போதைப்பொருள் பாவனையை தடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டம்!

கிழக்கு மாகாணத்தில் போதைப்பொருள் பாவனையை தடுக்கும் விழிப்புணர்வு செயற்திட்டத்தை கல்வி அமைச்சுடன் இணைந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆரம்பித்து வைத்தார். இன்று(16) முதல் கட்டமாக இடம்பெற்ற விழிப்புணர்வு நிகழ்வு, மூதூர் சோனையூர் கல்லூரி, ஶ்ரீ ஹன்பஹா வித்தியாலயம், இலங்குதுறை முகத்துவாரம் இந்து கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இடம்பெற்றது. இதில் 1000 மேற்பட்ட மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.

கட்டார் அரசாங்கத்தினால் இருதய மற்றும் சுவாச நோயாளிகளுக்காக 120 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு

நாட்டின் இதய மற்றும் சுவாச நோய்கள் தொடர்பான நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதற்காக பயன்படுத்தப்படும் ரூபா 120 மில்லியனுக்கும் அதிகமான பெறுமதியான அத்தியாவசிய மருந்துத் தொகை ஒன்றை கட்டார் நாட்டு அரசாங்கம் சுகாதார அமைச்சுக்கு நேற்று (15) அன்பளிப்புச் செய்தது. இந்த மருந்துத் தொகை கட்டார் நாட்டின் இலங்கைக்கான பணிப்பாளர் மஹ்மூத் அபு கலிபா வினால் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்திய ரமேஷ் பத்திரன விற்கு மருந்து வழங்கப் பிரிவில் வைத்து கையளிக்கப்பட்டது. இந்த மருந்துகளை பெற்றுக்கொண்ட … Read more

“ரண்தொர” பாரம்பரிய உரிமைப் பத்திரம் வழங்கும் நிகழ்வு நாளை…

கொழும்பு மாவட்டத்தில் குறைந்த வருமானம் பெறும் வீட்டு உரிமையாளர்களுக்கு (இலவச வீட்டு உரிமைப்பத்திரம்) “ரண்தொர” பாரம்பரிய உரிமைப்பத்திரம் வழங்கும் நிகழ்ச்சி நாளை (ஜூலை 17 ஆம் திகதி) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் திரு.W.S.சத்யானந்த தெரிவித்தார். நேற்று முன்தினம் (15) அரசாங்க தகவல் திணைக்களத்தில் “ரண்தொர” பாரம்பரிய உரிமைப் பத்திரங்கள் வழங்கும் நிகழ்வு தொடர்பாக நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். … Read more

சுரக்ஷா மாணவர் காப்புறுதி

சுரக்க்ஷா மாணவர் காப்புறுதியின் கீழ் வருடாந்தம் 180,000 ரூபாவுக்கு குறைவான வருமானம் குடும்ப மாணவர்களின் பெற்றோரின் இறப்பு, நன்மைகள் ‘அஸ்வெசும’ நலன்புரி நன்மைகளைப் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்குவதற்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது, நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி மற்றும் கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த ஒருங்கிணைந்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 03 ஆண்டு காலத்துக்கு சுரக்ஷா மாணவர் காப்புறுதிக்கான ஒப்பந்தத்தை ஸ்ரீலங்கா இன்சூரன்ஸ் கோப்பரேஷன் … Read more

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டம் இரண்டாம் கட்டமாக

விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் மேலும் 03 பிரதேச செயலகப் பிரிவுகளைத் தெரிவு செய்து விவசாய நவீனமயமாக்கல் கருத்திட்டத்தை மேற்கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுக்கும் 10 மில்லியன் ரூபாய்கள் வீதம் 75 பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு 2024 ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தின் நிதியொதுக்கீட்டிலிருந்து 750 மில்லியன் ரூபாய்களைப் பயன்படுத்தி விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை அமுல்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பாக 15.07.2024 … Read more

இலங்கையின் சுதேச மருத்துவ தேசிய கொள்கையை 2024 முதல் 2034 வரை நடைமுறைப்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மற்றும் சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி ஆகியோரின் ஆதரவுடனும் அர்ப்பணிப்புடனும் நீண்ட கால முயற்சியின் பின்னர் 2024-2034 காலப்பகுதியில் சுதேச மருத்துவம் தொடர்பான தேசிய கொள்கையை செயற்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (16) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு … Read more

அரச நிதி முகாமைத்துவம் மற்றும் இலங்கையின் எதிர்காலம் குறித்து நாடளாவிய ரீதியில் பத்திரிகைக் கட்டுரைப் போட்டி

நிதி முகாமைத்துவ சட்டமூலங்கள் மற்றும் பொருளாதார மாற்ற சட்டமூலங்கள் குறித்து பாடசாலை மாணவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் பத்திரிகை கட்டுரைப் போட்டியொன்றை நடத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. “முறையான அரச நிதி முகாமைத்துவம் மற்றும் நிலையான பொருளாதார மாற்றத்தின் மூலம் 2048 ஆம் ஆண்டளவில் வளர்ச்சியடைந்த எனது நாடு” என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படும் இந்த தேசிய அளவிலான பத்திரிகைக் கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் மற்றும் வெற்றி பெற்ற பாடசாலைகள் என்பவற்றுக்குப் பெறுமதி வாய்ந்த பரிசுகள் … Read more

கம்பஹாவில் 67 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு சாகல ரத்நாயக்க தலைமையில்

கம்பஹா மாவட்டத்தின் பாடசாலை விளையாட்டை மேம்படுத்தும் நோக்கில் 67 பாடசாலைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்கவின் தலைமையில் நேற்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவுக்கமைய, சாகல ரத்நாயக்கவின் வழிகாட்டலின் கீழ், Youth vision 2048 அமைப்பு மற்றும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் இந்த வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு கருத்து தெரிவித்த சாகல ரத்நாயக்க, … Read more

கோறளைப்பற்று கும்புறுமூலை கடற்கரை வீதியானது 275 மில்லியன் செலவில் காபெட் வீதியாக செப்பனிடும் பணிகள் ஆரம்பம்…

கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கும்புறுமூலை கடற்கரை வீதியானது 275 மில்லியன் செலவில் காபெட் வீதியாக செப்பனிடும் பணிகளை, கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான சிவ. சந்திரகாந்தன் அவர்களின் அழைப்பை ஏற்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கான இரண்டு நாள் விசேட விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் இராஜாங்க அமைச்சர் இணைந்து ஆரம்பித்து வைத்திருந்தனர். குறித்த பிரதேசத்தில் மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறைக்கு … Read more

இராணுவ தளபதியின் தலைமையில் அம்பாறை – தீகவாப்பிய தூபி நிகழ்வு

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி ஜானகி லியனகே ஆகியோர் தீகவாப்பிய தூபியில் புத்தரின் சர்வ ஞானப்பெக்கிஷத்தை ஸ்தாபிக்கும் மங்களகரமான நிகழ்வில் பங்குப்பற்றினர். மதிப்பிற்குரிய பிரமுகர்கள் மற்றும் பக்திமான்கள் கலந்து கொண்ட இந்த புனிதமான நிகழ்வு, இலங்கையின் மத பாரம்பரியத்தின் ஆழமான சான்றாகும். பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன (ஓய்வு) டப்ளியூடப்ளியூவீ ஆர்டப்ளியூபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ எம்பில் … Read more