உற்பத்தித் துறையில் பணியாற்றுவதற்காக 81 பேர் கொரியா பயணம்..

கொரியாவில் தொழில் வாய்ப்புக்காக தகுதிபெற்ற 81 பேர் அடங்கிய குழு ஒன்று நேற்று (31) தென் கொரியா நோக்கி புறப்பட்டது. உற்பத்தித் துறையில் பணியாற்றுவதற்காக சென்ற இக்குழுவில் 03 பெண்களும் அடங்குவர்

இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவினால் இலங்கை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகாரசபை அதிகாரிகளுக்கு பயிற்சி

இலங்கை இராணுவ பொறியியல் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டீசி பீரிஸ் ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், இலங்கை தேசிய பயிலுனர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின் 18 பயிற்சி அதிகாரிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி நிகழ்ச்சி கொழும்பு 07 ஹெக்டர் கொப்பேவடுவ விவசாய மற்றும் பயிற்சி நிறுவனத்தில் 2024 ஜூலை 22 முதல் 24 வரை நடாத்தப்பட்டது. வினைத்திறன் மிக்க தொழில்வாய்ப்பிற்கான பயிற்சி அதிகாரிகளின் திறன்கள் மற்றும் இயலுமைகளை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும். … Read more

2023-2027 ஐந்தாண்டு மூலோபாயத் திட்டம் உட்பட உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட தேசிய தொழில்துறை தளத்தை உருவாக்குவதற்கான தேசிய தொழில்துறை கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது

• 2030 ஆம் ஆண்டுக்குள்.  மொத்தத் தேசிய உற்பத்திக்கு தொழில்துறையின் பங்களிப்பை 20% ஆக உயர்த்துதல். தொழிற்படைக்கு தொழில்முயற்சியாளர் பங்களிப்பை 7% ஆக அதிகரித்தல். தொழில்துறை ஏற்றுமதியின் பங்களிப்பை மொத்தத் தேசிய உற்பத்தியில் 20% ஆக அதிகரிப்பதே நோக்கமாகும். • ஜூன் 2024 வரை 3,925 உற்பத்தித் தொழில்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. • 2023-2024 ஆம் ஆண்டில் ரொக் பொஸ்பேட் விற்பனை மூலம் 1080 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது. • இரத்தினக்கற்கள், ஆபரணங்கள் மற்றும் வைரத் … Read more

ஈரானிலும் உலகிலும் ஏற்படக்கூடிய நிலைகளினால் இலங்கைக்கு வரக்கூடிய பாதிப்புகளை எதிர்கொள்ள 03 விசேட குழுக்களை நியமித்தார் ஜனாதிபதி

ஈரானில் உள்ள ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் படுகொலையின் காரணமாக ஈரான் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார அழுத்தங்களை எதிர்கொள்வதற்கு முன் ஆயத்தமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 03 விசேட குழுக்களை நியமிதுள்ளார். இதன்படி, தேசிய பாதுகாப்பு தொடர்பான விசேட குழுவொன்றும், பொருளாதாரத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டிருப்பதோடு அந்த இரண்டு குழுக்களின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்கான உயர்மட்ட குழுவொன்றையும் ஜனாதிபதி நியமித்துள்ளார்.   பொதுமக்கள் … Read more

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஓகஸ்ட் 01ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 31ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில், சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல தடவைகள் … Read more

ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டப் போட்டியில் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் கலந்துச் சிறப்பித்தார்.

ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டத் தொடர் இம்முறை யாழ்ப்பா¾ணத்தில் நடைபெறுகிறது. யாழ்ப்பாண பல்கலைக்கழக உள்ளக அரங்கில் பூப்பந்தாட்டத் தொடருக்கான ஆரம்ப நிகழ்வு (31/07/2024) நடைபெற்றது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்கள் கலந்துச் சிறப்பித்தார். 12 நாடுகளைச் சேர்ந்த 514 வீர, வீராங்கனைகளின் பங்குபற்றுதலுடன் இன்று ஆரம்பமாகியுள்ள ஒன்பதாவது உலக தமிழ் பூப்பந்தாட்டத் தொடரின் இறுதி போட்டிகள் எதிர்வரும் 04 ஆம் திகதி நடைபெறவுள்ளன. 33 பிரிவுகளின் கீழ் இந்த போட்டிகள் … Read more

ஒகஸ்ட் மாத எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றம் இல்லை..

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இம்மாதம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதற்கமைய தற்போது காணப்படுகின்ற சில்லறை விலையில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அறிக்கை மூலம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது

ஒன்பது வளைவு பாலம் மற்றும் தெம்மோதரை புகையிரத தண்டவாளத்தை பாதுகாப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஒன்பது வளைவு பாலத்தை சுற்றியுள்ள பிரதேசத்தில் சுற்றுலா முகாமைத்தவ வேலைத்திட்டம் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மத்திய கலாச்சார நிதியம் ஆகியவற்றிற்கிடையிலான புரிந்துர்ணர்வு ஒப்பந்தம் பிரதமர் தினேஷ் குனவர்தன தலைமையில் (29) பிரதமர் அலுவலகத்தில் கைச்சாத்தடப்பட்டது. இலங்கையில் முதன்முறையாக தேசிய பாரம்பரிய தளத்துடன் இணைந்து ஆம்புலன்ஸ் சேவையொன்று இங்கு ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வேலைத் திட்டத்தின் இரண்டாவது கட்டமாக தெம்மோதரை புகையிரத நிலையத்தை அண்டியதாக சுற்றுலா முகாமைத்துவ வேலைத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கும் … Read more

முட்டை விலையை குறைக்க நடவடிக்கை – வர்த்தக அமைச்சர்

வர்த்தகர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் தாம் நினைத்தபடி எல்லை மீறி பொருட்களின் விலை ஏற்றங்களை மேற்கொணடால் அரசாங்கம் தலையிடும் என்று வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார். குறிப்பாக் பண்டிகைக் காலமொன்றை நெருங்கும்பொழுது முட்டைக்கான நுகர்வு அதிகரிக்கும். அவ்வேளையில் நுகர்வோருக்கு மலிவு விலையில் முட்டைகளை வழங்கும் நோக்கில் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். கடந்த காலங்களில், சில பிரதேசங்களில் முட்டை … Read more