போலியோ சொட்டு மருந்து முகாம்! தேனாம்பேட்டையில் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார்.!

ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கான போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தேனாம்பேட்டையில் முதலமைச்சர் நாளை காலை தொடங்கி வைக்கிறார். இளம்பிள்ளை வாதம் என்னும் போலியோ நோயை ஒழிக்க இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்டு வந்தது. இதன் காரணமாக போலியோ நோய் இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்தது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே சொட்டுமருந்து முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் இந்தியா முழுமைக்கும் உள்ள … Read more

உடல் ஆரோக்கியம் சார்ந்த சவால் போட்டிகள்! சுகாதார துறை அமைச்சர் முதலிடம்.!

சுதந்திர தின விழாவை முன்னிட்டு இந்திய அளவில் நடைபெற்ற உடல் ஆரோக்கியம் சார்ந்த சவால் போட்டிகளில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் முதலிடம் பிடித்தார். இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் சிங்கார சென்னை 2.o திட்டத்தின் கீழ் உடற்பயிற்சி, நடைபயிற்சி மற்றும் மிதிவண்டி ஓட்டுதல் போன்ற பொதுமக்களின் உடல் ஆரோக்கியம் சார்ந்த பயிற்சிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சிங்கார சென்னை 2.0 வீதி விழா என்ற நிகழ்வின் கீழ் … Read more

அந்தமானில் உள்ளாட்சித் தேர்தல்.. தமிழக பாஜக அண்ணாமலை பிரச்சாரம்.!

அந்தமானில் மார்ச் 6ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனையடுத்து அங்கு உள்ள பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அந்தமான் சென்றுள்ளார். அந்தமானில் மார்ச் 6ஆம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் திமுக, அதிமுக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றனர். இந்த நிலையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய தமிழக … Read more

பெண்ணின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து வெளியிட்ட இளைஞர்.. கைது செய்த போலீஸார்.!

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் செங்கல்பட்டு மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலையத்தில் ஆஜராகி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தன்னுடைய புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து யாரோ ஒரு மர்ம நபர் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருவதாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த பெண் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த செங்கல்பட்டு காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் சிவக்குமார், காவல் உதவி ஆய்வாளர் தனசேகரன் ஆகியோர் … Read more

டெல்டா மாவட்டங்களில் மார்ச் 2ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

டெல்டா மாவட்டங்களில் மார்ச் 2ம் தேதி கனமழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் காரணமாக தமிழகத்தில் மிதமானது முதல் கன மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  டெல்டா மாவட்டங்களான திருவாரூர், தஞ்சை , நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில்  மார்ச் 2ம் தேதி கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. மேலும், புதுக்கோட்டை, தூத்துகுடி, திருநெல்வேலி கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய … Read more

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஓ.பி.எஸ் இரங்கல்.!!

தூத்துக்குடி மாவட்டம், கோயில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் மற்றும் தொடர் விபத்துகளை தடுக்க தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஆண்டு துவக்கத்தில் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த வடுகப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களத்தூர் கிராமத்தில் உள்ள ஆர்.கே.வி.எம். பட்டாசு ஆலையில் திடீரென்று ஏற்பட்ட வெடிவிபத்தில் நான்கு பேர் உயிரிழந்தது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே … Read more

தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு.. மகிழ்ச்சியில் குடும்ப அட்டைதாரர்கள்.!!

ரேஷன் கடைகளில் கைரேகை சரிபார்ப்பின்றி பொருட்களை வழங்கலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அனைத்து ரேஷன் கடைகளின் விற்பனையாளர்களுக்கு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், நியாயவிலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள் விநியோக திட்டத்துக்கு இன்றியமையா பண்டங்கள் வழங்கும்போது கைவிரல் ரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது.  இணைய தளம் வேலை செய்யவில்லை என்றும் இதனால் விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ள இயலவில்லை என்றும், ஒரு சில பகுதிகளில் ரேஷன் … Read more

தமிழகத்தில் இன்று (26.02.22) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. முழுவிபரம்.!

தமிழகத்தில் இன்று பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது. போரூர் பகுதி : கோவூர் தண்டலம், ஆதிலட்சுமி நகர், மதுரா அவென்யூ, ஆகாஷ் நகர், தரபாக்கம் காவனூர் நடைபாதை தெரு, தச்சர் தெரு, பொன்னியமன் கோயில் தெரு, லாலா சத்திரம் மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள பகுதிகள். பெரம்பூர் பெரியார் நகர்  :  எஸ் . ஆர் … Read more

உடல்நலக்குறைவால் முன்னாள் முதலமைச்சர் காலமானார்.!!

ஒடிசா முன்னாள் முதலமைச்சர் ஹேமானந்தா பிஸ்வால் நேற்று  காலமானார். இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராகவும், ஒடிசாவின் முன்னாள் முதல் அமைச்சராகவும் இருந்தவர் ஹேமானந்தா பிஸ்வால். இவர்  சமூக விரோத வகுப்புவாத மற்றும் பிற ஆபத்தான செயல்பாடுகளை தடுப்பதற்கான தேர்வு குழு உறுப்பினர், மொழியியல் சிறுபான்மையினர் மீதான ஹவுஸ் கவுன்சில் கமிட்டி உறுப்பினர், நூலக குழு உறுப்பினர், கிராமப்புற வளர்ச்சிக்கான குழு உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளை திறன்பட செயல்பட்டவர்.  இவர் 1989 முதல் 1990 வரையிலும், மீண்டும் … Read more

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டிக்கு நிகழ்ந்த விபரீதம்… திருப்பத்தூர் அருகே சோகம்..!

தண்டவாளத்தை கடக்க முயன்ற மூதாட்டி ரயில் மோதி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், நூருல்லாபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி (80) . இவரது உறவினர் வீட்டிற்கு செல்வதற்கு செல்ல ரயில்வே கேட்டை கடக்க முயன்றார். அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சோதனை ஓட்டத்திற்காக சென்ற ரயில் அவர் மீது மோதியது.  இந்த விபத்தில் அவர் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு … Read more