மின் கட்டணத் திருத்தத்துடன் நீர் கட்டணமும் திருத்தப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்

புதிய மின் கட்டணத் திருத்தத்திற்கு இணைந்தவகையில், நீர்க் கட்டணத்தைக் குறைப்பது குறித்தும் ஆராயப்பட்டு வருவதாகவும், இந்த வாரத்துக்குள் அது குறித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார். அத்துடன், மாதாந்தம் 2.8 பில்லியன் ரூபா நட்டத்தை சந்தித்த நீர் வழங்கல் சபையினால் தற்போது 6.2 பில்லியன் ரூபா இலாபத்தை ஈட்ட முடிந்துள்ளதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார்.   ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (17) நடைபெற்ற … Read more

“ரன்தொர” உறுமய முழு உரிமையுள்ள வீட்டு உரிமைப் பத்திரங்களை வழங்கும் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் நடைபெற்றது

• மேல்மாகாணத்தை சுமார் 50 இலட்சம் மக்கள் வாழும் பெரு நகரமாக மாற்ற திட்டம். • கிராமம், நகரம் மற்றும் மலையகத்தை உள்ளடக்கிய வகையில் மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி மற்றும் வீட்டு உரிமைகள் வழங்கப்படும் – ஜனாதிபதி. மேல் மாகாணத்தை சுமார் 50 இலட்சம் மக்கள் வாழும் பெரிய நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.   கிராமங்கள், நகரங்கள் மற்றும் மலையகத்தை உள்ளடக்கிய வகையில் மக்களுக்கு முழு உரிமையுள்ள காணி … Read more

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக குழுவொன்றை நியமிக்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு பரிந்துரை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் பிரத்தியேகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட குழுவொன்றை நியமிப்பதற்கும், அந்த சகல பாதுகாப்பு பணிகளையும் ஒருங்கிணைக்க பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிக்கவும் பரிந்துரைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பித்துள்ளார். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார பேரணியில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தாக்கப்பட்ட நிலையில், இந்நாட்டில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரத்தியேகப் … Read more

கொகுவலை மேம்பாலம் பொதுமக்கள் பாவனைக்காக கையளிப்பு 

கொகுவலை நாற்சந்தியில் காணப்படும் அதிக போக்குவரத்து வாகன நெரிசல் காரணமாக ஹொரணை கொழும்பு பிரதான வீதிக்கு மேலாக கொகுவலை நாற் சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன  ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன வின் அழைப்பின் பேரில் பிரதமர் தினேஷ் குணாவர்தன விழா இன்று (17) சுப நேரத்தில் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.    போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்  அமைச்சின் ஊடாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முழுமையான மேற்பார்வையின் கீழ் ஹங்கேறிய … Read more

ஜனாதிபதியின் கல்வி புலமைப்பரிசில் திட்டம் வவுனியா மாவட்டத்தில்

வவுனியா மாவட்டத்தில் ஜனாதிபதியின் கல்வி புலமைப்பரிசில் திட்ட  நிகழ்வு 2024.07.16 நேற்று மதவுவைத்தகுளம் பொருளாதார மத்திய நிலையத்தில் நடைபெற்றது. ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ,கல்வி நடவடிக்கைகளில் விசேட திறமையை வெளிப்படுத்தும் மாணவர்களுக்காக குறித்த கல்வி புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு  இந்த புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், நாட்டிலுள்ள அனைத்து 10,126 பாடசாலைகளையும் உள்ளடக்கிய தரம் 1 முதல் தரம் 12 வரை கல்வி கற்கும் 100,000 மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தினூடாக உதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இப் புலமைப்பரிசில் … Read more

பல நன்மைகளுடன் ஜயகமு ஸ்ரீலங்கா களுத்துறை விஜயம் 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் நாடளாவிய மக்கள் நடமாடும் சேவையின் களுத்துறை மாவட்ட நிகழ்வு நாளையும் (18 ) நாளை மறுதினமும் (19 ) மதுகம பொது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் நாளைய (18 ) நாளில் , புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வலுவூட்டும் “ஹரசர திட்டம்” நடைபெற உள்ளது. மேலும், புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள், பாடசாலை உபகரணங்களுடன் கூடிய புத்தகப் பைகள் விநியோகம் செய்யப்படும் , பிரதேச செயலாளர்கள் … Read more

இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் இராஜாங்க அமைச்சர் தென்னகோனை சந்தித்தார்

  இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் அதிமேதகு மசூத் இமாத் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்  பிரமித்த பண்டார தென்னகோன்னை சந்தித்தார். இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் நேற்று  இடம்பெற்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த மாலைதீவு உயர்ஸ்தானிகரை அமைச்சர் தென்னக்கோன் வரவேற்றதுடன், இருதரப்பு முக்கிய விடயங்கள் குறித்தும் சிநேகபூர்வமாக கலந்துரையாடினார். மேலும், இருதரப்பு உறவுகள் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக மாலைதீவு அரசாங்கத்துடன் தொடர்ந்தும் நெருக்கமாக பணியாற்ற விரும்புவதாகவும் இராஜாங்க அமைச்சர் இதன்போது … Read more

புதிதாக நிலை உயர்வு பெற்ற மேஜர் ஜெனரல்களுக்கு இராணுவ தளபதி வாழ்த்து

அண்மையில் நிலை உயர்வு பெற்ற இலங்கை இராணுவத்தின் மேஜர் ஜெனரல்கள் நேற்று இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களை சந்தித்தனர். புதிதாக நிலை உயர்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகளான மேஜர் ஜெனரல் டபிள்யூஎஸ்என் ஹேமரத்ன ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ, மேஜர் ஜெனரல் ஜேகேஆர் ஜயக்கொடி ஆர்டபிள்யூபீ யூஎஸ்பீ, மேஜர் ஜெனரல் இஎம்ஜீஎ அம்பன்பொல மற்றும் மேஜர் ஜெனரல் பிஜீஎஸ் பெர்னாண்டோ யூஎஸ்பீ எச்டிஎம்சீபீஎஸ்சீ ஆகி ஆகியோரே இவ்வாறு தளபதியினை சந்தித்தனர். … Read more

பாடசாலை கல்வியில் அழகியல் பாடங்களை நீக்குவதற்கு எவ்வித கொள்கைத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை – அமைச்சரவைப் பேச்சாளர்

பாடசாலை கல்வியில் அழகியல் மற்றும் கலைப் பாடங்களை நீக்குவதற்கு அரசாங்கம் எவ்வித கொள்கை தீர்மானங்களையும் இதுவரை எடுக்கவில்லை என அமைச்சரவை பேச்சாளர் பேராசிரியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (16) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போது அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். கலைப் பாடங்கள் கல்வித்துறையில் காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திய அமைச்சரவை பேச்சாளர் அதனை விட சரளமாக கல்வியின் மறுசீரமைப்பு தொடர்பாகக் கலந்துரையாடுவதாகவும் சுட்டிக்காட்டினார். மேற்கு … Read more

சீன அரசு உதவி – வடக்கின் கடற்றொழிலாளர்களுக்கு அரிசிப் பொதிகள்

சீன அரசாங்கத்தினால் வடபகுதி கடற்றொழிலாளர்களுக்கு என மனிதாபிமான ரீதியில் வழங்கப்பட்ட அரிசி பொதிகள் நேற்று வழங்கிவைக்கப்பட்டன. குறித்த அரிசிப் பொதி வழங்கும் நிகழ்வு நேற்று காலை (16.07.2024) யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவிலுள்ள குருநகர் கலாச்சார மண்டபத்தில் குருநகர் கடற் தொழில் சங்க அங்கத்துவ குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது இதேபோன்று குறித்த அரிசி பொதி வழங்கும் நிகழ்வு தொடர்ச்சியாக யாழ் மாவட்ட  அனைத்து கடற்றொழில் மக்களுக்கும் அந்தந்த பிரதேசங்களில் வழங்கி வைக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் துறைசார் அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. முன்பதாக … Read more