உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் இன்று (04) ஆரம்பம்

அசாதாரண காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த 2024 கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர் தரப் பரீட்சையின் இரண்டாம் கட்டம் இன்று (04) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி இன்றிலிருந்து (04) டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வரை இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்ட நேர அட்டவணைக்கு இணங்க பரீட்சைகள் நடைபெறும். பரீட்சைகள் இடம்பெறாத தினங்களுக்காக டிசம்பர் 21ஆம் திகதி மற்றும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை பரீட்சைகள் நடைபெறும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் … Read more

ஜனாதிபதி மற்றும் உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளருக்கு இடையில் சந்திப்பு

உலகவங்கிஅரசாங்கத்தின்Clean Sri Lanka திட்டத்துக்கு உதவியளிப்பதாக உறுதி அரசாங்கத்தின் Clean Sri Lanka வேலைத்திட்டத்திற்கு உலக வங்கியின் உதவிகள் வழங்கப்படுமென உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பரமேஷ்வரன் ஐயர் (Parameswaran Iyer) தெரிவித்தார். உலக வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர் இன்று (04) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடியபோதே இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி தலைமையிலான புதிய அரசாங்கத்துக்கு வாழ்த்து தெரிவித்த உலக வங்கியின் நிறைவேற்றுப் பணிப்பாளர், உலக வங்கியின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படும் அனைத்துத் திட்டங்களும் … Read more

பேச்சு சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை – நீதி அமைச்சர்

பேச்சு சுதந்திரம் அவசியமானது என்றும், அரசாங்கம் அதனை உறுதிப்படுத்துவதற்கு எப்பொழுதும் செயற்படும் எனவும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்கார இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஜனாதிபதியினால் கடந்த நவம்பர் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் முன் வைக்கப்பட்ட அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் தொடர்பான விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுதல் மற்றும் நாட்டின் வளங்களை அழித்த ஊழல்வாதிகளுக்குத் … Read more

பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியத்தின் தலைவராக அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் அவர்கள் தெரிவு

பொதுமக்களின் வாக்குகளால் கணிசமான சதவீத பெண்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளமை சிறந்த வெற்றியாகும் – கௌரவ பிரதமர் தெரிவிப்பு இந்நாட்டிலுள்ள சகல பெண்களுக்கும் பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பு – ஒன்றியத்தின் தலைவர் தெரிவிப்பு பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் பிரதமர் கௌரவ கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் நேற்று (03) முதல் தடவையாகப் பாராளுமன்றத்தில் கூடியது. இதில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஹேமாலி வீரசேகர, பாராளுமன்ற செயலாளர் நாயகமும், … Read more

அடுத்த வருடம் சுற்றுலாப் பயணிகளின் வருகையை மூன்று மில்லியனாக அதிகரிக்கத் திட்டம்

அடுத்த வருடம் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை மூன்று மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் சமிந்த ரணசிங்க இன்று (04) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கை பிரகடணத்தின் மீதான விவாதத்தின் இரண்டாம் நாளான இன்று கலந்துகொண்டு உரையாற்றிய பிரதி அமைச்சர், இதன் மூலம் ஐந்து பில்லியன் டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். எதிர்காலத்தில், Nation Branding campaign என்ற பெயரில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் 2030 ஆம் ஆண்டளவில் … Read more

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகம், ஊடகக் கற்கைகள் பீடமாக மாற்றம்

கொழும்புப் பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை ஊடகக் கற்கைகள் பீடமாக மாற்றுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அது குறித்த வர்த்தமாணி அறிவித்தல் பின்வருமாறு..

முகம்மது சாலி நழீம் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம்

கௌரவ முகம்மது சாலி நழீம் அவர்கள் பத்தாவது பாராளுமன்றத்தின் உறுப்பினராக சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல முன்னிலையில் இன்று (03) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் உறுப்பினராக கௌரவ முகம்மது சாலி நழீம் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த நவம்பர் 21 ஆம் திகதி பத்தாவது பாராளுமன்றத்தின் … Read more

டெங்குக் கட்டுப்பாட்டிற்கு சுகாதார அமைச்சினால் வேலைத் திட்டமொன்று ஆரம்பம் – அமைச்சரவைப் பேச்சாளர்

வெள்ள நீர் முழுமையாக வற்றியதும் டெங்குக் கட்டுப்பாட்டிற்கான வேலைத் திட்டமொன்றை சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (03) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். டெங்கு நோய் பரவும் அபாயம் தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளதாகவும், அது குறித்து அமைச்சு நடவடிக்கை எடுக்கதாகவுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், நிலையான வேலைத் … Read more

அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை

அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளை (04) பி.ப 9.30 மணி வரை நடத்துவதற்குக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிலவிய மோசமான காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்த நிலைமைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நாளைய தினம் (04) பி.ப 5.30 மணி முதல் பி.ப 9.30 மணிவரை நடத்துவதற்கு சபாநாயகர் கௌரவ கலாநிதி அசோக ரன்வல தலைமையில் இன்று (03) நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் … Read more