சாரணர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளை அனைத்து வழிகளிலும் வலுப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பங்களிப்பை பரந்தளவில் பெற நடவடிக்கை

75,000 ஆக இருந்த சாரணர்களின் எண்ணிக்கை 150,000 வரை அதிகரிக்க அரசாங்கத்தின் ஆதரவு. சாரணர் இயக்கத்திற்கு புதிய கட்டிடம் – 2000 இளம் பெண் சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு ‘ஜனாதிபதி பதக்கம்’ வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. சாரணர் இயக்கம், கெடட் படைப் பிரிவு, இளைஞர் படையணி உள்ளிட்ட இளைஞர் அமைப்புகளை சகல வழிகளிலும் பலப்படுத்தி நாட்டின் முன்னேற்றத்திற்கு இளைஞர்களின் பரந்த பங்களிப்பைப் பெறுவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதற்குத் தேவையான … Read more

தேங்காய் உற்பத்தியில் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகளை முன் வைக்க நேரடி தொலைபேசி இலக்கம் 

தேங்காய் உற்பத்தியை தாக்கும் வெண் ஈக்கள் நோய் உள்ளிட்ட எந்த பிரச்சனையாக இருந்தாலும், விவசாயிகள் நேரடியாக தொடர்பு கொள்வதற்கு உடனடி தொலைபேசி இலக்கமொன்றை வழங்குமாறு கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமர்வீர தென்னை பயிர்ச் செய்கை சபைக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். அதன்படி, தென்னை உற்பத்தி தொடர்பான எந்த பிரச்சனைகளையும் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் எதிர்வரும் (ஓகஸ்ட்) 05ஆம் திகதி முதல் நேரடி தொலைபேசி இலக்கம் ஒன்றை அறிமுகம் செய்ய தென்னை பயிர்ச் செய்கை … Read more

புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம்

புகையிரத ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரத்தை மாற்றியமைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதம் 01ஆம் தேதி முதல் காலை 10.00 மணிக்கு ஆசன ஒதுக்கீட்டு நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை இதுவரை காலமும் இரவு 07.00 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது.

பாண் விலையை குறைக்காத பேக்கரி உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை..

பாண் விலையை குறைக்காத பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு ஒரு வார கால அவகாசம் வழங்குவதாகவும், விலையை குறைக்காவிடின், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை கொள்ளவுள்ளதாகவும்; வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலீன் பெர்னாண்டோ நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது தெரிவித்தார். அண்மையில் பேக்கரி உற்பத்தியாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது பாண் விலையை குறைப்பதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது பாண் விலையை 10.00 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சில பேக்கரி உரிமையாளர்கள் … Read more

பால் மாவின் விலையை குறைப்பது குறித்து கலந்துரையாடல்…

பால்மாவின் விலையை குறைப்பது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்களுடன் அடுத்த சில தினங்களில் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்தார். நேற்று (30) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதன்படி, பால் மாவின்; விலையை ஓரளவு குறைப்பு முடியும் என நம்புவதாக தெரிவித்த அமைச்சர், விலையை கணக்கிடுவதற்கு நுகர்வோர் அதிகாரசபைக்கு பணிப்புரை வழங்கியுள்ளதாகவும், இறக்குமதியாளர்களுடன் கலந்துரையாடி நுகர்வோருக்கு தேவையான சலுகைகளை வழங்குவதாகவும் அமைச்சர் மேலும் … Read more

போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முப்படைகளின் உயரிய பங்களிப்பு.

  சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி வசதிகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. அதிக மாணவர்கள் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சிவில் மருத்துவ மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு ஆரம்பம். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிந்துரைத்த இஸட் புள்ளி அடிப்படையில் மாத்திரமே ஆட்சேர்ப்பு – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன(ஓய்வுபெற்ற). யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் கொடுப்பனவுகள், மருத்துவ புனர்வாழ்வு மற்றும் வாழ்நாள் முழுவதும் பராமரிப்பை வழங்குதல் உள்ளிட்ட பல நடவடிக்கைகளின் ஊடாக, … Read more

சீன மக்கள் விடுதலை இராணுவம் நிறுவப்பட்டதன் 97வது ஆண்டு நிறைவு விழா

இலங்கைக்கான சீனத் தூதரகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம் நிறுவப்பட்டதன் 97வது ஆண்டு நிறைவு நிகழ்வு நேற்று முன்தினம் (ஜூலை 29) கொழும்பில் உள்ள ஷங்ரிலா ஹோட்டலில் இடம்பெற்றது. இலங்கைக்கான சீனத் தூதுவரான அதிமேதகு கி சென்ஹோங் மற்றும் சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் சோவ் போவ் ஆகியோரின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் உரையாற்றிய பாதுகாப்புச் … Read more

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , கண்டி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூலை 31ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 30ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் , கண்டி, காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில், சில இடங்களில் 50 மி.மீ.க்கும் அதிகமான ஓரளவு பலத்த மலை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் மாத்தளை மாவட்டத்திலும் பல … Read more

பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம்

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட புள்ளிவிபர தரவுகளின்; அடிப்படையில் பொது இடங்களில் டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, வீடுகளில் டெங்கு நுளம்பு பெருகும் இடங்கள், பொது இடங்களான அரச கட்டிடங்கள், பாடசாலைகள், மேலதிக நேர (டியூஷன்) வகுப்பறைகள், மத வழிபாட்டுத் தலங்கள், கட்டுமான பணிகள் நடைபெறும்; கட்டிடங்கள் போன்றவற்றில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் அதிகரித்துள்ளது. தற்போதைய மழையுடனான காலநிலையினால் டெங்கு நுளம்புகள் பெருகும் … Read more

நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிப்பர்

அரசியலுக்கு முன் நாட்டைப் பற்றி சிந்திக்கும் அனைவரும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார்கள் என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரங்கள் இராஜாங்க அமைச்சர் ரோஹன திஸாநாயக்க தெரிவித்தார். உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் இக்கட்டான காலங்களில் உறுவாவதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், கடந்தகாலத்தில் நிலவிய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதில் வலுவான தலைமைத்துவத்தின் பண்புகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.   ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே … Read more