முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி 

  கடற்தொழிலாளர் குடும்பங்களுக்கான அரிசிவழங்கும் நிகழ்வு நேற்று (19) முல்லைத்தீவில் கடற்தொழில் அமைச்சரினால் தொடக்கிவைக்கப்பட்டுள்ளது.    முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 3500 கடற்தொழில் குடும்பங்களுக்கு சீன அரசாங்கத்தின் உதவியுடன் குடும்பம் ஒன்றுக்கு தலா 20 கிலோ அரிசி  கடற்தொழில் அமைச்சின் ஊடாக வழங்கிவைக்கப்படுகின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் 3500 கடற்தொழில் குடும்பங்களுக்கும் இந்த அரிசி வழங்கிவைக்கப்படவுள்ளது.    முதற்கட்டமாக நாயாறு கிராமத்தில் 350 குடும்பங்களுக்கு அரிசி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.    இந்த நிகழ்விற்கு வருகை தந்த கடற்தொழில் அமைச்சர் … Read more

கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தானத்தின் ஆடிவேல் விழாவில் பிரதமர்

அமைச்சர் ஜீவன் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம். பெளசி, யதாமினி குணவர்தன , இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க மற்றும் இந்து பக்தர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். பிரதமர் ஊடகப் பிரிவு

நாட்டில் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் பலன்கள் சாதாரண மக்களை சென்றடைய வேண்டும்

அந்தப் பொறுப்பில் இருந்து ஒருபோதும் விலகப்போவதில்லை – தொழில்முறை முச்சக்கரவண்டி மற்றும் போக்குவரத்து சங்கங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. முச்சக்கரவண்டி சாரதிகளின் தொழில் முன்னேற்றத்துக்கான மகஜர் ஜனாதிபதியிடம் கையளிப்பு. எதிர்வரும் நாட்களில் முச்சக்கரவண்டிகளுக்கான புதிய செயலி – முன்னாள் அமைச்சர் ரவீ கருணாநாயக்க. மறுமலர்ச்சி கண்டுவரும் இலங்கையில் புதிய முதலீட்டு வாய்ப்புகளுக்காக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பாரிய முதலீட்டாளர்களை வரவேற்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அதேவேளை, கடந்த பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட சிறிய மற்றும் … Read more

நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூலை 20ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 19ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் … Read more

கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல்

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை இறால் வளர்ப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவ சந்திரகாத்தன் தலைமையில் மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் ஏற்பாட்டில் கோட்டை வளாகத்தில் நேற்று (18) இடம் பெற்றது. இதன் போது கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் பண்ணைகளை மீளமைக்கும் திட்டம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது. இங்கு இறால் வளர்ப்புப் பண்ணையாளர்களுக்கு துரிதமாக பண்ணைக் காணிகளை வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துமாறு அதிகாரிகளுக்குப் பணிப்புரை வழங்கினார். இந் நிகழ்வில் மாவட்ட … Read more

குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குதலானது மிகவும் பெ று மதியான மூலதனம் – சமூக சுகாதார விசேட வைத்திய நிபுணர் தம்மிகா ரொவேல்

குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குதல் என்பது மிகவும் பெறுமதியான மூலதனம் என்றும் அது குழந்தையின் சுகாதாரத்திற்கு மிகவும் சாதாரணமான மற்றும் போஷாக்கை கையால் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய சிறந்த விடயம் என யுனிசெப் அமைப்பின் சுகாதார மற்றும் போஷாக்கு அதிகாரி சமூக சுகாதார விசேட வைத்தியர் தம்மிகா ரொவேல் தெரிவித்தார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் தேசிய தாய்ப்பால் வழங்கும் வாரத்தை முன்னிட்டு தாய்ப்பால் வழங்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக நேற்று முன்தினம் (17)இடம்பெற்ற செய்தியாளர்களுடனான கலந்துரையாடலின் போதே சமூக சுகாதார விசேட … Read more

‘’உறுமய’’ அளிப்புப் பத்திரம் தொடர்பான சிக்கலகள் காணப்பட்டால் தெரியப்படுத்துக

உறுமய வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் அளிப்புப் பத்திரம் தொடர்பாக ஏதேனும் பிரச்சினை அல்லது சிக்கல் அல்லது அது தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு அவசியமாயின் பின்வரும் தொலைபேசி இலக்கங்களைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம் என காணி ஆணையாளர் நாயகம் பந்துல ஜயசிங்க தெரிவித்தார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் (17) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலின் போதே இதனைக் குறிப்பிட்டார். அதன்படி, சகல சிக்கல்கள் தொடர்பாகவும் 0112 883812இ 0112 883635இ 0112 797400இ 0112 865824 … Read more

ஜூலை மாதம் இதுவரையிலும் 2600க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவு…

ஜூலை மாதம் இதுவரையிலும் 2600க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார். இலங்கை அரசின் உத்தியோகபூர்வ தகவல் இணையத்தளத்திற்கு இன்று (19) கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். தற்போது பெய்துவரும் பருவ மழை காரணமாக நீர் தேங்கி நிற்கும் இடங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையே நுளம்புப் பெருக்கத்திற்குக் காhரணம் என்று … Read more

இராஜாங்க அமைச்சர் தென்னகோனின் எண்ணக்கருவுக்கு அமைய, இளம் வீரர்களை கௌரவித்து, ஊக்குவிக்கும் வகையில் விருதுகள்

முதன்முறையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தேசிய மாணவர் படையணியின் தேசிய இளைஞர் வீரர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வு, கொழும்பில் உள்ள தேசிய மாணவர் படையணியின் தலைமையகத்தில்நேற்று முன்தினம்நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொள்ள வருகை தந்த இராஜாங்க அமைச்சரை, தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுதந்த பொன்சேகா வரவேற்றார். இராஜாங்க அமைச்சர் தென்னகோனின் எண்ணக் கருவிற்கு அமைய இலங்கையின் … Read more

மனித மூலதன அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக இலங்கை மாற்றப்படும்

சர்வதேச தரநிலைகளுக்கு ஏற்ப தேசிய தொழிற்கல்வி தகுதி (NVQ) தயாரிக்கப்பட வேண்டும். இலங்கையின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மூலோபாய இணைப்புகள் மற்றும் கல்வி சீர்திருத்தங்கள் மிகவும் முக்கியமானவை – ஜனாதிபதி. பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் நாட்டை ஸ்தீர நிலைக்கு கொண்டு வர ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க காத்திரமாக பணியாற்றி வருகிறார் – அவுஸ்திரேலிய முன்னாள் பிரதமர் ஸ்காட் மொரிசன். மனித வள அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக இலங்கையை மாற்றுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். … Read more