அரச சேவையில் உள்ள சம்பள முரண்பாடுகளை ஆராய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, பரிந்துரைகளை பெறும் பணிகளை ஆரம்பித்தது

அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகளைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும். அனைத்து முன்மொழிவுகளையும் MS Wordஇல் Iskoola Pota எழுத்துருவில் 12 அளவில் அதன் மென் பிரதியை PDF வடிவில் மாத்திரம் தயாரித்து இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். என்ற உத்தியோகபூர்வ முகவரிக்கு … Read more

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் வட்டியில்லா கடன் வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக விவசாய தொழில் முயற்சியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு வட்டியில்லாக் கடன்களை வழங்கும் செயல்முறை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று (22) ஜனாதிபதி அலுவலகத்தில் கையெழுத்திடப்பட்டது. முதல் கட்டத்தில், இந்த வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பை வழங்கும் இலங்கை வங்கி, பிரதேச அபிவிருத்தி வங்கி ஆகியவற்றுடன், விவசாய, பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜானக தர்மகீர்த்தி இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டார்.. இதன்படி எதிர்காலத்தில் மக்கள் வங்கியுடனும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது.   விவசாய … Read more

கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டம்

கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற பெண்கள் மற்றும் இளைஞர் சமூகத்தை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கான விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கைத்தறி நெசவுக் கைத்தொழிலில் ஈடுபடுகின்ற தொழிலாளர்கள் எதிர்கொள்கின்ற மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வதிலுள்ள சிரமங்கள், தொழில்முயற்சித் திறன்கள் குறைவடைதல், சுற்றாடல் நேயம்மிக்கதும் போதியளவு உட்கட்டமைப்பு வசதிகள் இன்மை, சந்தைக் கேள்விக்கு ஏற்புடைய வகையிலான தரப்பண்பான உற்பத்தியின்மை, மற்றும் போதியளவு சந்தைப்படுத்தல் வசதிகளின்மை போன்ற பிரச்சினைகளுக்குத் தீர்வு காணளும் முகமாக இது அமைந்துள்ளது. குறித்த கருத்திட்ட முன்மொழிவின் மூலம் … Read more

வங்கிகளில் தங்க ஆபரணங்களை அடகு வைத்த நபர்களுக்கு சலுகை

2024 ஜூன் மாதம் 30 திகதி அல்லது அதற்கு முன்னர் உரிமம் பெற்ற வங்கிகளில் பெற்ற முற்பணத்துக்கு வருடாந்தம் 10% உச்ச எல்லைக்கு உட்பட்ட சலுகை வட்டியை திறைசேரியிலிருந்து வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டத்தை அமுல்படுத்துவதற்கு தீர்மினிக்கப்பட்டுள்ளது உரிமம் பெற்ற வங்கிகள் மூலம் அடகு முற்பணம் பெற்றுள்ள குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு நிவாரணம் வழங்கவேண்டிய தேவை அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி  சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் … Read more

ஸ்விட்சர்லாந்து தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு செயலாளரை பிரியாவிடை நிமித்தம் சந்திப்பு

  கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Francois Garraux நேற்று (ஜூலை 22) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை தனது பிரியாவிடை நிமித்தம் சந்தித்தார். விடைபெற்று செல்லும் பாதுகாப்பு ஆலோசகருடன் சுவிட்சர்லாந்து துணைத் தூதுவர் ஒலிவியர் பராஸ் மற்றும் புதிதாக நியமனம் பெற்றும் வரும் பாதுகாப்பு ஆலோசகர், Colonel (GS) Daniel Bader அன்புடன் வரவேற்ற பாதுகாப்பு செயலாளர் அவர்களுடன் சுமுகமான … Read more

சிரமங்கள் இருந்த போதிலும் 16,000 ஆசிரியர்களை நியமித்து ஆசிரியர் பற்றாக்குறை தீர்க்கப்பட்டுள்ளது

• இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டை மீட்டெடுக்க அரசாங்கத்தால் முடிந்தது – கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த. பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் 16,000 ஆசிரியர் நியமனங்களை வழங்கி ஆசிரியர் பற்றாக்குறைக்கு அரசாங்கம் தீர்வை வழங்கியுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.   வரலாற்றில் மிகவும் கடினமான நிலைக்கு மக்கள் முகம்கொடுத்த போது நாட்டை மீட்கும் பொறுப்பை எவரும் ஏற்காத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நாட்டைப் பொறுப்பேற்றதுடன், இரண்டு … Read more

மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு பிரச்சினைகள் அணுகப்படும் – கடற்றொழில் அமைச்சர்

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரத்தில் மக்களின் உணர்வுகள் ஆதங்கம் போன்றவற்றின் அடிப்படையில் பிரச்சினைகள் அணுகப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். வைத்தியர் அருச்சுனாவின் துணிச்சலான செயற்பாடுகளே, வைத்தியசாலை தொடர்பில் உரிய கவனம் செலுத்தி அங்கு காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான சூழலை உருவாக்கியுள்ளது என்றும் தெரிவித்தார். வைத்தியர் அருச்சுனா தொடரந்தும்  பிரதேசங்களில் கடமையாற்ற வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாக துறைசார் அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்தார். சாவகச்சேரி வைத்தியசாலையின் செயற்பாடுகளை வினைத் … Read more

‘அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பு ஜூலை 31 ஆம் திகதி நிறைவு

அஸ்வெசும’ நலன்புரி திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான கணக்கெடுப்பை ஜூலை 31 ஆம் திகதிக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், முதற்கட்டமாக இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கத் தவறிய குடும்பங்களுக்கு, கடந்த பெப்ரவரி மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு, சுமார் 454,924 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.   அந்த விண்ணப்பங்கள் தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் ஜயந்த விஜேரத்ன தெரிவித்தார்.   ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (22) பிற்பகல் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் … Read more

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை…

• நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும் இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஜூலை 22ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 22ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் … Read more