அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் குறைப்பு..

பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் லங்கா சதொச நிறுவனம் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்கள் சிலவற்றின் விலைகளைக் குறைத்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ கிராம் உளுந்து 1400 ரூபாவாகவும், 400 கிராம் சதோச பால் மா பக்கெட் ஒன்றின் விலை 910 ரூபாவாகவும், கோதுமை மா ஒரு கிலோ கிராம் 180 ரூபாவாகவும், வெள்ளை சீனி ஒரு கிலோ கிராம் 260 ரூபாவாகவும், பச்சரிசி ஒரு கிலோ கிராம் 200 ரூபாவாகவும், கீரி சம்பா ஒரு கிலோ கிராம் … Read more

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் என்பு மாற்று சத்திர சிகிச்சைப் பிரிவு (Bone marrow transplant unit) ஆரம்பம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் என்பு மாற்று சத்திர சிகிச்சைப் பிரிவை(Bone marrow transplant unit) நிறுவுவதுடன், வைத்தியசாலையின் மருத்துவ சேவையை வினைத்திறனாக மேற்கொள்வதற்கு அவசியமான நவீன தொழில்நுட்ப வசதிகளுடனான உபகரணங்களை ( ? ??? ?-??? ) வைத்தியசாலைக்கு வழங்கும் நிகழ்வு நேற்று(18) சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் தலைமையில் இடம்பெற்றது. இந்நவீன உபகரணங்களுக்காக சுகாதார அமைச்சினால் 50மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டு யாழ்ப்பாணப் போதனா வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், இவ்வுபகரணங்கள் அறுவை சிகிச்சைகளின் போது … Read more

ஆந்திரா சென்ற கடற்றொழில் அமைச்சர் நவீனத்துவம் மிக்க நீர்வேளாண்மை தொடர்பில் ஆராய்வு

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்திற்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோதாவரி ஆற்றின் கரையோரத்தில் ராமகுண்டம் எனும் இடத்தில் நவீன தொழில்நுட்பத்தில் கூட்டில் மீன்வளர்க்கும் முறைமையை பார்வையிட்டார். இந்திய அதிகாரிகளின் வேண்டுகோளுக்கமைய அவ்விடத்திற்குச் சென்று பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. மீன் குஞ்சுகள் பெருக்கம், அறுவடையில் ஏற்படக்கூடிய சவால்கள் தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதனிடையே ஆந்திரா மாநிலத்தின் ராமகுண்டம் பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு தொட்டிகளில் மீன் வளர்க்கும் முறைமையையும் , … Read more

தொழிற்சங்கங்கள் அரசியல் நலனுக்காக வாரத்தில் இரண்டு நாட்கள் பாடசாலைகளை மூடிவிட்டு வீர வசனம் பேசுகின்றனர்

தமிழ் ஈழ விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்தாலும் பாடசாலைகளை மூடவில்லை ஆனால் இங்கே தொழிற்சங்கத்தினர் வாரத்தில் இரண்டு நாட்கள் பாடசாலைகளை மூடுகின்றனர். இந்த நாட்டில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் பயங்கரவாத அமைப்பாக இருந்த போதிலும், முப்பது வருடகால யுத்தத்தின் போது பாடசாலைகளை மூடுவதற்கு விடுதலைப் புலிகள் அனுமதிக்கவில்லை, ஆனாலும் யுத்த சூழலில் இருந்த ஆசிரியர்கள் பதுங்கு குழிக்குள் அமர்ந்து பிள்ளைகளுக்கு கல்வியை வழங்கினார்கள். இன்றைய தொழிற்சங்கங்கள் தமது அரசியல் நலன்களுக்காக 10,000 பாடசாலைகளை மூடுவது … Read more

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும்…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஜூலை 19ஆம் திகதிக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு 2024 ஜூலை 18ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது. இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் … Read more

மலையக காணி உரிமை வழங்கும் திட்டத்தில் ஏற்பட்ட தடங்களுக்கு பெருந்தோட்ட நிறுவனங்களே காரணம்…

அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (17) முற்பகல் மலையக பெருந்தோட்ட பாராளுமன்ற பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் குறிப்பாக மலையக மக்களுக்கான காணி உரிமை மற்றும் லயன் அறைகளை கிராமமாக்குதல் தொடர்பான சில விடயங்கள் தொடர்பாக கலந்து ஆலோசிக்கப்பட்டது. இக்கலந்துரையாடலில் கலந்துக்கொண்ட நீர்வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஊடகங்களுக்கு பின்வருமாறு கருத்து தெரிவித்தார். ‘காணி உரிமை வழங்கும் திட்டத்தில் தடங்கல் ஒன்று ஏற்பட்டு இருப்பது … Read more

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசியத்திற்கணங்க தேர்தலுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நிதி அமைச்சு தயார் – அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய நிதி அமைச்சுக்கு முடியும் என்றும், அவசியத்திற்கு இணங்க அந்நிதியை வழங்குவதற்கு தயார் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிடிய தெரிவித்தார். 2024 வரவு செயலவுத் திட்டத்தின் ஊடாக எந்தவொரு தேர்தலை நடாத்துவதற்காகவும் 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அரசாங்கம் கடுமையான நிதி முகாமைத்துவத்துடன் செயற்படுவதாகவும், அவ்வாறு நிதி வழங்கும் செயற்பாடு எவ்வித தடைகளுமின்றி மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஆரம்பமாக தபால், அச்சு … Read more

மட்டக்களப்பில் இன்று 483 பேருக்கு நிரந்தர நியமனம்!!

உள்ளூராட்சி அதிகார சபைகளில் பதில், ஒப்பந்த மற்றும் தற்காலிக ஊழியர்களாக கடமை வகித்தவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று (17) திகதி மட்டக்களப்பு நகர மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிரந்தர நியமனக் கடிதங்களை 483 பேருக்கு வழங்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசியல் பிரதிநிதிகளும், கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களும், உள்ளுராட்சி மன்றங்களின் உயரதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த நியமனங்கள் … Read more

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 226 கிலோ பீடி இலைகள் ஒருதொகை கல்பிட்டியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் நேற்று (2024 ஜூலை 17,) கல்பிட்டி குடாவ கடற்கரைப் பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் இருநூற்று இருபத்தி ஆறு (226) கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டது. கடல் வழியாக மேற்கொள்ளப்படும் பல்வேறு ஆட்கடத்தல் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் கடற்படையினர், இலங்கையை சுற்றியுள்ள கரையோரங்கள் மற்றும் கரையோரங்களை உள்ளடக்கிய வழக்கமான ரோந்து மற்றும் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நேற்று (2024 … Read more

மலையக மக்களுக்கு நிரந்தர காணி, வீட்டு உரிமைகளை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் – ஜனாதிபதி

பெருந்தோட்ட மக்கள் வாழும் பகுதிகளை புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்த நடவடிக்கை பெருந்தோட்ட மக்கள் வாழும் பிரதேசங்களை இனங்கண்டு அப்பகுதிகளைப் புதிய குடியேற்ற கிராமங்களாக சட்டரீதியாக பிரகடனப்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (17) நடைபெற்றது. கிராமங்கள், நகரங்கள் மற்றும் பெருந்தோட்டங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மக்களுக்கு நிரந்தர காணி மற்றும் வீட்டு உரிமைகளை … Read more