அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியலில் ஈடுபட்டால், நாட்டில் மூன்றாவது உள்நாட்டுப் போர் ஏற்படுவதைத் தடுக்க முடியாது

• பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களும் புதிய பொருளாதார பரிமாற்றச் சட்டத்தை ஏற்றுக்கொண்டாலும், சிலர் வெளியே வந்து மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள் -பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன. அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சம்பிரதாய அரசியல் சித்தாந்தங்களை பின்பற்றினால் நாட்டில் மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும், அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பொறுப்பேற்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன சுட்டிக்காட்டினார். பாராளுமன்றத்தில் உள்ள 225 உறுப்பினர்களின் ஒருமித்த கருத்துடன் புதிய பொருளாதார … Read more

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் கொழும்பு துறைமுகம் உலகின் வேகமாக வளர்ச்சியடையும் துறைமுகமாக பெயரிடப்பட்டுள்ளது

23.6% சிறந்த வளர்ச்சி விகிதத்துடன் செயல்பாட்டு செயல்திறனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் – துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு. 2024 இல் 4.3 மில்லியன் சர்வதேச பயணிகள் : ஜூலை 2023 உடன் ஒப்பிடும்போது 26.10% அதிகரிப்பு. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் உத்தேச இரண்டாவது முனையத்தின் நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் – விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) நிறுவனத்தின் தலைவர். 2024 ஆம் ஆண்டில் 23.6% எனும் வேகமான … Read more

தலசீமியா நோயாளர் சிகிச்சையில் இலங்கை கடற்படையின் பங்களிப்புக்கு சுகாதார அமைச்சு பாராட்டு

இலங்கையில் இலவச சுகாதார சேவைகள் மூலம் சுமார் 2500 தலசீமியா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சின் தலசீமியா நோயாளர் பராமரிப்புக்கு இலங்கை கடற்படையின் தனித்துவமான பங்களிப்பை மதிப்பிடும் விசேட வைபவம் இன்று (29) சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன தலைமையில் சுகாதார அமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா உட்பட தலசீமியா நோயாளர் பராமரிப்பு நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்த … Read more

ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

ஆசிய கிண்ணத்தை வென்ற சமரி அதபத்து உள்ளிட்ட இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வாழ்த்துத் தெரிவித்தார். “உங்களுடைய தோல்வியற்ற பயணத்திற்கு உங்கள் திறமை, அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு செயற்பாடு சான்றாக அமைகிறது. நீங்கள் எமது நாட்டை கௌரவப்படுத்தியுள்ளீர்கள் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க     

1250 பாடசாலைகளை ஸ்மார்ட் பாடசாலைகளாக ஒரே வலையமைப்பின் கீழ் கொண்டு வருவதற்குக் கல்வி அமைச்சு நடவடிக்கை

எதிர்வரும் சில மாதங்களில் நாடு முழுவதும் உள்ள முன்னணிப் பாடசாலைகள் 1250ஐ ஸ்மார்ட் பாடசாலைகளாக அபிவிருத்தி செய்து, அவற்றை ஒரே வலையமைப்பின் கீழ் கல்வி அமைச்சினால் செயல்படுத்தவுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார். அதற்காக சீனாவிடமிருந்து 20 மில்லியன் டொலர் நிதி உதவி கிடைக்கவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க பாலிகா வித்தியாலயத்தில் தரம் ஒன்றிலிருந்து ஐந்து வரையான சகல வகுப்புகளையும் ஸ்மார்ட் வகுப்புகளாக மாற்றி, அவற்றை மாணவர்களின் பயன்பாட்டிற்கு வழங்கும் … Read more

கடந்த இரண்டு ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 2024 இல் சுற்றுலா தலங்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் வருகையில் பாரிய அதிகரிப்பு

• 2024 முதல் 6 மாதங்களில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளில் 40% வீதமானோர் வெளிநாட்டிவர்கள். • 2030க்குள் வனப் பரப்பை 32% ஆக அதிகரிக்க நடவடிக்கை. • சதுப்புநில மறுசீரமைப்புக்காக இலங்கைக்கு ஐக்கிய நாடுகளின் Flagship விருது. • 13 ஆண்டுகளுக்குப் பிறகு, யானைகளின் சனத்தொகை குறித்து கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை – வனஜீவராசிகள், வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர், சட்டத்தரணி பவித்ரா வன்னியாராச்சி. கடந்த இரண்டு வருடங்களுடன் ஒப்பிடுகையில், 2024 ஆம் … Read more

பொலிஸ் மா அதிபர் நியமனம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு கண்டு, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்தத் தேவையான சூழல் உருவாக்கப்படும்

• தேர்தல் என்பது மக்கள் இறையாண்மையின் ஒரு பகுதி – அதை மீற அனுமதிக்க முடியாது. • செப்டம்பர் 21 ஆம் திகதிக்கு அப்பால் ஜனாதிபதித் தேர்தலை நடத்த ஒருபோதும் தயாரில்லை. • நாட்டில் சுதந்திரமானதும் சுயாதீனமானதுமான தேர்தலை நடத்த தேர்தல் ஆணைக்குழுவுக்கு ஆதரவளிப்பது அனைவரின் முழுமையான கடமையாகும். • சபாநாயகருடனும் பிரதமநீதியரசருடனும் கலந்துரையாடி பொலிஸ் மா அதிபர் நியமனத்தில் எழுந்துள்ள பிரச்சினைக்கு ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதித் … Read more

நாட்டின் சில பிரதேசங்களில் பல தடவைகள் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூலை 29ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூலை 28ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் … Read more

வானிலை முன்னறிவிப்பு.

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஜூலை 28ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 28ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, … Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவால் வாக்காளர்களுக்கான அறிவித்தல் 

சனாதிபதித் தேர்தல் 2024 பெயர்குறித்த நியமனப்பத்திரங்களைப் பொறுப்பேற்றல், வைப்புப் பணம் செலுத்துதல் மற்றும் வாக்கெடுப்பு தொடர்பாக இலங்கை தேர்தல் ஆணைக்குழு சார்பாக அதன் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.சத்நாயக்க அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். அதன்படி, 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க சனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் 2 ஆவது மற்றும் 8 ஆவது பிரிவுகள் குறித்து வாக்காளர்களுக்கு பின்வரும் விடயங்களைத் தெளிவு படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.   சனாதிபதித் தேர்தலுக்கான வாக்கெடுப்பு 2024, செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி … Read more