தமிழக அணியில் தொடக்க ஆட்டக்காரர்ளான கௌஷிக் 27 ரன்களிலும், சூர்யபிரகாஷ் 21 ரன்களிலும் ஆட்டமிழக்க அடுத்து … Read more

உடன்குடி அனல் மின்நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் உத்தரவை திரும்பப் பெறவேண்டும்.. தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சி கோரிக்கை..!

உடன்குடி அனல் மின் நிலைய விரிவாக்க பணிகளுக்காக நிலம் கையக்கப்படுத்தும் பணிகளை அரசு கைவிட வேண்டும் என  நாம் தமிழர் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அனல்மின் நிலைய 2 மற்றும் 3-ஆம் நிலை விரிவாக்கத் திட்டப் பணிகளுக்காக நிலங்களை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல் தொழிற்சாலைகள், நெடுஞ்சாலைகள், அணு … Read more

மக்கள் குறைதீர்ப்பு கூட்டம்! திங்கள்கிழமை நடத்தப்படும் என அறிவிப்பு.!

சென்னையில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடத்தப்படும் என மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் விஜயா ராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கொரோனா பெருந்தொற்று காரணமாக மக்கள் குறைதீர் கூட்டம் நடத்துவது நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தொற்று குறைந்து வருவதால், மக்கள் குறைதீர் கூட்டத்தை மீண்டும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.  அதன்படி, வரும் 28-ஆம் தேதி திங்கள் கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் … Read more