ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்களின் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றினார்

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்கள் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து சிநேகபூர்வமாக உரையாடினர். மிகவும் வேலைப்பளுவில் இருந்த போதிலும், ஜனாதிபதி அந்த மாணவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவர்களின் கல்விப் பணிகள் குறித்து கேட்டறிந்ததோடு, மாணவர்கள் தமது கல்லூரியின் சில குறைபாடுகள் குறித்து ஜனாதிபதியிடம் தெரிவித்தனர். பாடசாலைக்கு குடிநீர் வசதிகளை வழங்கும் நீராதாரம் மிகவும் உப்புத்தன்மை கொண்டதாக காணப்படுவதால், தற்போது கடற்படையினரால் நிர்மாணிக்கப்பட்டு வரும் ‘RO Plant’ கட்டமைப்பை துரிதமாக நிர்மாணித்து தருமாறு மாணவர்கள் … Read more

மாணவர்களின் எதிர்காலம் கருதி செயற்படும் ஜனாதிபதிக்கு எப்போதும் நன்றியுள்ளவர்களாக செயற்படவேண்டும் – வட மாகாண ஆளுநர்

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைய, நாட்டிலுள்ள வறிய குடும்பங்களை சேர்ந்த பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் தேசிய திட்டத்தின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான நிகழ்வு (14/07/2024) நேற்று நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள இரண்டு கல்வி வலயங்களிலும் இருந்து தெரிவுசெய்யப்பட 662 மாணவர்களுக்கு இதன்போது புலமைப்பரிசில் நிதிக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் மேலதிக சிரேஷ்ட செயலாளர் சமன் பந்துசேன, வடக்கு மாகாண பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், கிளிநொச்சி மாவட்ட … Read more

சுயநல அரசியல்வாதிகள் சிலர் மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் – கடற்றொழில் அமைச்சர்

சுயநல அரசியல்வாதிகள் சிலர், தமது அரசியல் நலன்களுக்காக மக்களை தவறான திசையிலேயே வழி நடத்த முனைகின்றனர் என்று சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் கல்விப் புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வை கிளிநொச்சி பாரதி மண்டபத்தில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார் . பொருளாதார நெருக்கடிகளில் இருந்து நாடு முழுபையாக விடுபடாத போதிலும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிகூடிய … Read more

150 கிலோவோட் மின்சார உற்பத்திக்கான சூரிய சக்தி மற்றும் கணினி கட்டமைப்பை ஜனாதிபதி திறந்து வைத்தார்

வரலாற்று நாகரிக அம்சங்களை கொண்டு அநுராதபுரத்தை மீண்டும் உலக பிரசித்தமான நகரமாக மாற்றுவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். ஜய ஸ்ரீ மகா போதிய மற்றும் அட்டமஸ்தான வளாகங்களுக்கு சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்க அரசாங்கம் ஒத்துழைக்கும் – ஜனாதிபதி. அனுராதபுரம் புனித நகருக்கு வருகை தந்த மக்களின் பிரச்சினைகளையும் ஜனாதிபதி கேட்டிறிந்துகொண்டார்.   வரலாற்றில் பிரசித்தி பெற்ற வணிக மற்றும் பொருளாதார மையமாக அநுராதபுர நகரத்தை மீண்டும் உலகப் பிரசித்தமான நகரமாக மாறுவதற்குத் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுமென ஜனாதிபதி … Read more

பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பொருத்தமான வலுவான பொருளாதார முறைமை நாட்டுக்குள் கட்டியெழுப்பப்படும்

தேசிய அளவில் சிந்தித்துச் செயல்படக்கூடிய அரசியல் முறைமை நாட்டுக்குத் தேவை – ஜனாதிபதி. பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வலுவான பொருளாதார முறைமையொன்று கட்டியெழுப்படும் என்றும், அந்த முறைமை குறுகிய காலத்திற்கானதாக அன்றி நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளாதாரம் சரிவடையாமல் பாதுகாக்கும் வகையில் வலுவாக கட்டமைக்கப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.   அநுராதபுரம் மத்திய மகா வித்தியாலயத்தில் நேற்று (13) நடைபெற்ற நவீன வசதிகளுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீச்சல் தடாகத்தை மாணவர்களுக்கு கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு … Read more

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு திடீர் விஜயம்!!

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டு புகையிரத நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்ட போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்த்தன புகையிரத நிலைய அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதுடன், புகையிரத நிலையத்தின் நிலவும் குறைபாடுகளை பார்வையிட்டதுடன், அவற்றினை நிவர்த்திப்பது தொடர்பாகவும் கலந்துரையாடலில் ஈடுபட்டார். குறித்த விஜயத்தின் போது கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், உட்பட அமைச்சரின் பணிக்குளாத்தினர் என பலரும் … Read more

அஸ்வெசும ஊடாக பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு 12 லட்சம் குடும்பங்களை வலுப்படுத்த பாரியளவு வேலைத்திட்டம்

அஸ்வெசும” நலன்புரி பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்தின் கலந்துரையாடலானது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் அவர்களின் பங்குபற்றலுடன் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் நேற்று (13) மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. எமது நாடானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடாகும். இருப்பினும் மூவின மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒரு மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்றது. என்னதான் யுத்தம் காணப்பட்டாலும் மூவின மக்களிடையே … Read more

கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தை புனரமைக்கு நடவடிக்கை.. 

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்தின் நிலைமைகளை பார்வையிட்டார். கிளிநொச்சி மாவட்ட ஊடக மத்திய நிலையத்திற்காக வழங்கப்பட்டுள்ள கட்டிடத்தின் நிலைமைகளை பார்வையிட்ட தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அவர்கள் அதனை சீர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட பதில் அரசாங்க அதிபர் S.முரளிதரன் அவர்களுடனும் மாவட்ட ஊடகவியலாளர்களுடனும் கலந்துரையாடலினை மேற்கொண்டிருந்தார்.   தொடர்ந்து அடையாளப்படுத்தப்பட்ட முதன்மை வேலைகளுக்கான மதிப்பீட்டினை வழங்குமாறும் அதற்குரிய … Read more

பிங்கிரிய ஏற்றுமதி செயலாக்க வலயத்தின் இரண்டாம், மூன்றாம் கட்ட அபிவிருத்தி பணிகள் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

ஐந்து துறைகளின் கீழ் பிங்கிரிய பொருளாதார வலயத்தை அபிவிருத்தி செய்ய திட்டம். பொருளாதார வலயம் முழுமையாக கட்டமைக்கப்பட்டதன் பின்னர் 2600 மில்லியன் டொலர் வருமானம். புதிதாக 75,000 வேலைவாய்ப்புகள்.   • நாட்டின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் பொருளாதாரத்தைப் பலப்படுத்தி புதிய முதலீடுகளை கொண்டு வருவோம்.   • மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒரே பொருளாதார முறையுடன் முன்னோக்கிச் செல்ல வேண்டும் – ஜனாதிபதி   • ஜனாதிபதியின் சரியான பொருளாதார வேலைத் திட்டத்தினால் … Read more

இராணுவத்தினருக்கு வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கு நிபந்தனையின்றி காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டம்

தெளிவுபடுத்தும் நடமாடும் சேவைகள்.   • சாலியபுர கஜபா படைப்பிரிவு நிலையம் ஜூலை 17.   • குருநாகல் விஜயபா படைப்பிரிவு நிலையம் ஜூலை 19.   • களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரி ஜூலை 23. நாட்டின் இறைமையைப் பாதுகாக்க உயிர்த் தியாகம் செய்த, யுத்த செயற்பாடுகளில் கடமையாற்றிய முப்படையினர், இலங்கைப் பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புப் படையில் ஊனமுற்ற வீரர்களுக்கும், உயிர்த் தியாகம் செய்தவர்களின் குடும்பத்தாருக்கும் வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அரச காணிகளை நிபந்தனையின்றியும் கட்டணங்கள் … Read more