அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன

பொதுமக்களுக்கு சலுகை வழங்கும் நோக்கில் இலங்கை சதொச நிறுவனம் அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகளை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய, சீனாவில் இந்து இறக்குமதி செய்யப்பட்ட உருளைக் கிழங்கு ஒரு கிலோ கிராம் 240 ரூபாவாகவும், வெள்ளை கௌபி ஒரு கிலோ கிராம் 998 ரூபாவாகவும், இந்திய பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராம் 265 ரூபாவாகவும், சிவப்பு கௌபி ஒரு கிலோ கிராம் 940 ரூபாவாகவும், கீரி சம்பா ஒரு கிலோ கிராம் 254 ரூபாவாகவும், … Read more

மியன்மாருக்கு சட்டவிரோதமான வழிகளில் வேலைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு வேண்டுகோள் – பாதுகாப்புச் செயலாளர்

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் மற்றும் ஆட்கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மூலம் மியன்மாருக்கு வேலைக்கு செல்வதைத் தவிர்க்குமாறு அனைத்து இலங்கையர்களுக்கும் இலங்கை அரசாங்கம் கடுமையாக அறிவுறுத்துகிறது. மியன்மாருக்கு சட்டவிரோதமாக வேலைக்காகச் சென்ற இலங்கையர்கள் குழுவொன்று, மியன்மாரில் பயங்கரவாத குழுக்களால் நடத்தப்படும் சைபர் கிரைம் பகுதியில் உள்ள முகாமில் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கை பிரஜைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும், 89 இலங்கையர்கள் … Read more

தலதா ஊர்வலத்திற்கான கொப்பரைகள் இராணுவ தளபதியால் வழங்கிவைப்பு

இலங்கை இராணுவத்தினரின் வருடாந்த பாரம்பரியமாக, பதினாறு தொன் கொப்பரை 2024 ஆகஸ்ட் 01 நேற்று கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் ஊர்வலத்தின் வெளிச்சத்திற்காக 11 வது வருடமாக வழங்கப்பட்டது. இந்த இந் நிகழ்வில் பிரதம அதிதியாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ கலந்து கொண்டார். இந்த முயற்சியானது, விஜயபாகு காலாட் படையணி படையினரால் பல்வேறு படையணிகளின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டது, குறிப்பாக ஸ்ரீ தலதா மாளிகையின் தேவைக்கு உதவுவதை நோக்கமாக இது … Read more

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதட்ட நிலைமை தொடர்ந்தால் அதற்கு முகங்கொடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன

மத்திய கிழக்கில் நிலவும் பதட்ட நிலை தொடர்ந்தால் அதனை எதிர்கொள்வது தொடர்பில் முன்கூட்டிய தயார்நிலைக்காக மூன்று விசேட குழுக்களை நியமிக்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானம், மிகவும் சரியானதாகும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி தெரிவித்தார். சர்வதேச செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியாவிட்டாலும், அதன் காரணமாக நாடு வீழ்ச்சியடையும் வரை பார்த்துக்கொண்டிருக்கத் தேவையில்லை எனத் தெரிவித்த அமைச்சர், ஏற்படக்கூடிய எந்தவொரு சூழ்நிலையையும் எதிர்கொள்ளத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் … Read more

புங்குடுதீவில் அட்டைப் பண்ணை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

யாழ் புங்குடுதீவு பிரதேசத்தில் நீர்வேளாண்மை உற்பத்திகளுக்கு பொருத்தமானதென அடையாளப்படுத்தப்பட்ட இடங்களில் கடலட்டை பண்ணை உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விசேட கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அமைச்சரின் யாழ்ப்பாணத்திலுள்ள அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற குறித்த சந்திப்பின்போது துறைசார் அதிகாரிகள் மற்றும் பயனாளிகளது கருத்துக்கள் கேட்டறியப்பட்டு ஆராயப்பட்டது. செயற்படுத்தலில் காணப்படும் இடர்பாடுகளை நிவர்த்தி செய்து பண்ணைகளை அமைப்பதற்கு விரைவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஏதுனிலைகளை உருவாக்கி கொடுக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சரினால் அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீழ்ந்த நாட்டை இரண்டு வருடத்தில் மீட்பது அதிசயம் – முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம

கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்த நாட்டை இரண்டு ஆண்டுகள் என்ற குறுகிய காலத்தில் ஸ்திரமான நிலைக்குக் கொண்டு வந்தது அதிசயமாகும். உலகில் இவ்வாறான பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்த எந்தவொரு நாடும் இவ்வளவு குறுகிய காலத்தில் ஸ்திரத்தன்மையை அடையவில்லை என முதலீட்டு மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அறிவு, அனுபவம் மற்றும் உலகளாவிய தொடர்புகளின் அடிப்படையில் வீழ்ந்த நாட்டை மீட்கக்கூடிய ஒரே தலைவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே … Read more

செவிலியர் பராமரிப்பு சேவைக்காக இஸ்ரேல் புறப்படும் 126வது குழுவுக்கு விமான பயணச் சீட்டுக்கள் கையளிப்பு

வீட்டு செவிலியர் பராமரிப்பு சேவைக்காக இஸ்ரேல் நோக்கி புறப்படும் 126வது குழுவின் 19 பேருக்கு வவிமான பயணச் சீட்டுக்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் நேற்று (31) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இடம்பெற்றது. இந்த குழு இம்மாதம் 4ஆம் திகதி இஸ்ரேல் நாட்டிற்கு புறப்பட உள்ளது. அதன்படி எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4ஆம் திகதி இலங்கையிலிருந்து இஸ்ரேல் செல்லவுள்ள இக்குழுவினருடன் இந்த வருடம் 693 பேர் … Read more

ஜனாதிபதி நிதியத்தின் ஆகஸ்ட் மாத புலமைப்பரிசில் தொகை இன்று புலமைப்பரிசில் பெறுபவர்களின் கணக்குகளுக்கு நேரடியாக வைப்புச் செய்யப்படும்

வங்கிக் கணக்குகளில் பணம் வைப்பு செய்யப்பட்டமை குறித்து புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு குறுஞ்செய்தி (SMS). ஜனாதிபதி நிதியத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் புலமைப்பரிசில் திட்டங்களின் கீழ் தகுதி பெற்ற புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கான 2024 ஆகஸ்ட் மாதத்திற்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு இன்று (01) புலமைப்பரிசில் பெறுபவர்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக வைப்புச் செய்யப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் வங்கிகளில் வைப்பு செய்யப்படும் போது, புலமைப்பரிசில் பெறுபவர்கள் அனைவருக்கும் இது குறித்து குறுஞ்செய்தி (SMS) மூலம் தெரிவிக்கப்படும். 2022/2023 க.பொ.த சாதாரண தரத்தில் சித்தி … Read more

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் 40 வருடங்களை முன்னிட்டு விசேட நிகழ்வுகள்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் 40வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தலைமையில் வைத்தியசாலை வளாகத்தில் விசேட கொண்டாட்ட நிகழ்வு இன்று (01) இடம்பெற்றது. மிசுகோஷி ஹிடேகி, இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். 1984 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி 1001 படுக்கை வசதிகளுடன் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலை … Read more

‘காஸா சிறுவர் நிதியத்திற்கு’ பங்களிப்பதற்கான சந்தர்ப்பம் ஜூலை 31 ஆம் திகதியுடன் நிறைவு

இனியும் பணம் வைப்புச் செய்ய வேண்டாம் என்று ஜனாதிபதி அலுவலகம் கோரிக்கை. இன, மத பேதமின்றி இத்திட்டத்துடன் கைகோர்த்த அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதி அலுவலகம் நன்றி தெரிவிப்பு. பலஸ்தீனத்தின் காஸா பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் இராணுவ நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களுக்கு அடிப்படைத் தேவைகளை வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் படி ஸ்தாபிக்கப்பட்ட ‘காஸா சிறுவர் நிதியத்திற்கு’ (Children of Gaza Fund) பங்களிப்பதற்கான அவகாசம் 2024 ஜூலை 31ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ளது. கடந்த ரமழான் நோன்பு … Read more