அரசியல் காழ்ப்புணர்ச்சி.. திமுக அரசுக்கு ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம்.!!

முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் அவர்களை மற்றொரு வழக்கில் கைது செய்து அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கும் தி.மு.க. அரசிற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிகாரம் கள்ளினும் காமத்தினும் போதை மிக்கது. அதிக அதிகாரம் அளவு கடந்த போதையைத் தரும். அதிகாரத்தைக் கையாண்டு ஒரு முறை அனுபவப்பட்டுவிட்டவர்கள், வெகு சுலபத்தில் அதனைக் கைவிடத்துணியார். மக்களாட்சி முறைக்கு இது முற்றிலும் புறம்பானது.” என்றார் பேரறிஞர் அண்ணா . … Read more

#INDvSL || ஓவருக்கு 10 ரன்னை இலக்காக நிர்ணயித்த இந்திய அணி.! இரு அரைசதம்., சம்பவம் செய்த இளம் சிங்கங்கள்.!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது இன்று நடைபெறும் முதலாவது டி20 போட்டி இரவு 7 மணிக்கு அட்டல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்கியுள்ளது. இதில், டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் ஷனகா பௌலிங் தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சிறப்பான ஒரு தொடக்கமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 32 பந்துகளில், 4 … Read more

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 அதிமுக வேட்பாளர்கள் திமுகவில் இணைந்துள்ளனர்.!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 அதிமுக வேட்பாளர்கள் திடீரென திமுகவில் இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இதில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. இந்த நிலையில் தேர்தல் வெற்றிக்குப் பின்னர் வெற்றி பெற்ற மற்ற கட்சி வேட்பாளர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த ஒரே … Read more

#INDvSL || இலங்கையை துவம்சம் செய்த இந்திய அணி., 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி.!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது இன்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டி ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பௌலிங் தேர்வு செய்தது.. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கமே சிறப்பான ஒரு தொடக்கமாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய ரோஹித் சர்மா 32 பந்துகளில், 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 44 ரன்களை சேர்த்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான … Read more

கடைக்கு வந்த வாலிபர்கள் பட்டப்பகலில் செய்த காரியம்.! கதறி துடித்த பெண்மணி.!

கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற வில்லுக்குறி பகுதியை சேர்ந்த சண்முகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு லதா எனும் மனைவி இருக்கின்றார்.  இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வருகின்றார். இத்தகைய நிலையில், லதாவின் கடைக்கு பைக்கில் 2 வாலிபர்கள் வந்து சிகரெட் இருக்கிறதா என்று கேட்டு இருக்கின்றனர்.  இதன் காரணமாக, சிகரெட்டை எடுக்க லதா திரும்பிய நேரத்தில் ஒரு வாலிபர் லதாவுடைய கழுத்தில் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளார். இதை … Read more

தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்! அதிமுக அறிவிப்பு.!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 28-ஆம் தேதி தமிழகம் முழுவது கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆளும் திமுகவின் கையாலாகாத் தனத்தையும், திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும், நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக மக்களுக்கு தெளிவாக புரிகின்ற வகையில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமாக செய்திகளை தந்து கொண்டிருந்த கழக … Read more

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்கள் – வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்.!

உக்ரைனில் சிக்கித் தவிக்கும் தமிழக மாணவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, வெளியுறவு அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். உக்ரைன் நாட்டில் ரஷ்யா ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், அங்கு சிக்கித் தவிக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அங்கு குடியேறியவர்களை சிறப்பு விமானம் மூலம் பாதுகாப்பாக மீட்க மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் … Read more

கோவில்பட்டி பட்டாசு ஆலையில் தீ விபத்து 4 பேர் பலி.!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் விரைவாக ஈடுபட்டுள்ளனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த பட்டாசு ஆலை தீ விபத்தில் தங்கவேல், கண்ணன், … Read more

அடுத்த குடியரசு தலைவர் இவர்தனா? ரகசிய ஆலோசனை., மறுப்பு., விருப்பம்.!

வருகின்ற ஜூலை மாதத்துடன் தற்போதைய இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் பதவி காலம் முடிவடைகிறது. இதனை முன்னிட்டு புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே, வரும் 2024 ஆம் ஆண்டு நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, காங்கிரஸ் கட்சி இல்லாமல் மூன்றாவது ஒரு மாற்று அணியை உருவாக்க மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், மகாராஷ்டிரா முதல்வர் … Read more

பதிலடி கொடுக்கும் உக்ரைன்., இருதரப்பில் உயிர்சேதம்., இரு நாடுகளும் வெளியிட்ட பலி எண்ணிக்கை.!

உக்ரைனின் இரு நகரங்களை ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஏவுகணை, ராணுவ டாங்கி, போர் விமானங்கள் மூலம் உக்ரைன் நாடு மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது.  மேலும், உக்ரைன் நகரங்கள் மீது பாராசூட் மூலம் நூற்றுக்கணக்கான வீரர்களை ரஷ்யா களமிறக்கி உள்ளது. உக்ரைனின் தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் மேலும் இரு பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் ரஷ்ய … Read more