2024 நடுப்போகத்தில் பாசிப்பயறை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு நிவாரண உதவி. ..

2024 சிறுபோகத்தில் வயல் அறுவடை முடிந்ததன் பின்னர் இபநெல்லே பாசிப்பயறை  மூன்றாவது  போக நடுப்பகுதியில் உற்பத்தி செய்வதற்கு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.   அதன்படி ஒரு ஹெக்டயருக்கு 25 கிலோ பாசிப்பயறு விதைகள் வீதம் விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதுடன் அதற்காக ஒரு விவசாயிக்கு விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சினால் 25 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.   இம்முறை நடுப்போகத்தில் 63,750 ஹெக்டயரில் பாசிப்பயறு உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன் அதன்படி … Read more

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் சீரான வானிலை..

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஜூலை 21ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 21ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் … Read more

வங்குரோத்தான வர்த்தகங்களைக் கையாள புதிய சட்ட மூலம் அறிமுகப்படுத்தப்படும்

நுண், சிறு, நடுத்தர தொழில் முனைவோரை வலுவூட்ட “என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா” என்ற பெயரில் புதிய நிறுவனம். எப்போதும் மக்களுக்கு ‘உரிமைகள்’ வழங்குவதே அரசாங்கத்தின் கொள்கை – ஜனாதிபதி. தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள பராட்டே சட்டத்தைத் தொடர்ந்தும் நீண்ட காலத்திற்குப் பேண முடியாது எனவும், எனவே வங்குரோத்தான வர்த்தகங்களை கையாள புதிய சட்டமூலமொன்று கொண்டுவரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.   உத்தேச புதிய சட்டமூலத்தில் நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களால் பெறப்பட்ட கடன்களை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் … Read more

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பணியை புறந்தள்ளிவிட்டு, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தியிருந்தால் இலங்கையின் தலைவிதி இன்னும் மோசாக அமைந்திருக்கும்

எந்த சந்தேகமும் இல்லை – அடுத்த தேர்தலில் நாம் வெற்றி பெறுவோம் – உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள் சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. ஜனாதிபதி ஒருபோதும் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கவில்லை – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர. பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதை விட்டுவிட்டு, அன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பணத்தை செலவிட்டிருந்தால், இன்று நாடு மிக மோசமான அவல நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   நிதி ஒதுக்கீட்டின்போது, அன்று தேர்தலை விட பல்வேறு … Read more

கீரி சாம்பா உற்பத்தியை 2024 பெரும்போகத்தில் நாடு பூராகவும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை

நெல் சந்தைப்படுத்தல் சபை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட வேலைத்திட்டமாக ஆரம்பித்த 500 ஏக்கர் வயல் நிலத்தில் உற்பத்தி செய்த சம்பா உற்பத்தி நேற்று (20) அறுவடை செய்யப்பட்டது.   விவசாய மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர வின் பங்குபற்றுதலுடன் இந்த அறுவடை நிகழ்ச்சி அங்குனகொலபெலஸ்ஸ புதிய வாவி வயலில் இடம்பெற்றது.    சந்தையில் ஏனைய அரிசிகளின் விலை குறைந்து காணப்படும் போதும் கீரி சம்பா அரிசியின் விலை அதிகரித்திருப்பதனால் விதை நெல் உற்பத்தியை அதிகரிப்பதே இவ்வேளைத் … Read more

நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் அன்றி, இளைஞர்களே நாட்டின் தேசிய வளமாவர்

• நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் நாட்டுக்கு கிடைக்கும் நிதி கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு வழங்கப்படும் – ருஹுணு பல்கலைக்கழக புதிய சுகாதார விஞ்ஞான பீடத்தை மாணவர்களுக்காக திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதன் மூலம் நாட்டுக்கு கிடைக்கும் நிதியைக் கொண்டு எதிர்காலத்தில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக அதிக நிதியை வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   நஷ்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்கள் அன்றி, … Read more

பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும்!

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தும் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும். கொத்தலாவல மற்றும் பசுமைப் பல்கலைக்கழகங்களை “பட்டம் விற்கும் கடைகள்” என்று கூறுபவர்கள் கேம்பிரிட்ஜ் மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களை ” பட்டங்களை விற்கும் கடைகள் ” என்று கூறுவார்களா? – ஜனாதிபதி. பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   நாட்டின் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களைச் சீர்குலைக்காமல் … Read more

அரசாங்கம் வழங்கும் சலுகைகள் நுகர்வோருக்கு வழங்கப்படாவிட்டால், குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்ய வேண்டி ஏற்படும் – வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ

அரசாங்கம் வழங்கும் சலுகைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தகர்கள் செயற்படாவிட்டால் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிக்க நேரிடும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்தார். நுகர்வோர் சட்டத்தை திருத்துவதற்கான உரிய பரிந்துரைககளை எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நலின் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் … Read more

இலங்கை நீர் எக்ஸ்போ (Lanka Water Expo) 2024 கண்காட்சி நேற்று(19) ஆரம்பம்

Indian Water Today (pvt) நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இலங்கை நீர் எக்ஸ்போ (Lanka Water Expo) 2024 கண்காட்சி கூடத்தினை நீர் வழங்கள் வடிகாலமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வானது, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில்-BMICH நேற்று (19) நடைபெற்றது. இக் கண்காட்சியானது தொடர்ச்சியாக மூன்று நாட்கள் (19,20,21)  இடம்பெறும். அதேவேளை, 40 க்கும் மேற்பட்ட இலங்கை மற்றும் இந்திய … Read more

அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை!

  சட்டத்தரணி ஜயம்பதி விக்ரமரத்னவின் தவறுக்கு நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் – காலி, பெலிகஹா நீதிமன்றக் கட்டித் தொகுதி​யை திறந்து வைத்து ஜனாதிபதி தெரிவிப்பு. சர்வஜன வாக்கெடுப்புக்கான அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டதிலிருந்து ஜனநாயகத்தை பேணி வந்த நாடு என்ற வகையில் இலங்கை தொடர்ந்தும் அதற்காக அர்பணிக்கும் எனத் தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரசியலமைப்புத் திருத்தம் குறித்து எவ்விதத்திலும் அச்சம் கொள்ள வேண்டாமெனவும் கேட்டுக்கொண்டார். அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான பணிகள் துறைசார் அனுபவம் மிக்கவர்களிடமே கையளிக்கப்படுமெனவும், அந்த … Read more