“உறுமய” வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்ட மக்களுக்காக 41,960 காணி உறுதிப் பத்திரங்கள்

மொனராகலை மாவட்டத்தில் அதிக காணி உறுதிப் பத்திரங்களை வழங்கும் பிரதேச செயலகப் பிரிவில் குளங்களைப் புனரமைக்க 25 மில்லியன் ரூபா. விவசாயிகளை முன்னேற்றுவதன் மூலம் நாட்டை அபிவிருத்தியை நோக்கிக்கொண்டு செல்வதே இதன் நோக்கமாகும். உடவலவ, மொனராகலை, அம்பாறை மற்றும் மகாவலி “சீ ” வலயங்கள் ஒன்றிணைக்கப்பட்டு உலர் வலயத்தின் பாரிய விவசாய வலயமாக அபிவிருத்தி செய்யப்படும்- ஜனாதிபதி. முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்கள் வழங்கும் ‘உறுமய’ வேலைத் திட்டத்தின் கீழ் மொனராகலை மாவட்டத்தில் அதிகளவு உறுதிகளை … Read more

கந்தானை சென். செபஸதியன் தேவாலயத்தின் அபிவிருத்தி பணிகள் குறித்து ஜனாதிபதி நேரில் ஆராய்வு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (29) பிற்பகல் கந்தானை சென். செபஸ்தியன் தேவாலயத்திற்குச் சென்று அதன் அபிவிருத்தி பணிகள் குறித்த நேரில் ஆராய்ந்தார். கந்தானை சென். செபஸ்தியன் தேவாலயம் பெருமளவான கிறிஸ்தவ மக்கள் வரும் தளமாக காணப்படுவதோடு, இதன் திருவிழா காலத்திலும் நாடளாவிய ரீதியிலிருந்து இலட்சக்கணக்கிலான மக்கள் வருகை தருவர்.   தேவாலயத்தின் சுற்று வட்டாரத்தில் நிறையும் தண்ணீரை அருகிலுள்ள வயலுக்கு அனுப்புவதற்கான திட்டம் குறித்த கோரிக்கைகள் நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதற்காக 6 … Read more

வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானம் குறித்து விவாதிக்க பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானம்

வெளிநாட்டு படுகடன் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை ஜூலை 2 மற்றும் 3 ஆம் திகதிகளில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன தெரிவித்தார். சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையிலும், பிரதமர் கௌரவ தினேஷ் குணவர்த்தன அவர்களின் பங்கேற்புடனும் (28) கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.   இதற்கமைய ஜூலை 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை … Read more

இலங்கையின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப முடியாது போயிருந்தால் இலங்கை மற்றுமொரு கென்யாவாக மாறியிருக்கும்

காலநிலை அனர்த்தங்களுக்கு ஈடுகொடுக்கும் பொருளாதார வலுவற்ற ஆப்பிரிக்க பிராந்திய நாடுகளின் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இவ்வாறான நிவாரணங்களை எதிர்பார்க்காமல் உள்நாட்டுக் கடனை முகாமைத்துவம் செய்துக்கொண்டு முன்னோக்கி பயணிப்பதற்கான இயலுமையும் திறனும் இலங்கைக்கு உள்ளது. காலநிலை மாற்றத்தை கையாள்வதற்கான பிராந்திய தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள இலங்கை தயாராக உள்ளது – ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கல் விழா – 2024 இல் ஜனாதிபதி தெரிவிப்பு. பொருளாதாரப் பிரச்சினை காரணமாக கென்யா பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளது. அதனால் கொலைகளும் … Read more

வடக்கையும் பொருளாதாரத்தில் மேம்பட்ட மாகாணமாக மாற்றுவதே ஆசை

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் இணைத் தலைவர்களான வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினரான குலசிங்கம் திலீபன் ஆகியோரின் தலைமையில்  (27/06/2024 ) நடைபெற்ற போதே வடக்கு மாகாண ஆளுநர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் வழிகாட்டுதலுக்கு அமைய வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் கருத்து தெரிவித்தார்.    தொழில் அற்றோர் பிரச்சினைக்கு முன்னெடுக்கப்பட்டுள்ள தீர்வு திட்டங்கள் தொடர்பிலும், வாழ்வாதார உதவி திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட்டார்.    ஏனைய மாகாணங்களைப் போல … Read more

ஜனாதிபதி சுற்றாடல்  விருதுகள் – 2024

சுற்றாடல் அமைச்சின் வழிகாட்டலின் கீழ் மத்திய சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டு வழங்கப்படும் ஜனாதிபதி சுற்றாடல் விருதுகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று (28)  இடம்பெற்றது. இதன் போது சிறந்த அரசு நிறுவனங்களுக்கான சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பிரிவின் கீழ் தேசிய வர்த்தக முகாமைத்துவ பாடசாலை (NSBM) எனப்படும் பசுமை பல்கலைக்கழகம் நிலைப்பேறான சுற்றாடல் பாதுகாப்பு தொடர்பான பசுமை நட்பு செயற்பாட்டிற்காக தங்க விருதினைப் பெற்றுக் கொண்டது.   … Read more

மட்டக்களிப்பில் வெல்வோம் ஸ்ரீ லங்கா…

நாடளாவிய ரீதியில் இடம் பெற்று வரும்  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெறும் வெல்வோம் ஸ்ரீலங்கா வேலை திட்டம்  மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (28) நடைபெற்றது. தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் புலம் பெயர் தொழிலாளர்களை கௌரவிக்கும் முகமாக அவர்களின் பிள்ளைகளுக்கு  பெறுமதியான கற்றல் உபகரணங்கள் புத்தகப்பைகள், காசோலைகள் மற்றும் ஸ்மார்ட் பலகை என்பன  வழங்கி வைக்கப்பட்டன. புராதன காலத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டம் … Read more

மட்டக்களப்பில் அமைச்சர் மனூஷ நாணயக்கார இளைஞர் யுவதிகளுடன் கலந்துரையாடல்

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்கார தலைமையில் வெல்வோம் ஶ்ரீ லங்கா நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் யூர்த் நிகழ்வு  இன்று (29) மட்டக்களப்பு இந்து கல்லூரி மைதானத்தில் மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்றது. இளைஞர் யுவர்களை வேலை வாய்ப்பிற்காக தயார்படுத்தும் முகமாக சிறந்த தொழில் இலக்கை அமைத்துக் கொள்ளுதல், தொழில் இலக்கை அடைவதற்கான திறன்களை வளர்த்துக் கொள்ளுதல் அதற்காக  இலங்கை மற்றும் வெளிநாட்டில் உள்ள வாய்ப்புக்களை பயன்படுத்தி ஸ்மாட் … Read more

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் எழுதப்பட்ட நூல் ஜனாதிபதி தலைமையில் வௌியீடு

• யுத்த சவால்களையும் வெற்றிகொண்டு, அரசியல் களத்தில் பல்வேறு சவால்களை சந்தித்த சரத் பொன்சேகாவால் எதிர்காலத்தில் நாட்டுக்காக பாரிய பணிகளை ஆற்ற முடியும். முப்பது வருடகால யுத்தத்தை நிறைவு செய்ய சிறந்த தலைமைத்துவத்தை வழங்கிய முன்னாள் இராணுவத் தளபதியும், பாராளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் “இராணுவ தளபதி தேசத்துக்கு வழங்கிய வாக்குறுதி – இந்த யுத்தம் அடுத்த தளபதி வரையில் நீடிக்க இடமளியேன்” என்ற தலைப்பில் எழுதப்பட்ட நூல் வெளியீட்டு விழா ஜனாதிபதி ரணில் … Read more

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நிலைபேற்றுத் தன்மை காரணமாக, இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும்

இருதரப்பு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு செயல்முறை வெற்றியடைவதன் மூலம் இலங்கைக்கு சுமார் 17 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நன்மை கிடைக்கும் என வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார். அத்துடன், சர்வதேச பிணைமுறிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை வெற்றியடையச் செய்வதற்கு இந்நிலைமை உதவும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.   ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் அலி சப்ரி இதனைத் தெரிவித்தார்.   இங்கு மேலும் கருத்துத் … Read more