அடுத்த ஆண்டு முதல் பாடசாலைகளில் பௌதீக வளங்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் நிதியை அதிகரிக்க நடவடிக்கை…

பாடசாலைகளில் பௌதீக வளங்களைக் கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் நிதியை அதிகரிப்பது தொடர்பான யோசனையை ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற நிறுவனங்களுக்கு முன்வைப்பதாகவும், அதற்கான மதிப்பீட்டை தயாரித்துக் கொண்டிருப்பதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் சுசில் பிரேம் ஜெயந்த தெரிவித்தார். பாடசாலைகளில் பௌதீக வளங்களை அதிகரிப்பதற்காக பயன்படுத்தப்படும் தரத்தை அதிகரிப்பதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை தொடர்பாக நேற்று (24) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பதிரண முன் வைத்த வாய் மொழி மூலமான கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி … Read more

நாளை (26) முதல் சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கக்கூடும்… 

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஜூலை 25ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூலை 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது.   நாளை (26) முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழைவீழ்ச்சியில் சிறிதளவு அதிகரிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.   மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என … Read more

ஜயகமு ஸ்ரீலங்கா பல்வேறு சேவைகளுடன் காலிக்கு விஜயம்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நாடளாவிய மக்கள் நடமாடும் சேவையின் காலி மாவட்ட நிகழ்வு இன்றும் (24 ) நாளையும் (25) காலி சமனல விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இந்நடமாடும் சேவையினால் பின்வரும் விடயங்கள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்ட உள்ளன. குறிப்பாக : புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வலுவூட்டும் ‘ஹரசர திட்டம்’ புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் , பாடசாலை உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் விநியோகம் பிரதேச செயலாளர்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு … Read more

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாதவர்களுக்கு சம்பள உயர்வா? கொடுப்பனவா? – அமைச்சரவை பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்த்தன

வேலை நிறுத்தத்தில் ஈடுபடாதவர்களுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவாக அதனை ஒரு தடவை 10,000 கொடுப்பனவாக வழங்குவது என்றும் அதனை திறைசேரியினால் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சரவை பேச்சாளர் வந்துள்ள குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பேராசிரியர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதன் போது தொடர்ந்து உரையாற்றிய அமைச்சரவைப் … Read more

தற்போதைய விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தில் விவசாயிகளை தொடர்ந்தும் அரசியல் கையாட்களாக மாற்ற முடியாது 

உள்நாட்டு விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் காரணமாக இனிமேல் விவசாயிகளை அரசியல் கையாட்களாக்க முடியாது என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். சிறு மற்றும் பெரும்போகத்துடன் இணைந்ததாக பயறை பயிரிட்டு 18,828 மெற்றிக் தொன் அறுவடையை பெறும் வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன் கீழ் ஒரு விவசாயிக்கு ஹெக்டெயாருக்கு 25 கிலோ விதைப் பயறு வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.   2023 ஆம் ஆண்டு … Read more

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான மாணவர்கள் கல்வியை இடைவிடாது தொடர வேண்டும்

• சாதாரண மாணவர்களுக்கு மேலதிகமாக பிரிவெனா மாணவர்களின் புலமைப் பரிசில் திட்டத்திற்கு மட்டும் வருடாந்தம் 300 மில்லியன் ரூபா – ஜனாதிபதி தெரிவிப்பு. குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான அனைத்து மாணவர்களும் கல்வியை இடைவிடாது தொடர வேண்டும் எனவும் இதற்காக ஜனாதிபதி நிதியம் புலமைப் பரிசில்களை வழங்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   சாதாரண தர, உயர் தர மாணவர்களைப் போன்று பிரிவெனா மற்றும் பிக்குனிகளுக்கான கல்வி நிறுவனங்களில் கற்கும் பிக்குகள் … Read more

நிலையான பொருளாதார முறைமையின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான அநேக  சட்டத் திருத்தங்கள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன

• துறைமுக பிரவேசத்துக்கான அதிவேக வீதி, நாட்டின் பொருளாதாரத்துக்கு பெரும் வலுவாக அமையும் – சாகல ரத்நாயக்க. ஆட்சி மாறும் போது கொள்கைகள் மாற்றம் அடைவது நாட்டின் பெரும் பிரச்சினையாகியுள்ளது. எனவே அந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் பல்வேறு நிதி மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் சட்ட ரீதியான மறுசீரமைப்புக்களை அரசாங்கம் தற்போதும் மேற்கொண்டுள்ளதென தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.   நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவே … Read more

நாட்டில் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்

அதற்கான பொருளாதார மறுசீரமைப்புக்கள் அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும். புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு கல்வி முறையில் பல சீர்திருத்தங்கள் – கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் 106 ஆவது ஆண்டு விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு. இலங்கை இளைஞர்கள் தொழில் தேடி வெளிநாடுகளுக்கு செல்வதற்கு மாறாக உள் நாட்டிலேயே இளைஞர்களுக்கு தேவையான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பொருளாதார மாற்றத்தை ஏற்படுத்துவதற்குரிய சரியான திட்டத்தை அடுத்த 10 வருடங்களில் செயற்படுத்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். இல்லாவிட்டால் கல்விக்காக பெருமளவு … Read more

சாரதி அனுமதிப்பத்திரங்களை கருப்புப் பட்டியலில் (Black List) இடும் புதிய நடைமுறை

சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் (Black List) இடும் முறையொன்றை நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, முதற்கட்ட மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த தெரிவித்தார். மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் எதிர்வரும் வேலைத்திட்டம் மற்றும் தற்போதைய வேலைத்திட்டம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (24) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உலகின் பிற நாடுகளில் பின்பற்றப்படும் இந்த நடைமுறைக்கமைய, சாரதி அனுமதிப்பத்திரங்களை கருப்புப் பட்டியலில் (Black List) இடுவதனூடாக, … Read more