யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து இராணுவ வீரர்களுக்கும் நீதி வழங்கப்பட்டுள்ளது

• போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த முப்படைகளின் உயரிய பங்களிப்பு.   • சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்வி வசதிகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.   • அதிக மாணவர்கள் கல்வி கற்க வாய்ப்பு கிடைத்துள்ளது.   • சிவில் மருத்துவ மாணவர்களுக்கான ஆட்சேர்ப்பு ஆரம்பம்.   • பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பரிந்துரைத்த இஸட் புள்ளி அடிப்படையில் மாத்திரமே ஆட்சேர்ப்பு – பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன(ஓய்வுபெற்ற). யுத்தத்தின் போது அங்கவீனமடைந்த அனைத்து … Read more

ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதை அடுத்து அஸ்கிரிய மகாநாயக்க தேரரிடம் ஆசி பெற்ற செந்தில் தொண்டமான்!

ஜனாதிபதித் தேர்தல் திகதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சியாம் நிகாயாவின் அஸ்கிரிய பிரிவின் வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன மகாநாயக்க தேரரிடம் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் ஆசி பெற்றார். மேலும், கிழக்கு மாகாணத்தில் அனைத்து சமூகங்களுக்கிடையில் நிலவும் சமாதானம் மற்றும் நல்லிணக்கம் பற்றியும் சகல சமூகங்களுக்கிடையிலும் சிறந்த புரிந்துணர்வை ஏற்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் வணக்கத்துக்குரிய தேரருக்கு விளக்கமளித்தார். அத்துடன், பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவும் சம்பளப் பிரச்சினைகள் மற்றும் … Read more

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தம்

நுகர்வோருக்கு சிறந்த வினைத்திறனான சேவையை வழங்குவதற்கும் நியாயமான கட்டணத்தை பரிந்துரைப்பதற்கும் 1991 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று வெகுஜன ஊடகத்துறை, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தற்போது, சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு, அதற்காக சட்டமா அதிபரின் … Read more

குழந்தைகளிடையே பரவிவரும் வைரஸ் மற்றும் சுவாச நோய்கள் குறித்து எச்சரிக்கையாக இருங்கள்

இந்த நாட்களில் சிறுவர்களிடையே இன்புளூவன்ஸா அறிகுறிகள் மற்றும் மேல் சுவாசக்குழாய் வைரஸ், காய்ச்சல் நிலை என்பன அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா அறிவித்துள்ளார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ தகவல் இணையத்தளத்திற்கு இன்று (30) கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். சளி பரிசோதனை செய்வதன் மூலம் இத் தொற்று இன்புளூவன்ஸா என்பதை அறிந்துகொள்ள முடியும் என்றும், மூச்சு விடுவதில் சிரமம், வாந்தி … Read more

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் (ISTRM) உத்தியோகப்பூர்வ இணையத்தளம் அங்குரார்ப்பணம்

உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறைக்கான இடைக்கால செயலகத்தின் (ISTRM) உத்தியோகப்பூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் தலைமையில் நடைபெற்றது. இடைக்கால செயலகத்தின் முன்னேற்றம் குறித்து அக்கறை காட்டுவோருக்கான பிரதான தகவல் மூலமாக இந்த இணையத்தளம் செயற்படும். இதுகுறித்த அறிக்கையை இந்த இணையத்தளத்தில் அறிந்துகொள்ள முடியும். 1983 – 2009 ஆம் ஆண்டில் வடக்கு கிழக்கில் இடம்பெற்ற மோதல் நிலைமைகள் தொடர்பில் நிலைமாறுகால நீதியை செயற்படுத்தல் மற்றும் அதன்போதான … Read more

இந்த வருடத்தின் முதல் நான்கு மாதத்தில் பெருந்தோட்டப் பயிர்களின் ஏற்றுமதி வருமானம் 1118 மில்லியன் டொலர் வரை அதிகரிப்பு

தேயிலை, இறப்பர், தென்னை, கறுவா மற்றும் மிளகு போன்ற பெருங்கோட்ட பயிர்களின் ஏற்றுமதி ஊடாக 2024 ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப் பகுதியில் நாட்டிற்கு கிடைத்த ஏற்றுமதி வருமானம் 1118.06 மில்லியன் டொலர் வரை அதிகரித்துள்ளது. விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் நேற்று (29) இடம்பெற்ற பெருந்தோட்ட பிரிவின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் நாட்டின் பெருந்தோட்டப் … Read more

இலங்கையின் மனித வள அபிவிருத்திக்கு ஜெர்மனியின் உதவி…

பிரதமர் தினேஷ் குணவர்தன அவர்களுக்கும் ஜேர்மன் தூதுவர் கலாநிதி பீலிக்ஸ் நியூமன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (2024.07.29) கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை – ஜேர்மன் கைத்தொழில் பயிற்சி நிறுவனத்தை 1959 ஆம் ஆண்டு ஆரம்பித்ததன் மூலம் இலங்கை இளைஞர் சமூகத்திற்கு தொழில்சார் கற்கைநெறிகள் மூலம் பல நன்மைகளை வழங்கியமைக்காக ஜேர்மனிக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார். தற்போதைய உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் நிறுவனத்தை மேம்படுத்த புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய … Read more

இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பை சட்டமாக்குதல்

இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பை முறைசார்ந்த வகையில் நிறைவேற்றிக் கொள்வதற்கான சட்டமூலத்தைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பைத் தயாரிப்பதற்காக ஓய்வுநிலை உயர்நீதிமன்ற நீதிபதி கே.ரீ.சித்ரசிறி அவர்களின் தலைமையிலான குழுவினால் இலங்கை கிரிக்கட் இற்கான புதிய யாப்பு வரைவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர், தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்களும் … Read more

வாகன இறக்குமதிக்கான பாதை வரைபடம் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும்..

தனியார் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் கவனத்தில் கொள்ளப்படும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தினார். அக்டோபர் மாதம் ஆகும்போது பொதுப் போக்குவரத்துக்கான வாகனங்களை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய முடியும் என்றும்; அமைச்சர் சுட்டிக்காட்டினார். வாகன இறக்குமதி குறித்து விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு தேவையான அறிக்கையை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடுவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதனூடாக எதிர்கால பாதை வரைபடம் வெளியிடப்படும் … Read more

போக்குவரத்து வாகனங்களின் இறக்குமதி தொடர்பான பாதை வரைபடத்தை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட ஏற்பாடு…

தனியார் போக்குவரத்து வாகன இறக்குமதி தொடர்பாக 2025ஆம் ஆண்டின் முதல் காலாண்டு பகுதியில் கவனத்தில் கொள்ளப்படும் என நிதி இராஜாக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க வலியுறுத்தினார். அக்டோபர் மாதம் ஆகும்போது பொதுப் போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்கான வாகனங்களை இறக்குமதி செய்ய ஆரம்பிக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார். போக்குவரத்து வாகனங்கள் இறக்குமதிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள தடையை நீக்குவதற்கு அவசியமான அறிக்கையை ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடுவதற்கு நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதனூடாக எதிர்கால பாதை திட்டம் … Read more