இராணுவ தளபதியினால் பாரிஸ் 2024 ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு பாராட்டு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் 2024 ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தகுதி பெற்றுள்ள இரண்டு இலங்கை இராணுவ விளையாட்டு வீரர்களை 23 ஜூலை 2024 அன்று தனது அலுவலகத்திற்கு அழைத்தார். இலங்கை இராணுவத்தின் அர்ப்பணிப்புள்ள தடகள வீரரான பணிநிலை சார்ஜன் அருண தர்ஷன எதிர்வரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் தனது இடத்தை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார். ஈட்டி எறிதல் வீராங்கனை பணிநிலை சார்ஜன் … Read more

நதீரா மடுகல்ல எழுதிய “பார்லிமேந்துவே பலஹத்காரய” நூல் வெளியிடப்பட்டது

பாராளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்தும் பார்லிமேந்துவே பலஹத்காரய (பாராளுமன்றத்தின் பலவந்தம்) நூலின் ஊடாக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது – பிரதமர் தினேஷ் குணவர்தன. நதீரா மடுகல்ல எழுதிய பார்லிமேந்துவே பலஹத்காரய (“பாராளுமன்றத்தின் பலவந்தம் – பொலிஸ் அழைக்கப்பட்டு அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள்”) என்ற நூலின் வெளியீட்டு விழா நேற்று (23) ஜனாதிபதி அலுவலகத்தில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது. நதீரா மடுகல்ல தனது 20 … Read more

பூநகரி இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக அறிவிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச சபை தனது வெற்றிகரமான பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக ஊடக பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. பூநகரி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட இரு வட்டாரங்கள் அபிவிருத்தியடைந்த பிரதேசங்களாக வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இரணைதீவு உப அலுவலகத்திற்குட்பட்ட முழங்காவில் வட்டாரம் மற்றும் வாடியடி உப அலுவலகத்திற்குட்பட்ட ஞானிமடம் வட்டாரம் என்பவையே அபிவிருத்தியடைந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இலங்கை அரசின் கடந்த ஜூன் 14ம் திகதிய வர்த்தமானி அறிவிப்பிலேயே பூநகரி பிரதேச சபை … Read more

இஸ்ரேலில் 262 கட்டுமானத் துறை தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்

இஸ்ரேலில் நிர்மாணத் துறையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்ற 262 பேருக்கு விமானச் சீட்டு வழங்கும் நிகழ்வு நேற்று (23) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்றது. அவர்கள்; இம்மாதம் 27 முதல் 30ஆம் திகதிக்குள் இஸ்ரேல் செல்ல உள்ளனர்.

மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஜூலை 24ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூலை 23ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   மேல், மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   வடமேல் மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் … Read more

உணவுத் திருவிழாவும் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் 5, 6, 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில்

மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில்  உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (23.07.2024) காலை யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் ஆவணி மாதம் 5, 6, மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தின் பண்ணை சுற்றாடலில் நடைபெறவுள்ளது … Read more

ஜனாதிபதி நிதியத்தின் புலமைப் பரிசில்கள் பிரிவேனா மற்றும் பிக்குணி மாணவர்களுக்கு நாளை ஜனாதிபதி தலைமையில் வழங்கப்படும்

3000 பிக்கு மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு நாளை (24) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி செயற்படுத்தப்படும் பிரிவேனா மற்றும் பிக்குணி கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் பிக்குகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்காக ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்தப் புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது. இதுவரை காலமும் பிரிவேன்களில் கற்கும் பிக்கு மாணவர்களை ஊக்குவிக்கும் புலமைப்பரிசில் திட்டங்கள் எதுவும் … Read more

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவது உறுதி – அமைச்சரவைப் பேச்சாளர்

2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதிக்கு முன்னர் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதித் தேர்தல் செப்டெம்பர் மாதம் நடத்தப்படும் எனவும் ஜனாதிபதித் தேர்தலை அரசியலமைப்பின் பிரகாரம் நடத்தவுள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளரும், வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி தேர்தலுக்கு தேவையான 10 … Read more

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு மற்றும் உரிமைகளை உறுதிப்படுத்துவேன் – வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன

ஊடகவியலாளர்களின் பாதுகாப்பையும் உரிமையையும் உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்று வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஊடகத்துறை அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  தற்போதைய அரசாங்கம் எந்தவொரு ஊடகவியலாளரையும் அச்சுறுத்தி சித்திரவதை செய்யவில்லை எனவும், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஊடக அமைச்சர் என்ற வகையில் தான் இன்று பாராளுமன்றத்தில் விசேட கோரிக்கையொன்றை … Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், நாட்டை வீழ்ச்சியில் இருந்து மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கே மக்களின் பெரும்பான்மையான ஆதரவு கிடைக்கும்

வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் ஆதரவளிக்கத் தயாராக இருப்பதாக ஆரம்பக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார். நாட்டின் பொருளாதாரத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (23) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சர் … Read more