வரலாற்று சிறப்பு மிக்க லாஹுகல நீலகிரி தூபியில் புனித நினைவுச்சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வு

லாஹுகலவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க நீலகிரி தூபியில் புனித நினைவுச் சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்கள் என்பவற்றை வைக்கும் நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் தலைமையில் நேற்று (ஜூலை 15) காலை நடைபெற்றது.மகா சங்கத்தினரின் பிரித் பாராயணம் மற்றும் ஆசீர்வாதத்திற்கு மத்தியில் வரலாற்று சிறப்புமிக்க தூபியின் மையத்திலும் எட்டு மூலைகளிலும் புனித நினைவுச் சின்னங்கள் மற்றும் பொக்கிஷங்கள் வைக்கப்பட்டன. நா உயன மடத்தின் பிரதம விஹாராதிபதி வண. அங்குல்கமுவே ஆரியநந்த தேரர் இதன்போது விசேட சொற்பொழிவு … Read more

கிளிநொச்சி பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர்  விஜயம்

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கவுள்ள நான்கு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் நோக்கில் முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம  வடக்கிற்கான விஜயமொன்றை  மேற்கொண்டிருந்தார். இதன் ஓர் அங்கமாக கிளிநொச்சி மாவட்டத்தின் பரந்தன் இரசாயன தொழிற்சாலைக்கு முதலீட்டு மேம்பாடு இராஜாங்க அமைச்சர் திலும் அமுணுகம நேற்று (15) விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இதன்போது  நாட்டில் நிலவிய கடந்தகால அசாதாரண நிலையினால் அழிவடைந்து, நீண்ட காலமாக புணர்நிர்மாண பணிகள் எதுவும் செய்யப்படாத நிலையிலுள்ள பரந்தன் இரசாயன தொழிற்சாலை மற்றும் தொழிற்சாலைக்கு … Read more

இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும்

  இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024  ஜூலை 16ஆம் திகதிக்கான  பொதுவான வானிலை முன்னறிவிப்பு   2024 ஜூலை 15ஆம் திகதி நண்பகல் 12.00 மணிக்கு வெளியிடப்பட்டது.   இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை காரணமாக நாடு முழுவதும் தற்போது நிலவும் காற்று நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை … Read more

மக்கள் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை நாட்டில் உருவாக்குவதுதான் உண்மையான புரட்சியாகும்

மாறுபட்ட அரசியல் கருத்துக்கள் இருந்தாலும் நாட்டுக்காக ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசியலை ஒதுக்கி உழைத்ததால் பல சாதனைகளை நாட்டுக்கு கொடுக்க முடிந்தது – மகாவலி எச். மற்றும் ஹுருலுவெவ வலயங்களில் 9 மகாவலி பிரிவுகளில் 4,012 பேருக்கு நிரந்தர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி தெரிவிப்பு. “மக்களைக் கொல்வதோ வீடுகளை எரிப்பதோ உண்மையான புரட்சி கிடையாது. மாறாக நாட்டில் மக்கள் பெருமையுடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதே உண்மையான புரட்சி” என … Read more

வரலாற்று முக்கியமான தீகவாபி தூபியில் நினைவுச் சின்னங்கள், பொக்கிஷங்களை வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபி தூபிக்குள் புனித தாது, பொக்கிஷங்கள் என்பவற்றை வைக்கும் நிகழ்வு நேற்று (14) காலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பங்களிப்புடன் நடைபெற்றது. இலங்கையின் நான்காவது பெரிய தூபிகளில் ஒன்றான தீகவாபியை புனரமைக்கும் பணிகள் 2020 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது. மகா சங்கத்தினரின் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் தீகவாபி தூபியில் புனித தாது வைக்கப்பட்டதோடு அந்த சமயத்தில் விமானப் படையினர் மலர் தூவி மலர் அஞ்சலி செலுத்தினர். புனித … Read more

ஸ்பெயின்(Spain) மற்றும் இங்கிலாந்திற்கிடையிலான யூரோ (Euro) கிண்ண தொடரில் இங்கிலாந்தை வீழ்த்தி ஸ்பெயின் 4வது முறையாக யூரோ பட்டத்தை வென்றுள்ளது

இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியை 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் அணி வீழ்த்தியது. ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பை சேர்ந்த நாடுகள் கலந்துகொள்ளும் யூரோ கிண்ண கால்பந்து தொடர் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. அதற்கமைய, கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி ஆரம்பமான இந்த தொடரானது, நேற்றுடன்(14) முடிவுக்கு வந்துள்ளது. 24 அணிகள் கலந்து கொள்ளும் யூரோ கால்பந்து தொடரிலிருந்து இறுதிப்போட்டிக்கு ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகள் தகுதிப்பெற்றன. இறுதிப்போட்டியானது பெர்லின் … Read more

பாடசாலை ரக்பி வீரர்களுக்கான காப்குறுதி

வரலாற்றில் முதன்முறையாக இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட மற்றும் 16 வயதுக்குட்பட்ட பாடசாலை ரக்பி வீரர்களுக்கு அண்மையில் (13) கொழும்பு ஹெவ்லொக்ஸ் மைதானத்தில் காப்புறுதித் திட்டம் ஒன்று வழங்கப்பட்டது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் கருத்தின்படி இது மேற்கொள்ளப்பட்டதுடன், இந்த காப்புறுதி இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தின் ஊடாக செயல்படுத்தப்படுகிறது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நீண்டகால அர்ப்பணிப்பின் அடிப்படையில் அமைச்சரவைப் பத்திரத்தின் ஊடாக கொழும்பு இசிபதன வித்தியாலயத்திற்கு கையளிக்கப்பட்ட ஹெவ்லொக் டவுன் ஹென்றி பெட்ரிஸ் விளையாட்டு மைதானத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் … Read more

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் பிரகாரமே “உறுமய” திட்டத்தின் கீழ் மக்களுக்கு நில உரிமை வழங்கப்படுகிறது

இது 2002, 2003 ஆம் ஆண்டுகளில் செயல்படுத்தவிருந்த திட்டமாகும். நீதிமன்றத்தினால் அன்று இந்த திட்டத்தை நிறுத்தியிருக்காவிட்டால் 20 ஆண்டுகளுக்கு முன்பு மக்களுக்கு நிரந்தர காணி உறுதி கிடைத்திருக்கும் – மஹியங்கனையில் ஜனாதிபதி தெரிவிப்பு. ‘உறுமய’ வேலைத் திட்டம் 2002ஆம், 2003 ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் எனவும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அதனை நிறுத்த வேண்டி ஏற்பட்டதாகவும் அன்று அந்தத் திட்டத்தை செயல்படுத்தியிருந்தால், 20 வருடங்களுக்கு முன்னர் மக்களுக்கு நிரந்தர காணி உறுதி கிடைத்திருக்கும் … Read more

சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி, நாட்டைப் பற்றிச் சிந்திக்கும் அரசியல் கலாச்சாரம் அவசியம்

நாட்டை முன்னேற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை சிதைக்கவே இன்று பலரும் முயல்கின்றனர்- சட்டத்தரணிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. பொருளாதார யுத்தத்தில் வெற்றி பெற்ற ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிக்க வேண்டும் – அமைச்சர் அலி சப்ரி. ஜனாதிபதியின் தலைமைத்துவம் எதிர்காலத்திலும் அவசியம்- சட்டத்தரணிகள் தெரிவிப்பு. சம்பிரதாய அரசியலில் இருந்து விலகி நாட்டைப் பற்றி சிந்திக்கும் அரசியல் கலாச்சாரம் நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியமானது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் … Read more

இந்த நாட்களில் சிறுவர்களுக்கு மத்தியில் பரவிவரும் காய்ச்சலுடன் கூடிய இருமல்.. – விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா.

இந்த நாட்களில் சிறார்களுக்கு சளி மற்றும் இருமல் அதிகரித்து வருவதுடன், இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்று கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார். அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ செய்தி இணையத்தளத்திற்கு இன்று (15) கருத்து தெரிவிக்கும் போதே அவர்; மேற்கண்டவாறு தெரிவித்தார். குளிர் நாடுகளில் இன்புளுவன்சா நோய்க்கு எதிரான தடுப்பூசி வழங்கப்படுகிறது. 02 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள்;, கர்ப்பிணித் தாய்மார்கள், நாட்பட்ட … Read more